சமீப காலமாக பல்வேறு மோசடி சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மோசடிக்காரர்கள் தனி நபரின் பாஸ்வேர்ட், OTP போன்ற விவரங்களை வைத்து கொள்ளையடிக்கின்றனர். எனவே கூகுள் நிறுவனம் மிகவும் பயனுள்ள அம்சம் ஒன்றை கொண்டுள்ளது. அதுதான் "பாஸ்வேர்ட் செக்அப்". இந்த பாஸ்வேர்ட் செக்கப் என்பது ஒரு இலவச டூல் ஆகும். இன்றைய சூழலில் பலரும் ஒரே மாதிரியான பாஸ்வேர்ட்களை தங்களுடைய பல்வேறு கணக்குகளுக்கு பயன்படுத்துகின்றனர்.
சிலர் எளிதில் கண்டுபிடிக்கக் கூடிய பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக "123456" போன்ற பாஸ்வேர்டுகளை அதிகம் மக்கள் பயன்படுத்துவதாக சமீபத்தில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக கூகுள் நிறுவனம் பாஸ்வேர்ட் செக் அப் என்ற அம்சத்தை கொண்டு வந்துள்ளது. இது உங்கள் பாஸ்வேர்டுகளின் ஸ்ட்ரென்த் என்ன? என்பதை அடையாளம் காண உதவும்.

டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில் கூகுள் செக்கப் டூல் உங்கள் கூகுள் கணக்குடன் நீங்கள் பயன்படுத்திய பாஸ்வேர்டை பிறர் பயன்படுத்துகின்றனரா? உங்களுடைய பாஸ்வோர்ட் பலவீனமானதாக உள்ளதா? அல்லது பல கணக்குகளுக்கு மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய உதவும். இதுபோன்ற பாஸ்வோர்ட்களை புதுப்பித்து வேறு பாஸ்வோர்டுக்கு மாற்றுவதன் மூலம் உங்களுடைய டிஜிட்டல் கணக்குகளைச் சிறப்பாக நிர்வகிக்க முடியும்.
ஆண்ட்ராய்டு சாதனங்களில் பாஸ்வோர்ட் செக்கப் டூலை எப்படி பயன்படுத்துவது?:
ஸ்டெப் 1: உங்களுடைய ஆண்ட்ராய்டு சாதனங்களில் செட்டிங்ஸை திறக்கவும்.
ஸ்டெப் 2: அதில் பாஸ்வோர்ட் மேனேஜர் என்பதை சர்ச் செய்யவும். காண்பிக்கப்படும் பாஸ்வேர்ட் மேனேஜர் என்பதில் பாஸ்வேர்ட் செக்அப் என்பதை கிளிக் செய்யவும். எந்தெந்த பாஸ்வேர்டுகளை நீங்கள் மாற்றியமைக்க வேண்டும் என்பது திரையில் காண்பிக்கப்படும்
கூகுள் குரோமில் பாஸ்வோர்ட் செக்கப் டூலை எப்படி பயன்படுத்துவது?:
ஸ்டெப் 1: உங்களுடைய ப்ரொபைலை கிளிக் செய்து பாஸ்வோர்ட் என்பதை தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 2: ஒருவேளை பாஸ்வேர்ட் ஐகான் காண்பிக்கப்படவில்லை என்றால் கூகுள் குரோமின் ரைட் சைடு கார்னரில் இருக்கும் 3 புள்ளிகளை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: "பாஸ்வேர்ட் அண்ட் ஆட்டோபில்" என்பதை தேர்ந்தெடுக்கவும். அதில் கூகுள் பாஸ்வேர்ட் மேனேஜர் என்று காண்பிக்கப்படும். அதை கிளிக் செய்தால் உங்கள் லெஃப்ட் சைடு கார்னரில் செக்கப் என்ற மெனு இருக்கும்.
ஸ்டெப் 4: அந்த மெனுவை கிளிக் செய்தால் எந்தெந்த பாஸ்வேர்டுகளை மாற்றி அமைக்க வேண்டும் என்பது திரையில் காண்பிக்கப்படும். வீக் பாஸ்வேர்டு என்று குறிப்பிடப்பட்டிருந்தால் அவற்றை மாற்றியமைப்பது நல்லது.


Click it and Unblock the Notifications