சென்னை: வரி தொடர்பான விஷயங்களுக்காக நாட்டிலுள்ள அனைத்து தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களும் பான் கார்டைப் பயன்படுத்துகின்றன. வருமான வரித்தாக்கல் செய்யும்போது பான் கார்டு கட்டாயமாகும். மேலும் வங்கி கணக்கு தொடங்குதல், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் ஈடுபடுதல் மற்றும் சொத்தை கையகப்படுத்துதல் போன்ற அனைத்து நிதி சார்ந்த விஷயங்களுக்கும் பான் கார்டு அவசியம். பான் கார்டு விவரங்களை சரி பார்ப்பது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
பான் என்றால் என்ன?: பான் கார்டு ஒரு தனித்துவமான 10 இலக்க குறியீடு ஆகும். வருமானவரித்துறையால் பான் கார்டு வழங்கப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் அடையாளமாக பான் கார்டு இருக்கிறது. பான் கார்டு ஒரு லேமினேட் செய்யப்பட்ட கார்டாகும். வருமான வரித்துறையின் மூலம் இந்த கார்டு, நீங்கள் பதிவு செய்த பிறகு குறிப்பிட்ட நாட்களில், உங்களுடைய முகவரிக்கு வந்து சேரும்.

பான் என்பது நம்பர் மற்றும் எழுத்துக்கள் சேர்ந்த வடிவில் இருக்கிறது. இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இவ்வளவு முக்கியமான பான் கார்டில் அனைத்து விவரங்களும் சரியானதாக இருப்பது முக்கியம் அவற்றை எப்படி சரி பார்ப்பது என்பதை பார்ப்போம்.
ஆன்லைனில் பான் கார்டைச் சரிபார்ப்பதற்கான ஸ்டெப்கள்
ஸ்டெப் 1: வருமான வரித்துறையின் www.incometaxindiaefiling.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழையவும்.
ஸ்டெப் 2: Quick Links பிரிவின் கீழ் 'Verify Your PAN details' என்ற ஹைப்பர்லிங்கைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: பான் கார்டில் உள்ளது போல் முழு பெயர், பிறந்த தேதி ஆகியவற்றை என்டர் செய்து ஸ்டேட்டஸ்-ஐ தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 4: படத்தில் உள்ளவாறு கேப்ட்சாவை என்டர் செய்து, உங்கள் பான் விவரங்களைச் சரிபார்க்க 'Submit' என்பதைக் கிளிக் செய்யவும்.
பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?: UTIITSL அல்லது NSDL என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பான் கார்டு பெற விண்ணப்பிக்க முடியும். அதேபோல பான் விண்ணப்ப மையத்திற்கு சென்றும் பான் கார்டு பெற விண்ணப்பிக்கலாம். இந்த மையங்கள் NSDL மற்றும் UTITSL ஆல் இயக்கப்படுகின்றன.
அதேபோல உங்களிடம் ஆதார் அட்டை இருந்தால் நீங்கள் அதன் மூலம் உடனடியாக பான் கார்டு பெறலாம். அதற்கு விரிவான விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த முயற்சி தனி நபர்களுக்காக பான் செயல்முறையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications