இந்தியா - அமெரிக்கா இடையே எழும் வர்த்தக மோதல், குறிப்பாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு 50% வரை வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் வீட்டு சந்தை மேலும் பாதிக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே, வீட்டு வசதி துறையின் நிலை மோசமாக உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ஏற்பட்ட பாதிப்புகள், கட்டுமானச் செலவுகள் அதிகரித்தது போன்ற காரணங்களால் இந்தத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மலிவான வீடுகள் என அழைக்கப்படுவது என்பது ரூ.45 லட்சம் வரை விலை கொண்ட வீடுகள் ஆகும். 2025 முதல் பாதியில், இந்தியாவின் முன்னணி 7 நகரங்களில் இந்த வகை வீடுகளின் விற்பனை பங்கு 18% மட்டுமே இருந்தது. இது 2019இல் 38% ஆக இருந்ததைவிட பெரிய வீழ்ச்சி ஆகும்.

2025ஆம் ஆண்டின் முதல் பாதியில், மொத்தமாக 1.90 லட்சம் வீடுகள் விற்பனையானதில், அதில் மலிவான வீடுகள் (ரூ.45 லட்சத்திற்குள்) வெறும் 34,565 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையானது. இது வீட்டு சந்தையில் இந்த பகுதி எவ்வளவு பின்னடைவில் உள்ளது என்பதை காட்டுகிறது. விற்பனை மட்டுமின்றி, புதிய வீட்டு திட்டங்களின் தொடக்கம் கூட கடுமையாக குறைந்துள்ளன. 2019இல் 40% வரை மலிவான வீடுகள் இருந்தன. ஆனால், இப்போது 12% ஆக குறைந்துவிட்டது.
இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தேசிய உற்பத்தியில் 30% வரையிலும், மொத்த ஏற்றுமதியில் 45% க்கும் மேல் பங்களிக்கின்றன. இத்துறைகள் இயந்திர பாகங்கள், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், நவமாணிக்கங்கள் மற்றும் உணவுப் பதப்படுத்தல் போன்ற தொழில்களாக இயங்குகின்றன. இந்த துறைகள் நேரடியாக 26 கோடிக்கும் மேற்பட்ட மக்களை பணிக்கு அமர்த்தி வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில், MSME ஏற்றுமதியாளர்களின் எண்ணிக்கை 228% எனக் கூடிய விகிதத்தில் உயர்ந்துள்ளது. 2020-21ஆம் ஆண்டில் 52,849 இருந்து 2024-25ஆம் ஆண்டில் 1,73,350 ஆக அதிகரித்துள்ளது.
ANAROCK குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை பிரிவின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரசாந்த் தாக்கூர் கூறுகையில், "ரூ.45 லட்சத்திற்கும் குறைவான வீடுகள் கொண்ட இந்த வீட்டு வகை, கொரோனா தொற்றால் ஏற்கனவே மோசமாக பாதிக்கப்பட்டது. இப்போதும் அதே நிலையில் உள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு இந்த துறைக்கு இருக்கும் நம்பிக்கையை கூட முற்றிலுமாக அழிக்கக்கூடும்.
இந்த பெரிய தொழிலாளர் கூட்டத்தின் எதிர்கால வருமானத்திலே உருவாகும் குழப்பம், மலிவான வீட்டு வசதிக்கான தேவையை திசைமாற செய்யலாம். இது வீட்டு சந்தையின் விற்பனையையும் மோசமாக பாதிக்கும். அதற்கேற்ப, புதிய வீட்டு திட்டங்கள் குறையும். ஏற்கனவே கொரோனாவுக்கு பிறகு கட்டுமான செலவுகள் உயர்ந்துள்ளன. இதோடு சேர்ந்து, குறைந்த விற்பனை காரணமாக, வேலை மூலதனத்தின் பற்றாக்குறையால் தொழில் முனைவோரும் இன்னும் கடின நிலையை சந்திக்க வேண்டியிருக்கும" என்று எச்சரித்துள்ளார். இப்போதே நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாளைய பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications