ஒரு நிலத்திற்கு அந்த நிலம் தொடர்பான ஆவணங்கள் மிகவும் முக்கியம். சமீப காலமாக நில மோசடிகள் அதிகளவில் நடந்து வருகிறது. எனவே இது போன்ற மோசடிகளைத் தடுக்கும் நோக்கில் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நிலம் தொடர்பான ஆவணங்களை ஆன்லைனில் தெரிந்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மக்கள் பாதுகாப்பாக நில உரிமையை சரிபார்க்க முடியும்.
தமிழக அரசு இன்டெகரேட்டட் லேண்ட் ரெக்கார்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டம் என்பதை அறிமுகம் செய்துள்ளது. இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசு கொண்டு வந்த ஒரு டிஜிட்டல் தளமாகும். https://eservices.tn.gov.in என்ற இந்த இணையதளத்தில் நீங்கள் டிஜிட்டல் முறையில் நிலம் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

பட்டா, சிட்டா போன்ற ஆவணங்களின் உண்மை நிலையை தெரிந்து கொள்ளலாம். இது ஒரு ஆவண பராமரிப்பு தளமாகும். இதில் நீங்கள் நில உரிமையாளர் யார் என்பதை கண்காணிக்கலாம். நிலத்தின் நிலை அதாவது தனியார் நிலமா? அரசு நிலமா? அல்லது பொது நிலமா? என்பதையும் தெரிந்து கொள்ளலாம். பெயர் மாற்றம் சட்டப்பூர்வ உரிமை மாற்றம் போன்றவற்றையும் எளிதாக கண்காணிக்க முடியும்.
பட்டா சிட்டா ஆன்லைன் சேவை: நீங்கள் உங்கள் பட்டா சிட்டாவை ஆன்லைனில் சரி பார்க்க முடியும். எனவே மோசடிகளை தடுக்கும் வகையில் டிஜிட்டல் கையொப்பம் இருப்பதால் யாராலும் இந்த ஆவணங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவோ அல்லது போலியாக உருவாக்கவோ முடியாது. அரசு தளத்திலிருந்து வரும் ஆவணங்கள் மட்டுமே உண்மையானவை. நீங்கள் பார்க்கும் பட்டா சிட்டா உண்மையானதுதானா என்பதை இந்த தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் உங்கள் நிலத்தின் பட்டா சிட்டா விவரங்களை ஆன்லைனில் சரி பார்த்துக் கொள்ளலாம்.
எண்ணும் எழுத்தும் திட்டம்: தற்போது நிலப் புள்ளி விவரங்களை சீரமைக்கும் வகையாக வட்டாட்சியர் அலுவலகங்கள் மூலம் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. ஆவணங்களின் மாற்றங்கள் சரியாக பதிவு செய்யப்படுகிறதா? என்பது இங்கு பரிசோதிக்கப்படும். போலியான ஆவணங்கள், போலியான பட்டாக்கள் போன்ற மோசடி வழிமுறைகளை தடுப்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ஆதார் லிங்கிங் மற்றும் மதிப்பீடு: நில உரிமையாளர்களுக்கு ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது மூலமாக நில உரிமை மாற்றங்களை போலியாக செய்வதைத் தடுக்க முடியும். சொத்துப்பதிவு செய்யும்போது ஆதார் தரவுகளுடன் அவற்றை இணைத்திருப்பது கட்டாயம்.
இ-சேவை மையங்கள் வழியாக பட்டா மாற்றம் சிட்டா சரிபார்ப்பு, வில்லங்கச் சான்றிதழ் போன்ற சேவைகளை பெற முடியும், அதற்கு ஆதார் கார்டு, நில விவரங்கள், பழைய பட்டா, சிட்டா, நிலவரி ரசீது, மின்சார கட்டண ரசீது போன்றவை தேவைப்படும்.
இதில் இன்னும் கூடுதலாக நிலத்தின் உரிமை சரிபார்க்கப்பட்டு அதற்கு ஸ்டார் ரேட்டிங் வழங்கப்பட உள்ளது நல்ல ரேட்டிங் இருந்தால் நிலம் வாங்கும் போது அந்த ரேட்டிங்கை வைத்தே அவற்றின் நம்பகத்தன்மையை மதிப்பீடு செய்யலாம். ஆக அரசு மேலே கூறப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களின் மூலம் நில மோசடிகளை தடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. மக்கள் நிலம் வாங்கும் முன்பு அல்லது விற்பனை செய்வதற்கு ஆயத்தம் ஆகும்போது இது போன்ற சேவைகளைப் பெற்று நிலத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்தால் எளிதில் நிலம் வாங்கவோ அல்லது விற்பனை செய்யவோ முடியும்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications