இந்தியாவின் போக்குவரத்து வரலாற்றில் இது ஒரு புதிய அத்தியாயம். இனி ரயிலில் பயணம் செய்வது என்பது வெறும் பயணம் அல்ல, அது வானத்தில் பறப்பதற்கு சமமான வேகம்.
பட்ஜெட் 2026-ல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவின் வளர்ச்சியை சூப்பர்-பாஸ்ட் ஆகும் விதமாக 7 புதிய அதிவேக ரயில் (High-Speed Rail) வழித்தடங்களை அறிவித்துள்ளார். குறிப்பாக, தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகியவை இந்த மெகா திட்டத்தின் கீழ் இணைக்கப்பட உள்ளன. முந்தைய புல்லட் ரயில் திட்டங்கள் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவை மையமாகக் கொண்டிருந்த நிலையில், இந்த முறை டெல்லி முதல் சிலிகுரி வரை, சென்னை முதல் மும்பை வரை என இந்தியா முழுமைக்கும் இந்த வேகமான பயணம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மணிக்கு 300 கி.மீ வேகத்தில் பாயப்போகும் இந்த ரயில்கள், பல மணி நேர பயணத்தை சில நிமிடங்களாக குறைக்கப் போகின்றன. உள்கட்டமைப்பு மேம்பாட்டில் இந்தியா எடுக்கப்போகும் இந்த மெகா வேகம் குறித்து விரிவாக பார்ப்போம்.
அறிவிக்கப்பட்ட 7 முக்கிய வழித்தடங்கள்!
மும்பை - புனே - இது வர்த்தக தலை நகரங்களை அதிவேகமான இணைக்க உதவும்.
புனே - ஹைதராபாத் - மேற்கு மற்றும் பீடபூமியை இணைக்கும் பாதை
ஹைதராபாத் - பெங்களூரு - இந்தியாவின் இரு பெரும் மிகப்பெரிய ஐடி ஹப்-களை இணைக்கும் பாதையாக இருக்கும்
ஹைதராபாத் - சென்னை - தென்னிந்தியாவின் இரு முக்கிய நகரங்களுக்கு இடையே இந்த பாதை அமையும்
பெங்களூரு - சென்னை - தென் இந்தியாவின் பொருளாதார புரட்சிக்கான மிக முக்கிய பாதை
டெல்லி - வாரணாசி - வட இந்தியாவின் ஆன்மீக மற்றும் அரசியல் தலை நகரத்தை இணைக்கும் பாதையாக இருக்கும்
வாரணாசி - சிலிகுரி - கிழக்கு இந்தியாவின் நுழை வாயிலை நோக்கிய வேகமான பயணமாகவும் இது அமையும்.
தமிழகத்திற்கு என்ன பலன்?
சென்னை மற்றும் பெங்களூரு இடையே சுமார் 350 கி.மீ தொலைவு உள்ளது. தற்போதைய வந்தே பாரத் அல்லது சதாப்தி ரயில்களில் பயணம் செய்ய 4.5 முதல் 5 மணி நேரம் ஆகிறது. சாலை வழியாக சென்றால் 6 முதல் 7 மணி நேரம் ஆகிறது. இதுவே அதிவேக ரயில்களை எடுத்துக் கொண்டால், மணிக்கு 300 - 320 கி.மீ வேகத்தில் இயக்கப்படும் போது, ஒட்டு மொத்த பயண நேரம் 80 முதல் 100 நிமிடங்களாக குறையும். இதன் மூலம் சென்னையில் காலை உணவை முடித்துவிட்டு, பெங்களூருவில் அலுவலக கூட்டத்தில் கலந்து கொண்டு, மதிய உணவுக்கு மீண்டும் சென்னைக்கே திரும்பி விட முடியும்.
ரியல் எஸ்டேட் துறையில் ஏற்படும் மாற்றங்கள்?
இதன் விளைவாக அதிவேக ரயில் நிலையங்கள் அமையும் இடங்களை சுற்றி நிலத்தின் மதிப்பு அசுர வேகத்தில் உயரும். சென்னை மற்றும் பெங்களூருவின் மையப் பகுதிகளில் இடம் வாங்க முடியாத நடுத்தர வர்க்கத்தினர், இந்த ரயில் வழித்தடங்களில் உள்ள இடைப்பட்ட நகரங்களில் குடியேற தொடங்குவார்கள். இந்த அதிவேக ரயில் பாதை, ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள தொழில் வழி சாலையுடன் (Industrial Corridor) இணைந்து செயல்படும் என்பதால், ஓசூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் போன்ற பகுதிகளில் தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகளின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ரயில் நிலையங்களை ஒட்டி பிரம்மாண்டமான மால், ஹோட்டல்கள் மற்றும் அலுவலகக் கட்டிடங்கள் உருவாகும். மொத்தத்தில் இந்த புதிய புல்லட் ரயில் பாதைகள், மக்களின் பயணத்திற்கு மட்டுமல்ல, பொருளாதாரம் மேம்படுத்தவும் உதவும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications