இனி உயர்தர சிகிச்சைக்காக பெரு நகரங்களை நோக்கி படையெடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், இந்திய சுகாதாரத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் நோக்கில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் மண்டல மருத்துவ மையங்களை (Regional Medical Hubs) உருவாக்குவதன் மூலம், மூலை முடுக்கெல்லாம், உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளை கொண்டு செல்ல அரசு திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நமது பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேதத்தை நவீன மருத்துவத்துடன் இணைக்க புதிய ஆயுர்வேத நிறுவனங்கள் (Ayurveda Institutes) முக்கிய நகரங்களில் தொடங்கப்பட உள்ளன. ஆரோக்கியமான பாரதம் என்ற இலக்கை அடைய, நவீன தொழில்நுட்பமும் பழங்கால மருத்துவ முறைகளும் இணையும் இந்த மெகா பிளான், சாமானிய மக்களுக்கான மருத்துவ செலவை குறைக்குமா? என்பதை விரிவாக பார்ப்போம்.

மெகா திட்டங்கள்!
மத்திய பட்ஜெட்டில் சுகாதார துறைக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்த மெகா திட்டங்கள், சாமானிய மக்களின் மருத்துவ கனவுகளை நனவாக்கும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக நவீன மருத்துவம் மற்றும் பாரம்பரிய ஆயுர்வேதத்தை இணைக்கும் பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
மண்டல மருத்துவ மையங்கள்
மாநிலங்களில் உயர்தர மருத்துவ சேவைகளை பரவலாக்க 5 புதிய மண்டல மருத்துவ மையங்கள் உருவாக்கப்படும். இதன் மூலம், சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்காக மக்கள் டெல்லி அல்லது சென்னை போன்ற பெருநகரங்களுக்கு ஓட வேண்டிய அவசியம் இருக்காது. இதன் மூலம் இனி சிக்கலான முக்கிய பிரச்சனைகளுக்கு எளிதில் மருத்துவ சேவை பெற இந்த திட்டமானது உதவிகரமாக இருக்கும்.
NIMHANS விரிவாக்கம்
பெங்களூருவில் உள்ள உலகத்தரம் வாய்ந்த நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மெண்டல் ஹெல்த் அண்ட் நியூரோ சயின்ஸ் (NIMHANS) மருத்துவமனையின் நிபுணத்துவம், நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் மனநலம் மற்றும் நரம்பியல் பாதிப்புகளுக்கு உயர்தர சிகிச்சை இனி எளிதில் கிடைக்கும்.
மாவட்ட மருத்துவமனைகளின் பலம்
மாவட்ட மருத்துவமனைகளின் கொள்ளளவு 50% உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது முக்கிய அறிவிப்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைகளுக்காக புதிய வசதிகள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் அவசர கால கட்டங்களில் வேகமாக சிகிச்சைகள் பெறுவதையும் உறுதிபடுத்த முடியும் என கூறப்படுவது, நிச்சயம் சாமானியர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
மாபெரும் வேலைவாய்ப்பு!
மேற்கண்ட பல்வேறு அறிவிப்புகளின் மத்தியில் அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் சுகாதார பணியாளர்கள் மற்றும் 1.5 லட்சம் பராமரிப்பாளர்கள் புதிதாக உருவாக்கப்படுவார்கள். இது இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சுகாதாரத்துடன் இணைந்து வேலை வாய்ப்பையும் ஊக்குவிப்பது இளைய தலைமுறையினருக்கு வாய்ப்புகளை அதிகரிக்கும்.
ஆயுர்வேத புரட்சி!
இந்தியர்களின் பாரம்பரிய மருத்துவத்தை ஊக்குவிக்க 3 புதிய அகில இந்திய ஆயுர்வேத நிறுவனங்கள் (All India Institutes of Ayurveda) நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பாரம்பரியத்தையும் தக்க வைத்துக் கொள்ள முடியும். மேற்கொண்டு மக்கள் பாரம்பரிய மருத்துவத்தின் மூலம் இன்னும் பலன் அடைய உதவிகரமாகவும் இருக்கும்.
ஏழை மக்கள் இதனால் எப்படி பயன் பெறுவார்கள்?
மேற்கண்ட திட்டங்கள் காகித அளவில் மட்டுமன்றி, சாமானிய மக்களின் வாழ்க்கையில் நேரடி மாற்றத்தை ஏற்படுத்தும். மாவட்ட மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை மையங்கள் வருவதால், விபத்து காலங்களில் கோல்டன் ஹவர்' எனப்படும் முதல் ஒரு மணி நேரத்திற்குள் சிகிச்சை பெற்று உயிரை காப்பாற்ற முடியும். மண்டல மருத்துவ மையங்கள் வருவதால், உயர் சிகிச்சைக்காக வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இதனால் அலைச்சலும் மிச்சம். பயண செலவும் மிச்சம். அருகிலேயே சேவை கிடைப்பதால் தங்கும் செலவு உள்ளிட்ட பல செலவுகள் ஏழை மக்களுக்கு மிச்சமாகும்.மொத்தத்தில் இந்த பட்ஜெட்டில் சாமானியர்கள் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் மிக நல்ல விஷயம் தான்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications