சென்னை: கிரெடிட் கார்டு என்று பெரும்பாலானோர் பயன்படுத்தும் முக்கிய கார்டாக மாறிவிட்டது. இதனைப் பயன்படுத்தி எவ்வாறு பணம் எடுக்கலாம் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
கிரெடிட் கார்டு நமக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இன்றைய, சமூகத்தில் கிரெடிட் கார்ட் பயன்பாடு பெருகி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு எளிய ஸ்வைப் மூலம், கிரெடிட் கார்டு பயன்பாட்டாளர்கள் தேவைப்படும் போதெல்லாம் பேமென்ட் செய்ய முடியும். இந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி நாம் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியும். இந்த முறையை கேஷ் அட்வான்ஸ் என்று குறிப்பிடுகிறார்கள். உங்களுக்கு தேவையான அவசர நேரங்களில், நீங்கள் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொள்ளலாம். இதனை தேவைப்படும் நேரங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் அடிக்கடி பயன்படுத்துதல் கூடாது.

கிரெடிட் கார்டு ஹோல்டர்கள், தங்களது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம், வங்கிகள் போன்றவற்றிலிருந்து பணத்தை வித்ட்ரா செய்யும் முறையே கேஷ் அட்வான்ஸ் எனக் கூறப்படுகிறது. இந்த முறையை பயன்படுத்துவதால் சில பிரச்சனைகள் வரலாம், அவை என்ன என்பது குறித்து பார்ப்போம்.
இந்த கேஷ் அட்வான்ஸ் மெத்தடை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்: நீங்கள் கிரெடிட் கார்ட் கொண்டு பணம் எடுக்கும் போது வங்கிகள், உங்களின் கணக்கில் இருந்து குறிப்பிட்ட பணத்தை வசூலிக்கும். சுமார் 2% முதல் 3% வரையிலான கட்டணங்களை வசூலிக்க நேரிடும். மேலும், நீங்கள் ஏடிஎம்மில் கிரெடிட் கார்டு கொண்டு எடுத்த பணத்திற்கான வட்டி தொகையும் உடனே கணக்கிடப்படும்.
கேஷ் அட்வான்ஸ் மெத்தட் உங்களது கிரெடிட் ஸ்கோரை பாதிக்காது. இருப்பினும், நீங்கள் அவ்வாறு வித்ட்ரா செய்த பணத்திற்கு பேங்க்குகள் வட்டியை நிர்ணயிக்கும் அந்த வட்டி மற்றும் தொகையை, சரியான நேரத்தில் திருப்பி செலுத்த வேண்டும். இந்த கிரெடிட் ஸ்கோர் ஆனது வங்கிகளில் நீங்கள் பெற்ற கடன், கடனை நீங்கள் திருப்பி செலுத்திய தேதி,நிலுவையில் உள்ள கடன்கள் மற்றும் முடிக்கப்பட்ட கடன்கள் ஆகியவற்றின் விவரங்களைக் கொண்டிருக்கும். எனவே, இதனை நீங்கள் சரியான நேரத்தில் செய்யும்போது உங்களுக்கு கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருக்கும். இதனால் நீங்கள் எதிர்காலத்தில் வங்கிகளில் கடன் பெறும்போது பாதிக்காமல் இருக்கும். அவ்வாறு நீங்கள் செலுத்தாத போது, உங்களின் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கலாம்.
இந்த கேஷ் அட்வான்ஸ் மெத்தட் மூலம் நாம் பணம் எடுக்க கிரெடிட் லிமிட் உள்ளது. அதாவது உங்களது கிரெடிட் கார்டில் 25 % முதல் 40% சதவீதம் வரையிலான பணத்தை மட்டுமே நீங்கள் ஏடிஎம்மில் பெற முடியும். சான்றாக சொல்ல வேண்டுமென்றால், உங்களது கிரெடிட் கார்டின் லிமிட் ரூ. 5 லட்சம் என வைத்துக் கொள்வோம். இப்பொழுது நீங்கள் இந்த கேஷ் அட்வான்ஸ் மெத்தடை பயன்படுத்தி 1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை வித்ட்ரா செய்ய முடியும். மேலும் இந்த வசதியை நீங்கள் எமர்ஜென்சி காலங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications