இந்திய ஏற்றுமதி வர்த்தகம் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் 12வது இடத்தில் இருக்கும் துருக்கி நிலநடுக்கத்தால் மிகவும் மோசமான நிலையை எதிர்கொண்ட நிலையில், தற்போது இந்நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம் அனைத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாகத் துருக்கி நாட்டு உடனான இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகமும் பாதிக்கப்பட்டது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டின் துறைமுகங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தியது. இதனால் துருக்கியின் ஏற்றுமதி, இறக்குமதியும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் துருக்கி நிலநடுக்கத்தால் இந்தியாவுக்கு எந்த வகையில் எல்லாம் பாதிப்பு உருவாகியுள்ளது.
இந்தியா - துருக்கி வர்த்தகம்
மத்திய அரசு தரவுகளின் படி 2022 ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் துருக்கி நாட்டிற்கான ஏற்றுமதியின் மொத்த மதிப்பு 7.29 பில்லியன் டாலர். இது இந்தியாவின் மொத்த சரக்கு ஏற்றுமதியில் 2.2 சதவீதமாகும்.
துருக்கி
இதே காலகட்டத்தில் துருக்கி நாட்டில் இருந்து சுமார் 3.23 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவின் மொத்த இறக்குமதியில் 0.6 சதவீதம் துருக்கியைச் சார்ந்து உள்ளது. இதன் மூலம் இந்தியா - துருக்கி மத்தியில் 4.06 பில்லியன் டாலர் வர்த்தக உபரி கொண்டுள்ளது.
5 முக்கிய ஏற்றுமதி பொருட்கள்
இந்தியாவில் இருந்து துருக்கி நாட்டிற்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் 5 முக்கியப் பொருட்கள் பெட்ரோலியம் ஆயில், வாகன உதிரிபாகங்கள், நகைகள், அலுமினியம், நைலான் நூல் ஆகியவை. இதில் பெட்ரோலியம் ஆயில் ஏற்றுமதி மட்டும் 2.677 பில்லியன் டாலர், மற்ற 4 பொருட்களும் 310 மில்லியன் டாலர் முதல் 210 மில்லியன் டாலர் வரையில் மட்டுமே.
Iskenderun துறைமுகம்
துருக்கி மற்றும் சிரியாவில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, Iskenderun துறைமுகத்தில் குறிப்பிடத்தக்க சேதம் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. துருக்கியின் துறைமுக அமைப்பு எவ்வளவு விரைவாக இயங்க துவங்குகிறது என்பது முக்கியமான விஷயமாக உள்ளது.
துருக்கி ஏற்றுமதி இறக்குமதி
S&P குளோபல் கமாடிட்டி தரவுகள் படி இஸ்கெண்டெருன் துறைமுகம் கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதியில் உள்ள மிகப்பெரிய கண்டெய்னர் துறைமுகங்களில் ஒன்றாகும்.
இந்த நிலையில் டேனிஷ் கப்பல் நிறுவனமான மார்ஸ்க் தனது பிப்ரவரி 13 அறிக்கையில் துருக்கி துறைமுகத்தில் எந்த அளவிற்குச் சேதம் ஏற்பட்டு உள்ளது எப்போது மீண்டும் இயங்க துவங்கும் என்பதற்கான ஆய்வுகள் எப்போது நடைபெறும் என்பது இன்னும் தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 6 மறக்க முடியாத நாள்
பிப்ரவரி 6ம் தேதி அதிகாலையில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டில் பெரும் தாக்கத்தை, பொருட்சேதம், உயிர்சேதத்தை ஏற்படுத்தியது. ரிக்டர் அளவில் 7.8ஆகப் பதிவான இந்த மோசமான நில நடுக்கத்தில் பல ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன.
மின்சாரம் மற்றும் தொலை தொடர்பு
இதனையடுத்து மின்சாரம் மற்றும் தொலை தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுத் தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. இன்னும் பல இடங்களில் இடிப்பாடுகளில் இருந்து மக்களை மீட்டு வருகிறது துருக்கி.
41000 பேர் மரணம்
கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த மிக மோசமான நிலநடுக்கமாக, பேரழிவாக இந்தச் சம்பவம் பார்க்கப்படுகிறது. துருக்கி மற்றும் சிரியா எல்லையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மூலம் 41000 பேர் மரணம் அடைந்துள்ளனர். 16000 பேருக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
10 நகரங்கள் பாதிப்பு
துருக்கியின் காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், ஒஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய 10 நகரங்கள் மிக மோசமான பாதிப்பை இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது.
பால்ட் லைன் பாதிப்பு
துருக்கி-யில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக இருந்தாலும் ரிக்டர் அளவில் 7.8 ஆகப் பதிவான இந்த மோசமான நில நடுக்கத்தால் கிட்டத்தட்ட 100 கிமீ தூரத்திற்குப் பால்ட் லைன் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதாவது 100 கிமீ தூரத்திற்குத் தரையில் அடுக்குகள் இரண்டாகப் பிளந்து நகர்ந்து உள்ளன.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications