டெல்லி: இன்னும் இரண்டு தினங்களில் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க இருக்கும் நிலையில் அவரது பதவிக்காலம் இந்திய பொருளாதாரத்திலும் இந்திய பங்குச் சந்தையிலும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து தற்போது தெரிந்து கொள்ளலாம்.
அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் தொழில் முதலீடுகளை அதிகரிப்பதற்கும் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை டிரம்ப் நிர்வாகம் வெளியிட கூடும் என சொல்லப்படுகிறது. உலகின் சக்தி வாய்ந்த பொருளாதார நாடாகவும் , ராணுவ பலமிக்க நாடாகவும் அமெரிக்கா திகழ்ந்து வரக்கூடிய நிலையில் அமெரிக்க அரசு கொண்டு வரக்கூடிய எந்த ஒரு சிறிய கொள்கை மாற்றமும் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு அமெரிக்க டாலரை வலுப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என சொல்லப்படுகிறது. அவ்வாறு அமெரிக்க டாலர் வலுவடைந்தால் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடையும் . இவ்வாறு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடையும் போது இந்தியா இறக்குமதிக்கு அதிக தொகையை செலவிட நேரிடும் இது வர்த்தக பற்றாக்குறைக்கு வித்திட வாய்ப்பு இருக்கிறது.
அதேபோல இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் முறையான வர்த்தக நடைமுறைகள் இல்லை என்ற குற்றச்சாட்டை டிரம்ப் தொடர்ந்து முன்வைத்து வருகிறார். எனவே சீனா இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் உயர்த்தலாம் என சொல்லப்படுகிறது. இது இந்திய பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
டிரம்ப் நிர்வாகம் சீனாவிற்கு செல்லும் முதலீடுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் அந்த முதலீடுகள் இந்தியாவிற்கான வாய்ப்பாக அமையும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
வர்த்தக ரீதியாக டிரம்ப் அரசு எடுக்கக்கூடிய எந்த ஒரு கொள்கையும் ஆசிய பொருளாதாரத்திலும் இந்திய பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சீன பொருட்களுக்கு டிரம்ப் நிர்வாகம் அதிக வரியை விதித்தால் நிறுவனங்கள் தங்களுடைய முதலீட்டை இந்தியா ,வியட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு மாற்றும்.
இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு அமெரிக்க நிறுவனங்களின் உற்பத்தி ஆலைகள் நிறுவப்படும். ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய ஐபோன் உற்பத்தியை சீனாவில் குறைத்துவிட்டு இந்தியாவில் அதிகரித்து வருவதை உதாரணமாக கூறலாம். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசு இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்கின்றனர்.
குடியுரிமை கொள்கையிலும் ஹெச்1பி விசாவிலும் மாற்றத்தை கொண்டு வந்தால் அது இந்தியாவை சேர்ந்த தொழில் நிபுணர்களுக்கு பாதகமாக அமையலாம். இது இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
ஏற்கனவே வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் செய்த முதலீடுகளை குறைத்து வருகின்றன. எனவே பங்குச்சந்தையை பொறுத்தவரை சிறிது காலத்திற்கு ஏற்றம் இறக்கம் நிறைந்ததாகவே இருக்கும் என சொல்லப்படுகிறது. நல்ல மதிப்பீடு கொண்ட நிறுவனங்களை தேர்வு செய்து முதலீடு செய்பவர்கள் கவலைப்பட வேண்டாம் என முதலீட்டு நிபுணர்கள் கூறுகின்றனர்.
டிரம்பின் வருகை சீனாவுக்கு நெருக்கடியையும் இந்தியா போன்ற நாடுகளுக்கு வாய்ப்புகளையும் உருவாக்கும் என்றே நம்பப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

ரஷ்யாவின் மாஸ்டர் பிளான்! 40% தள்ளுபடியில் காஸ்.. இந்தியா, வங்கதேசத்துக்கு ஜாக்பாட்!அமெரிக்கா ஷாக்!

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications