சென்னை: அரசாங்க ஆவணங்களில் ஆதார் கார்டு முக்கியமான ஆவணம் ஆகும். எனவே, உங்களுடைய ஆதார் கார்டில் இருக்கும் பெயர், முகவரி, மொபைல் நம்பர் போன்ற அனைத்து விவரங்களும் சரியானதாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் நீங்கள் உடனே அப்டேட் செய்து அதை மாற்ற வேண்டும். அதிலும் குறிப்பாக உங்களுடைய மொபைல் நம்பர் சரியானதாக இருக்க வேண்டும். இந்தப் பதிவில் ஆதார் கார்டில் மொபைல் நம்பரை மாற்றுவது எப்படி என்பதைப் பார்ப்போம்.
ஆதார் கார்டு அரசாங்க உதவித்தொகை பெறுவது முதல் பேங்க் பரிவர்த்தனை வரை அனைத்திற்கும் தேவைப்படும் முக்கிய ஆவணம். எனவே, உங்களுடைய மொபைல் நம்பரை கட்டாயம் உங்கள் ஆதார் உடன் இணைத்து இருக்க வேண்டும். ஏனெனில், சில நேரங்களில் உங்களுக்கு OTP அனுப்பப்படலாம் மற்றும் mAadhaar செயலியைப் பயன்படுத்துவதற்கும், உங்களுடைய மொபைல் நம்பர் ஆதார் கார்டில் சரியானதாக இருக்க வேண்டும். உங்கள் பழைய மொபைல் நம்பர் செயலில் இல்லை என்றால், ஆதார் அட்டையில் புதிய மொபைல் நம்பரைக் கொண்டு, நீங்கள் புதுப்பிக்க வேண்டும்.

தற்போது UIDAI ஆன்லைனில் மொபைல் நம்பரை புதுப்பிக்கும் வசதியை நிறுத்தி உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். இதனை நீங்கள் ஆஃப்லைனில் மட்டுமே மாற்ற முடியும்.
ஆதார் அட்டையில் மொபைல் நம்பரை மாற்றுவது எப்படி?:
உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை மாற்ற விரும்பினால் பின்வரும் ஸ்டெப்ஸ்களைப் பின்பற்றவும்.
ஸ்டெப் 1: உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்திற்கு செல்லவும்.
ஸ்டெப் 2: பயோமெட்ரிக் வெரிஃபிகேஷன் முடிந்த பின்பு, ஆதார் திருத்தம் செய்வதற்கான படிவத்தைப் பெற்று சரியான விவரத்துடன் பூர்த்தி செய்யவும்.
ஸ்டெப் 3: அதன் பிறகு ரூ. 50 ரூபாய் சேவைக் கட்டணம் செலுத்தி, அந்தப் படிவத்தை நிர்வாகியிடம் சமர்ப்பிக்கவும்
ஸ்டெப் 4: ஆதார் புதுப்பிப்பது தொடர்பான URN நம்பரைக் கொண்ட ஒப்புகைச் சீட்டை பெறுவீர்கள். அதிலிருந்து 90 நாட்களுக்குள், உங்களுடைய ஆதாரில் மொபைல் நம்பர் புதுப்பிக்கப்படும். இதனை நீங்கள் UIDAI இணையதளத்திற்கு சென்று சரி பார்த்துக் கொள்ளலாம்.
ஆதார் அட்டையுடன் மொபைல் நம்பர் இணைக்கப்பட்டதா என்ற ஸ்டேட்டஸை எப்படி சரி பார்ப்பது என்று பார்ப்போம்.
ஸ்டெப் 1: UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்குச் சென்று "Check Aadhaar Status" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 2: நீங்கள் நேரடியாக கொடுக்கப்பட்டுள்ள https://myaadhaar.uidai.gov.in/CheckAadhaarStatus என்ற இணையதள முகவரிக்கும் செல்லலாம்.
ஸ்டெப் 3: இப்போது நீங்கள் ஆதார் திருத்த விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு உங்களுக்கு வழங்கப்பட்ட URN நம்பரை என்டர் செய்யவும். அதன் பிறகு கேப்ட்ச்சா குறியீட்டை கொடுத்து "Submit" செய்தால் உங்களுடைய மொபைல் நம்பர், ஆதார் உடன் இணைக்கப்பட்ட விவரங்களை நீங்கள் பார்க்கலாம்.
புதியதாக பேங்கில் அக்கவுண்ட் திறக்க ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் தேவைப்படலாம். அதேபோல, ஆதார் தொடர்பான எல்லாவற்றிற்கும் உங்களுடைய மொபைல் நம்பர் சரியானதாக இருக்க வேண்டும். குறிப்பாக mAadhaar செயலியில் நீங்கள் ஏதேனும் செயல்முறையை செய்யும்போது மொபைல் நம்பர் முக்கியம். ஏனெனில், உங்களுடைய ஆதார் கார்டில் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை வைத்து தான் நீங்கள் லாகின் செய்ய முடியும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications