பெட்டிக்கடைகள், சினிமா தியேட்டர்கள், மால்கள் என எல்லா இடங்களிலும் மக்கள் யுபிஐ தளங்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். ஏன் பேருந்து டிக்கெட் எடுப்பதற்கும் தற்போது யுபிஐ வசதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. பணத்தை வைத்துக்கொண்டு செலவு செய்யும்போது சில்லறை பிரச்சினை பெரும் பிரச்சனையாக இருந்தது. அதற்கு ஒரு தீர்வாக இந்த டிஜிட்டல் தளங்கள் மாறின.
உண்மையிலேயே மொபைல் பேங்கிங் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இதற்கு அடுத்தபடியாக மொபைல் பேங்கிங் அப்ளிகேஷன் மூலம் உடனடியாக கடன் பெறும் வசதியும் பிரபலமடையத் தொடங்கியுள்ளது. "UPI-லிங்க்டு கிரெடிட் லைன்" (UPI-linked credit lines) என்று சொல்லப்படுகிற இந்த வசதியை பெரும்பாலான வங்கிகள் வழங்கி வருகின்றன.
UPI-லிங்க்டு கிரெடிட் லைன் என்றால் என்ன?: நாம் யுபிஐ தளங்களை பணம் அனுப்புவதற்கும், பணம் பெறுவதற்கு தான் பயன்படுத்துவோம். பணம் அனுப்ப வேண்டும் அல்லது பணத்தை வைத்து ஏதேனும் பொருட்களை வாங்க வேண்டுமானால் அதற்கு உங்கள் வங்கி கணக்கில் பணம் இருக்க வேண்டும். அதிலிருந்து தான் பணம் டிடெக்ட் ஆகும். ஆனால் இந்த யுபிஐ கிரெடிட் லைன் வசதியின் மூலம் உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் இருந்தாலும் வங்கிகள் வழங்கும் கடன் தொகை மூலம் நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் யூபிஐ-இல் பணம் செலுத்தலாம்.

உதாரணமாக உங்களுடைய வங்கி கணக்கில் ஜீரோ பேலன்ஸ் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். வங்கிகள் உங்களுக்கு கிரெடிட் லைன் ஆப்ஷனை வழங்கி ரூ.30,000 கிரெடிட் கொடுத்திருந்தால் அதை வைத்து நீங்கள் பணம் செலுத்தி பொருட்களை வாங்கலாம். இதில் மிக முக்கியமான நன்மை என்ன தெரியுமா? பிற கடன்களைப் போல நீங்கள் கடன் வாங்கிய உடனே மொத்த தொகைக்கும் வட்டி செலுத்தத் தேவையில்லை. நீங்கள் எவ்வளவு தொகையை செலவு செய்திருக்கிறீர்களோ? அதற்கு ஏற்ப வட்டி செலுத்தினால் போதுமானது.
வங்கிகளின் அனைத்து செயல்முறைக்கும் இந்திய ரிசர்வ் வங்கி சில விதிகளை வகுத்திருக்கும். அதேபோல வங்கிகள் வழங்கும் யுபிஐ கிரெடிட் லைன் லோன் வசதிக்கும் வங்கிகள் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று ஆர்பிஐ கூறியுள்ளது. இது குறித்து 2026-ஆம் ஆண்டின் ஜூன் 23-ஆம் தேதி அன்று ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.
ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் பிரத்தியேகமாக கிரெடிட் லிமிட் வழங்கப்பட்டிருக்கும். அதை பொறுத்து கடன் தொகை நிர்ணயிக்கப்படும். அந்தத் தொகையை வட்டியில்லா காலத்திற்குள் திருப்பிச் செலுத்தலாம் அல்லது ஈஎம்ஐ முறையில் திருப்பிச் செலுத்தலாம். வங்கிகள் வழங்கும் பர்சனல் லோன் மற்றும் பிற லோன்களுக்கு எப்படி விதிமுறைகள் இருக்கிறதோ? அதேபோல இந்த கடனுக்கும் விதிமுறைகள் இருக்கும். அதை கண்டிப்பாக வங்கிகள் பின்பற்றியாக வேண்டும் என்றும் ஆர்பிஐ கூறியுள்ளது.
பர்சனல் லோன்களை போல மொத்த தொகையும் உங்கள் அக்கவுண்டில் வரவு வைக்கப்பட மாட்டாது. இந்த யுபிஐ கிரெடிட் லைன் ஆப்ஷனில் மொத்த தொகையும் உங்கள் கைக்கே வராது. நீங்கள் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் போது மட்டும் உங்களுக்கு எவ்வளவு தொகை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதோ அந்த வரம்பில் இருந்து பணம் கழிக்கப்படும். அதேபோல நீங்கள் பயன்படுத்தும் தொகைக்கு மட்டுமே வட்டி விதிக்கப்படும்.
ஆனால் யுபிஐ கிரெடிட் லைன் வசதியை பெறுவதற்கு முன்பு வட்டி எப்போது தொடங்கும், வட்டியில்லா காலம் இருக்கிறதா, பிற சார்ஜஸ் உள்ளதா? என்பதையும் கடன் பெறுபவர்கள் தெளிவாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நிதி துறை நிபுணரான ஷெட்டி கூறியுள்ளார். வழக்கமாக கடன் வாங்கும் போது என்னென்ன பிராசஸ் இருக்குமோ அத்தனை ப்ராசஸும் இதற்கும் பொருந்தும். அதாவது வாடிக்கையாளர் எவ்வளவு வருமானம் பெறுகிறார்?, அவர் கடனைத் திருப்பிச் செலுத்தும் தன்மை உடையவரா? என்ற விவரங்களை எல்லாம் ஆராய்ந்த பிறகு இந்த வசதியை வழங்கும். நீங்களும் வங்கிகள் சொல்லும் காலக்கெடுவுக்குள் சரியாக கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். இல்லையென்றால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும்.


Click it and Unblock the Notifications