டெல்லி: இந்தியாவில் எஸ்எம்எஸ் வாயிலாக ஓடிபி அடிப்படையாக கொண்டு நடக்கும் மோசடிகளை தடுக்கும் நடவடிக்கையாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் புது விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வரும் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதால் வாடிக்கையாளர்கள் ஓடிபி பெறுவதில் தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் டிஜிட்டல் சார்ந்த மோசடிகள் அதிகரித்துள்ளன. மக்கள் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு ஓடிபி எனப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டுகளை வங்கிகள் அனுப்பி வைக்கின்றன. அதனை உள்ளீடு செய்தால் மட்டுமே முக்கியமான நிதி பரிவர்த்தனைகளை நாம் மேற்கொள்ள முடியும்.

ஆனால் மோசடியாளர்கள் இதனை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே அவர்களின் கணக்கில் இருந்து பணத்தை பெறுவதற்காக இந்த ஓடிபி-ஐ பயன்படுத்துகின்றனர். எனவே இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.
இதன்படி எந்த ஒரு வங்கிகள் மற்றும் செயலி சார்ந்த சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் தங்களின் ஓடிபிக்கள் அல்லது அங்கீகாரமான குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கு முன்பாக அதன் தலைப்பு மற்றும் தகவல்கள் மற்றும் தங்களது எண்களையும் தொலைதொடர்பு நிறுவனங்களிடம் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகளின்படி சந்தேகத்திற்கு இடமான ஒவ்வொரு எஸ்எம்எஸ் -களையும் ஸ்கேன் செய்யவும் அணுகவும் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே இவ்வாறு பதிவு செய்யப்படாத எண்களில் இருந்தோ அல்லது பெயர்களிலிருந்து ஓடிபி உள்ளிட்ட தகவல்கள் வந்தால் அது வாடிக்கையாளர்களுக்கு சென்று சேராமல் தடை செய்யப்படும். இவ்வாறு ஒவ்வொரு ஓடிபி மெசேஜ்களையும் தொலைதொடர்பு நிறுவனங்கள் அணுகி பரிசோதனை செய்த பிறகு வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிசம்பர் 1ஆம் தேதியில் இருந்து வாடிக்கையாளர்கள் ஓடிபி பெறுவதில் தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஓடிபி அடிப்படையிலான மோசடிகளை தடுப்பதற்கு உதவியாக இருக்கும் என டிராய் நம்பிக்கை தெரிவிக்கிறது. ஏற்கனவே இதற்கான கெடு பலமுறை வழங்கப்பட்டு தற்போது நவம்பர் 31க்குள் தொலைத்தொடர்பு சேவை வழங்கக்கூடிய நிறுவனங்கள் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஓடிபி மெசேஜ் டிரேஸெபிலிட்டி என்ற அமைப்பை செயல்படுத்த ட்ராய் அக்டோபர் 31 வரை அவகாசம் விதித்தது .ஆனால் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் அந்த கால அவகாசத்தை நீட்டிக்க கோரி இருந்தன. இந்த காலக்கெடு வரும் 31ஆம் தேதி உடன் முடிகிறது.
எனவே டிசம்பர் 1 முதல் தொலைதொடர்பு நிறுவனங்கள் ஓடிபி தொடர்பான மெசேஜ்களை கண்காணித்து டிரேஸெபிலிட்டி விதியை அமல்படுத்தும். எனவே தொடக்கத்தில் வாடிக்கையாளர்கள் வங்கி அல்லது முன்பதிவு போன்ற பணிகளுக்காக ஓடிபி பெறுவதற்கு சிறிது காலதாமதம் ஏற்படலாம் ஆனால் அடுத்தடுத்த நாட்களில் இது சரி செய்யப்பட்ட விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications