அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமீபத்தில் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், வெளிநாட்டு தொழிலாளர்களை நியமிப்பதை நிறுத்த வேண்டும் என கடுமையாக எச்சரித்துள்ளார். இது இந்தியாவுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி உள்ளது. இதுவரை உலகிற்கு அவுட்ஸோர்சிங் சேவைகள் வழங்கிய தொழில்நுட்ப மையமாக இருந்த இந்தியா, இப்போது உலக தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் திகழும் நாடாக மாறாக உள்ளது.
India Narrative வெளியிட்ட செய்தியின் படி, இந்தியா ஏற்கனவே தெளிவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 2024ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட IndiaAI மிஷன், இந்தியாவின் விவசாயம், சுகாதாரம் மற்றும் மொழி மாடல்கள் ஆகிய 3 முக்கிய துறைகளில் உள்ளூர்த் தீர்வுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த துறைகள், இந்தியாவின் தனித்துவமான சூழலும், மக்கள் தொகை காரணமாக, மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

இந்திய மொழிகளில் இயங்கக்கூடிய Sarvam-1 போன்ற AI மாதிரிகள், மேற்கத்திய தொழில்நுட்பங்களை மாற்றிக் கொள்வதைவிட, புதிதாய் உருவாக்கும் சிந்தனையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளன. இது இந்தியாவின் தொழில்நுட்ப துறையில் அதிகமான நம்பிக்கையையும், தன்னம்பிக்கையையும் காட்டுவதாக உள்ளது.
மேலும், கணினி வசதிகள் பெரிதும் மேம்படுத்தப்படுகின்றன. ஏஐ மற்றும் டீப் டெக் ஆராய்ச்சியில் மூலதன முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஸ்டார்ட் அப்புகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அதிக ஆதரவு வழங்கப்படுகிறது.
மேலும், ஆதார் மற்றும் யுபிஐ போன்ற பயன்பாட்டில் உள்ள டிஜிட்டல் சேவைகள், உலகத் தரத்தை நிர்ணயிக்கும் அளவில் தற்போது செயல்பட்டு வருகின்றன. இந்த டிஜிட்டல் தளங்கள், இப்போது பெட்டிக் கடைகள் முதல் வங்கிச் சேவைகள் வரை அனைத்து துறைகளுக்கும் அடித்தளமாக உள்ளன. மேற்கத்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து கவனிக்காமல் விட்ட துறைகளில், இந்தியாவை புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு சாதகமான சூழலாக மாற்றியுள்ளன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை நியமிக்க வேண்டாம் என கூறியுள்ளதால், உலக தொழில்நுட்ப துறையில் குழப்பம் ஏற்படக்கூடும். ஆனால், இது இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பாக மாறும் என்று India Narrative வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 46%க்கும் மேற்பட்ட மக்கள் விவசாயத்தில் தான் நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள். ஆனால், மாறிக்கொண்டிருக்கும் வானிலை, குறைந்த விளைச்சல் மற்றும் வருமானம் ஆகியவை விவசாயிகளை பாதிக்கின்றன. ஆனால், ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மண் நிலை, காலநிலை, பாசனத் தேவைகள் போன்றவற்றை கணித்து பயிர் திட்டமிடும் மாதிரி தீர்வுகள் வந்தால், இது உணவு பாதுகாப்பையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும்.
அதேபோல், இந்தியாவில் தற்போது 900 மில்லியனுக்கும் மேற்பட்ட இணைய இணைப்புகள் உள்ளன. டிஜிட்டல் பயனாளர் அடிப்படையுடன், பணம் செலுத்தும் தொழில்நுட்பங்களில் அடைந்த முன்னேற்றம், இந்தியாவை அளவிலான பொதுக்கட்டமைப்புக்கான உலக முன்னுதாரணமாக மாற்றியுள்ளது.
பல ஆண்டுகளாக, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள், குறைந்த செலவில் உயர்தர தொழில்நுட்ப நிபுணர்களைப் பெற இந்திய இன்ஜினியர்களை நம்பிக்கையுடன் நியமித்து வந்துள்ளன. இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் இருந்து பட்டம் பெற்ற இளைஞர்கள், காலிஃபோர்னியா, வாஷிங்டன், நியூயார்க் போன்ற நகரங்களில் முக்கிய வேலைகளைப் பெற்றனர்.
ஆனால், தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க வேலைவாய்ப்புகளை அமெரிக்கர்களுக்கே வழங்க வேண்டும் என்ற புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இதன் விளைவாக, வேலை வாய்ப்புகள் குறைவடையும், இந்தியர்களின் கனவுகள் தள்ளிப் போகும் நிலை உருவாகி வருகிறது. ஒரு காலத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில், இந்திய தொழில்நுட்ப நிபுணர்கள் தற்போது புதிய தடைகளை சந்திக்க தொடங்கியுள்ளனர்.
மேலும், இந்தியா புதிய கண்டுபிடிப்புகள், தொழில் தொடக்கங்கள் மற்றும் தன்னாட்சி தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இப்போது வந்துள்ளது. இந்த மாற்றம் இந்தியாவின் தொழில்நுட்பத் துறைக்கு தனி அடையாளம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!



Click it and Unblock the Notifications