இந்தியா முழுவதுமே தற்போது விஜய் மல்லையா குறித்துதான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்து விட்டு இந்தியாவை விட்டு தப்பி ஓடியவர் விஜய் மல்லையா என்ற குற்றச்சாட்டு அவர் மீது உள்ளது. இந்தியாவில் இன்னமும் அவர் மீதான வழக்குகளில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே விஜய் மல்லையா தான் நாட்டை விட்டு தப்பியோட வில்லை நான் வாங்கிய கடனை விட அதிகமான பணத்தையே வங்கிகள் திரும்ப பெற்றுள்ளன என தொடர்ந்து கூறி வருகிறார். லண்டனில் தஞ்சமடைந்திருக்கும் விஜய் மல்லையா கிட்டதட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். அதில் விஜய் மல்லையா பணம் சம்பாதிக்கிறாரா என்பது குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது அதற்கு அவர் அளித்துள்ள பதில் டிரெண்டாகி வருகிறது.

அதில் உங்களுடைய ஒரு நாள் வாழ்க்கை எப்படி இருக்கும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் விஜய் மல்லையா "என்னிடம் ஆறு வளர்ப்பு நாய்கள் இருக்கின்றன எனக்கு செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும் நான் அவற்றுடன் விளையாடுவே, பின்னர் சர்வதேச அளவிலான செய்திகள் குறித்து தெரிந்து கொள்வேன்" என தெரிவித்திருக்கிறார். "என்னிடம் பழங்கால கார்கள் இருக்கின்றன தினமும் அவற்றை இயக்குவேன் அவற்றில் ஏதேனும் பழுது இருந்தால் அதை நீக்குவேன்" என தெரிவித்திருக்கிறார்.
பிரிட்டனில் வீட்டுக்கு அருகிலேயே தனக்கு சொந்தமான அலுவலகம் இருக்கிறது நான் இங்கிருந்து சில தொழில்களை நடத்தி வருகிறேன். அங்கே சென்று நான் என்னுடைய தொழிலை கவனிப்பேன் என தெரிவித்திருக்கிறார். பிரிட்டனிலும் என்மீது இந்தியா சார்பில் வழக்கு தொடரப்பட்டிருப்பதால் அங்கேயும் சட்டரீதியான சிக்கல்களை கடந்து தான் நான் என்னுடைய தொழில்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என பதில் தெரிவித்திருக்கிறார். தனக்கு மதுபான தொழில் தான் மிகவும் பிடிக்கும் என கூறியிருக்கும் விஜய் மல்லையா இப்போதும் தான் அது சம்பந்தப்பட்ட தொழிலையே மேற்கொண்டு வருகிறேன் என பதில் அளித்து இருக்கிறார்.
2016 ஆம் ஆண்டு இந்திய அரசு என்னுடைய பாஸ்போர்ட்டை ரத்து செய்ததிலிருந்து என்னுடைய சுதந்திரம் பறிபோய் விட்டது என அவர் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். வாரத்தில் மூன்று முறை வெளிநாட்டு பயணம் ,பாலிவுட் பிரபலங்கள் ,அரசியல் பிரபலங்களுடன் சந்திப்பு என பிசியாக இருந்த ஒரு நபர் தற்போது ஒரே இடத்திலேயே அடைக்கப்பட்டிருப்பது எப்படி இருக்கிறது என கேட்கப்பட்ட கேள்விக்கு இதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தால் எதுவும் நடக்காது, இதற்காக தினம் தினம் எனக்கு அழுது கொண்டிருக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்களை சந்திப்பேன் அப்படியே என்னுடைய பொழுது போகும் என கூறியிருக்கிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புள்ள நபராக இருந்தார் விஜய் மல்லையா. டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள தகவலின் படி பார்த்தால் விஜய் மல்லையாவிற்கு லண்டனில் 1823 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க சில கட்டிடங்களை சொந்தமானதாக வாங்கி வைத்திருக்கிறார். இந்தியாவில் மும்பை பெங்களூரு பகுதிகளில் சொந்தமாக வீடு வைத்திருக்கிறார், அமெரிக்காவில் நியூயார்க் மற்றும் கலிபோர்னியா ஆகிய நகரங்களில் இவருக்கு சொந்தமாக குடியிருப்புகளும் இருக்கின்றன.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications