உங்களுக்கு அவசரமாகப் பணம் தேவைப்படும் போது, உங்கள் கையில் ஏடிஎம் கார்டு இல்லையெனில் என்ன செய்வீர்கள்..? மற்றவர்களிடம் இருந்து பணத்தைக் கடனாக வாங்குவது தவிர வேறு என்ன வழி உள்ளது..
டிஜிட்டல் வங்கி சேவை உதவிகள் மூலம் தற்போது டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுக்க முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் அதாவது யுபிஐ உதவியுடன் எடுக்க முடியும். Interoperable cardless cash withdrawal (ICCW) என அழைக்கப்படும் நிதியியல் வசதி மூலம் ஏடிஎம் கார்டுகள் இல்லாமல் மக்கள் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க முடியும்.
குளோனிங், ஸ்கிம்மிங்
இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகள் மூலம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு தரவுகளைத் திருடும் குளோனிங், ஸ்கிம்மிங் போன்ற கார்டு மோசடிகளை அதிகமாக இருக்கும் நிலையில், இதைத் தடுப்பதற்காக ஏடிஎம்களில் ICCW வசதிகளை வழங்க வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பரிந்துரைக்கிறது.
கார்டு இல்லாமல் பணம்
கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), HDFC வங்கி மற்றும் பிற முன்னணி வங்கிகள் இயக்கப்படும் ஏடிஎம்களில் கிடைக்கிறது. இதன் மூலம் பெரும்பாலான மக்கள் இச்சேவையைப் பயன்படுத்த முடியும்.
யூபிஐ
யூபிஐ மூலம் பணம் எடுக்கப்படும் காரணத்தால் கட்டாயம் யூபிஐ தளத்தில் இயங்கும் ஒரு செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்த வகையில் கூகுள் பே, போன் பே, பேடிஎம், மற்றும் பிற யூபிஐ செயலிகள் வாயிலாக ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுக்க முடியும்.
பணத்தின் தேவை
இந்தியாவில் பெரும்பாலான இடத்தில் யூபிஐ சேவைகள் வந்தாலும், நகரங்கள் முதல் கிராமம் வரையில் பணத்தை வைத்து சேவை பெறும் பல இடங்களும், சூழ்நிலைகளும் இருக்கத்தான் செய்கிறது. இப்படிப்பட்ட நேரத்தில் ஏடிஎம் கார்டோ அல்லது உங்கள் பர்ஸ்-ஐ வீட்டில் மறந்து வைத்துவிட்டால் யூபிஐ சேவை மூலம் ஏடிஎம் மூலம் பணத்தை எடுக்க முடியும்.
5000 ரூபாய் மட்டுமே
ஆனால் இந்த முறையின் கீழ் ஒருவர் அதிகப்படியாக ஒரு முறை 5000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்பது வருத்தமான விஷயமாக இருந்தாலும் மக்களுக்கு எளிதாக வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. சரி இதை எப்படிச் செய்வது..?
எப்படிப் பயன்படுத்துவது..?
படி 1: நீங்கள் எந்த ஏடிஎம் இயந்திரத்திற்கும் முன் சென்றதும், திரையில் கிடைக்கும் ''Withdraw Cash' விருப்பத்தைக் தேர்ந்தெடுக்க வேண்டும்.
படி 2: அடுத்து, UPI விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 3: பிறகு ஏடிஎம் திரையில் தோன்றும் விரைவு பதிலை QR code-ஐ உங்கள் ஸ்மார்ட்போனில் ஸ்கேன் செய்ய வேண்டும்.
படி 4: நீங்கள் எடுக்க விரும்பும் பணத்தின் அளவை உள்ளிடவும். முன்பு குறிப்பிட்டபடி, ஒரே நேரத்தில் ரூ.5,000 வரை எடுக்கலாம்.
படி 5: உங்கள் UPI பின்னை உள்ளிட்டு 'Hit Proceed' பட்டனைக் கிளிக் செய்யவும். பணம் வந்துவிடும்.
இந்திய ரிசர்வ் வங்கி
ஏடிஎம்களில் இருந்து UPI உதவியுடன் கார்டு இல்லாமல் பணம் எடுப்பதற்கு வங்கிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்காது. இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) படி, ஐசிசிடபிள்யூ பரிவர்த்தனைகள் பரிந்துரைக்கப்பட்டவை தவிர (இன்டர்சேஞ்ச் கட்டணம் மற்றும் வாடிக்கையாளர் கட்டணங்களில்) வேறு கட்டணங்கள் விதிக்கப்படமாட்டாது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications