அதானி குழுமத்தில் வினோத் அதானி செய்தது என்ன..? கௌதம் அதானிக்கு 125 பில்லியன் டாலர் நட்டம் எப்படி..?

ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பு வெளியிட்ட அறிக்கைக்குப் பின்பு அதானி குழுமத்தின் பங்குகள் பெரிய அளவில் சரிந்து, ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையில் அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியின் சகோதரரான வினோத் அதானி குறித்துப் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் அதானி குழுமத்தின் பதில் அறிக்கையில் இந்தக் குற்றசாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்தது மட்டும் அல்லாமல் வினோத் அதானி-க்கும் அதானி குழுமத்திற்கும் எவ்விதமான நேரடி தொடர்பும் இல்லை என விளக்கம் கொடுத்தது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு போர்ப்ஸ் நிறுவனம் வினோத் அதானி குறித்துச் சில முக்கியமான விஷயங்களை மையமாக வைத்து அறிக்கை வெளியிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இந்த விவகாரம் செபி, அமலாக்க துறை விசாரணை செய்யத் தகுதி அடையவில்லையா எனக் கேள்வி எழுப்பினர்.

அதானி குழுமத்தில் கௌதம் அதானியின் சகோதரரான வினோத் அதானி செய்தது என்ன..?

கௌதம் அதானி - வினோத் அதானி

கௌதம் அதானி - வினோத் அதானி


கௌதம் அதானியின் சகோதரரான வினோத் அதானி நீண்டகாலமாக என்ஆர்ஐ ஆக இருக்கிறார், இவரின் தலைமையில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் வாயிலாக அதானி குழுமத்திற்குள் அதிகப்படியான நிதி உட்செலுத்தப்பட்டு உள்ளது என ஹிண்டன்பர்க் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

போர்ப்ஸ்

போர்ப்ஸ்

இதைத் தொடர்ந்து போர்ப்ஸ் வெளியிட்ட அறிக்கையில் இதற்கு முன்பு வெளியிடப்படாத அறிவிக்கப்படாத பரிமாற்றங்களில் வினோத் அதானிக்கு தொடர்புடைய ஆப்ஷோர் கணக்குகள் அதானி குழுமத்திற்குப் பலன் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளதை போர்ப்ஸ் கண்டுப்பிடித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

வினோத் அதானியின் Endeavour நிறுவனம்

வினோத் அதானியின் Endeavour நிறுவனம்

சில மாதங்களுக்கு முன்பு கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் கைப்பற்றி 10.5 பில்லியன் டாலர் தொகைக்கு அம்புஜா சிமெண்ட்ஸ், ஏசிசி லிமிடெட் நிறுவனத்தைச் சுவிஸ் நாட்டின் ஹோல்சிம் நிறுவனத்திடம் இருந்து வாங்கியது. இதில் வினோத் அதானியின் Endeavour Trade and Investment Ltd அதானி குழுமத்தின் acquisition vehicle-ல் இருந்தது, இதை அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்து இருந்தது.

வினோத் அதானி-யின் Pinnacle நிறுவனம்

வினோத் அதானி-யின் Pinnacle நிறுவனம்


வினோத் அதானி-யின் மறைமுகக் கட்டுப்பாட்டில் சிங்கப்பூரில் இயங்கி வரும் Pinnacle Trade and Investment Pte, 2020ஆம் ஆண்டில் ரஷ்யாவின் VTB வங்கியிடம் மாபெரும் கடன் ஒப்பந்தம் செய்திருந்தது. 2021 ஏப்ரல் மாதத்திற்குள் Pinnacle Trade and Investment Pte சுமார் 263 மில்லியன் டாலர் கடன் பெற்று, இதில் 258 மில்லியன் டாலர் அளவிலான தொகையை அடையாளம் தெரியாத நிறுவனங்களுக்குக் கடனாகக் கொடுத்தது.

இரு நிறுவனங்களுக்குக் கேரென்டி

இரு நிறுவனங்களுக்குக் கேரென்டி

அடுத்தச் சில மாதத்தில் Pinnacle Trade and Investment நிறுவனம் Afro Asia Trade and Investments Limited மற்றும் Worldwide Emerging Market Holding Limited ஆகிய இரு நிறுவனத்திற்குக் கேரென்டி கொடுத்துள்ளதாகச் சிங்கப்பூரில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இந்தக் கேரென்டி மூலம் இந்தப் பணத்தை வினோத் அதானி இத்தொகையை மொரிஷியஸை தளமாகக் கொண்ட அக்ரோபோலிஸ் டிரேட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் மூலம் திரும்பப் பெற்றுள்ளார்.

அக்ரோபோலிஸ் டிரேட்

அக்ரோபோலிஸ் டிரேட்

மொரிஷியஸை தளமாகக் கொண்ட வினோத் அதானி-க்கு சொந்தமான அக்ரோபோலிஸ் டிரேட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் Worldwide Emerging Market Holding Limited-ன் 100 சதவீத பங்குகளைக் கொண்டு உள்ளது. 100 சதவீத பங்கு உரிமையை இந்திய பங்குச்சந்தையில் ஜூன் 2020, ஆகஸ்ட் 2022 அறிக்கை மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

4 பில்லியன் டாலர் அதானி பங்குகள்

4 பில்லியன் டாலர் அதானி பங்குகள்

இந்த நிலையில் Afro Asia Trade மற்றும் Worldwide Emerging Market ஆகிய நிறுவனங்களும் சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்பிலான அதானி பங்குகளைக் கொண்டு உள்ளது. மேலும் இவ்விரு நிறுவனங்களும் வேறு எந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்யவில்லை என Trendlyne தெரிவித்துள்ளது.

ரஷ்ய வங்கி கடன்

ரஷ்ய வங்கி கடன்

இதன் மூலம் Pinnacle Trade and Investment நிறுவனம் வாங்கிய ரஷ்ய வங்கி கடன் அதானி குழும பங்குகளாக மாற்றப்பட்டுக் கௌதம் அதானி-யின் சகோதரர் வினோத் அதானி கைகளுக்கு வந்துள்ளது. இந்தக் கடன் குறித்தும், கடன் வாயிலாக 4 அதானி குழும பங்குகளை வாங்கியது குறித்து எவ்விதமான அறிக்கைகளையும் இந்திய பங்குச்சந்தையில் தெரிவிக்கப்படவில்லை எனப் போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

 செபி - அதானி குழுமம்

செபி - அதானி குழுமம்

ஏற்கனவே செபி அதானி குழும முதலீடுகளின் நிதி ஆதாரங்கள் குறித்து ஆய்வு செய்து வருவதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் போர்ப்ஸ் அறிக்கையைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது டிவிட்டரில் கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானியின் சிங்கப்பூர் நிறுவனம் அதானி குழுமத்தின் பங்குகளை அடமானமாக வைத்து சுமார் 240 மில்லியன் டாலர் அளவிலான கடனை ரஷ்ய வங்கிகளிடம் இருந்து பெற்றுள்ளது குறித்து டிவீட் செய்துள்ளது.

முறைகேடான பரிமாற்றம்

முறைகேடான பரிமாற்றம்

இந்த முறைகேடான பரிமாற்றம் மூலம் அதானி குழுமம் இந்திய பங்குச்சந்தையில் 25 சதவீத பங்குகள் பொது விற்பனையில் இருக்க வேண்டும் என்கிற விதியை மீறுவதாக ஹிண்டன்பர்க் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 ஆப்ஷோர் கணக்குகள்

ஆப்ஷோர் கணக்குகள்

இதேபோல் இந்த ஆப்ஷோர் கணக்குகள் மூலம் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் அதானி குழுமத்திற்குள் மறைக்கப்பட்ட அந்நியச் செலாவணி மற்றும் கணக்கியல் முறைகேடுகள் பற்றிய ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளுக்கு மேலும் நம்பகத்தன்மையை வழங்குகின்றன. மேலும் இதுக்குறித்த விளக்கத்திற்கு வினோத் அதானியிடம் இருந்து விளக்கம் கேட்ட நிலையில் வினோத் அதானி தரப்பில் இருந்து எவ்விதமான பதிலும் அளிக்கவில்லை எனப் போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

125 பில்லியன் டாலர் நட்டம்..

125 பில்லியன் டாலர் நட்டம்..

ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையில் ரஷ்யாவின் VTB வங்கி கடன் மூலம் அதானி பங்குகள் வாங்கப்பட்ட விஷயத்தைத் தெரிவிக்காவிட்டாலும், தனது ஜனவரி 24 ஆம் தேதி அறிக்கையில் மொத்தமும் கௌதம் அதானி பெயரை 54 முறை மட்டுமே பயன்படுத்திய நிலையில், வினோத் அதானி பெயரை 151 முறை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+