ஹிட்டாச்சி பேமென்ட் சர்வீசஸ் இந்த வார தொடக்கத்தில் இந்தியாவின் முதல் UPI-ATM ஐ அறிமுகப்படுத்தியது. இந்திய தேசிய பேமெண்ட்ஸ் அமைப்புடன் இணைந்து, மக்களுக்கு பாதுகாப்பாக டெபிட் கார்டு இல்லாமல் பணத்தை வித்டிரா செய்யும் சேவையை அளிக்கும் புதிய ஸ்மார்ட் ஏடிஎம்களை அறிமுகம் செய்தது.
UPI ATM என்பது டெபிட் கார்டைப் பயன்படுத்தாமல், வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய யூபிஐ செயலியை பயன்படுத்தி பணத்தை வித்டிரா செய்ய முடியும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் டெபிட் கார்ட்-ஐ பயன்படுத்தி பணத்தை வித்டிரா செய்வதை காட்டிலும் வேகமாகவும், எளிதாகவும் இதில் பணத்தை எடுக்க முடியும்.

தற்போது, இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் UPI பண பரிமாற்றம் பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்துகிறது, சுமார் 48 சதவீத சில்லறை பரிவர்த்தனைகள் யூபிஐ வழியாக நடக்கிறது. இந்த நிலையில் ஏடிஎம்களிலும் யூபிஐ சேவை வந்த நிலையில் டெபிட் கார்டுகளுக்கான தேவை பெரிய அளவில் குறைந்துள்ளது.
மேலும் யூபிஐ ஏடிஎம் அறிமுகம் செய்த வேகத்தில் பாங்க் ஆஃப் பரோடா சுமார் 6000 யூபிஐ ஏடிஎம்-களை மக்களின் பயன்பாட்டுக்காக அறிமுகம் செய்துள்ளது. கடையில் எப்படி நாம் QR கோடு ஸ்கேன் செய்து பேமெண்ட் செய்கிறோமோ அதே போல இயங்குகிறது இந்த ஏடிஎம்.
UPI-ATM எப்படி வேலை செய்கிறது?
1. யுபிஐ-ஏடிஎம்-ஐ தங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் ஸ்மார்ட்போன் யுபிஐ ஆப் மூலம் அணுகலாம்.
2. யுபிஐ-ஏடிஎம், யுனைடெட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பயன்பாட்டைப் பயன்படுத்தி பல கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க பயனர்களை அனுமதிக்கிறது.
3. பணத்தை வித்டிரா செய்யும் செயல்முறையில் உங்கள் மொபைல் மட்டுமே தேவை, வேறு எந்தொரு விஷயமும் தேவையில்லை. OTP கூட தேவையில்லை.
4. வாடிக்கையாளர் ஏடிஎம்மில் 'யுபிஐ கேஷ் வித்டிராவல் ' விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, திரும்பப் பெறும் தொகையைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்கும்.
5. இதை தேர்வு செய்ததை தொடர்ந்து, ஏடிஎம் திரையில் ஒருமுறை பயன்படுத்தும் டைனமிக் க்யூஆர் குறியீடு காட்டப்படும்.
6. ஏடிஎம்மில் இருந்து பணத்தைப் பெற வாடிக்கையாளர் ஏதேனும் UPI APPஐப் பயன்படுத்தி QR குறியீட்டை ஸ்கேன் செய்து மொபைலில் (UPI APP) UPI பின் மூலம் பரிவர்த்தனையை அங்கீகரிக்க வேண்டும்.

7. ஒரு பரிவர்த்தனைக்கான வரம்பு ரூ.10,000/- வரை மட்டுமே.
8. இது ஒரு நாளுக்கான தற்போதைய UPI வரம்பான 100000 ரூபாயின் ஒரு பகுதியாகவும், இதேபோல் UPI-ATM பரிவர்த்தனைகளுக்கு வழங்குபவர் வங்கி நிர்ணயித்த இலவச வரம்புகளின் படியும் இருக்கும். 9. இலவச ஏடிஎம் பரிவர்த்தனைக்கு அதிகமான UPI-ATM பயன்படுத்தினாலும் வங்கிகள் விதிக்கும் கட்டணங்கள் தொடரும்.
10. இதுவரையில் யூபிஐ சேவைக்கு எவ்விதமான கட்டணமும் இல்லை என்பதால் இதுவும் UPI-ATM பரிவர்த்தனையில் தொடரும்.


Click it and Unblock the Notifications