சர்வதேச அளவில் தங்கத்தை அதிகமாக பயன்படுத்தும் மக்களில் இந்தியர்களும் ஒருவர். நம்மவர்கள் தங்கததை ஆபரணங்களாகவே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். நாட்டின் வருடாந்திர தங்க தேவையில் பாதி தங்க நகைகளிலிருந்தே வருகிறது. எல்லோரும் பாடுபட்டு வியர்வை சிந்தி கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்த்து வைத்து தங்க நகைகளை வாங்குகிறார்கள். அப்படி நீங்கள் வாங்கும் தங்கம் உண்மையில் தூய்மையான என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?.
போலி நகைகள்
தினந்தோறும் போலி நகைகள் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, போலி நகைகள் என தெரியாமல் வாங்கி வாங்கி பலர் இழந்து வருகின்றனர். தற்போது தங்கத்தின் விலை விறுவிறுவென ஏற்றம் கண்டு வருகிறது. 2020ம் ஆண்டில் பத்து கிராம் தங்கத்தின் விலை ரூ.50,000ஆக இருந்தது. கடந்த ஏப்ரலில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை எட்டியது.

தங்க விற்பனையாளர்கள் அதிக லாபம் ஈட்ட தங்கத்தின் தரத்தை குறைப்பது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது. அதற்காக இப்போது அனைத்து தங்க விற்பனையாளர்களும் தரத்தை குறைக்கிறார்கள் என்று சொல்லவில்லை. பெரும்பாலான தங்க விற்பனையாளர்கள் நியாயமாக மற்றும் நம்பிக்கையாக தொழில் செய்து வருகின்றனர். ஆனால் அதேநேரத்தில் தங்கம் வாங்குபவர்கள் குறைந்த தர தங்க நகைகளை வாங்கிய சில நிகழ்வுகளும் நடந்துள்ளன என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஹால்மார்க்
பெரும்பாலான மக்களுக்கு தாங்கம் வாங்கும் தங்க நகைகள் தூய்மையானதா அல்லது போலியா என்பதை கண்டுபிடிக்க தெரியாது. நீங்கள் வாங்கும் தங்கம் தூய்மையானது, போலியானது அல்ல என்பதை எளிதாக உறுதி செய்து கொள்ளலாம். எப்படி என்று தானே கேட்கிறீர்கள்?. மத்திய அரசு ஹால்மார்க் விதிகளை விதித்துள்ளது. நகைக்கடைக்காரர்கள் ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளை மட்டுமே விற்பனை செய்வது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே அடுத்த முறை நீங்கள் 18,22, அல்லது 20 காரட் தங்க நகைகளை வாங்கும்போது, உங்கள் நகைக்கடைக்காரரிடம் ஹால்மார்க்கை காட்ட சொல்லுங்கள். நீங்கள் வாங்கும் தங்க நகைகளில், பிஐஎஸ் லோகோ, காரட்டில் தூய்மை மற்றும் நேர்த்தி மற்றும் 6 இலக்க எண்ணெயெழுத்து ஹால்மார்க் தனித்துவமான அடையாள எண் (HUID). முன்பு 6 இலக்க HUI கட்டாயம் இல்லை. ஆனால் 2023 ஏப்ரல் 1 முதல் HUID இல்லாமல் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைகள் அல்லது கலைப்பொருட்கள் விற்பனை செய்வதை இந்திய தரநிலைகள் (பிஐஎஸ்) தடை செய்துள்ளது.
HUID எண்
எனவே ஹால்மார்க் செய்யப்பட்ட நகையும் HUID எண்ணைக் கொண்டுள்ளது. அதை எப்படி சரிப்பார்ப்பது மிகவும் எளிது. முதல்ல உங்கள் ஸ்மார்ட்போனில் BIS Care App டவுன்லோடு செய்து, HUID எண்ணைக் படிக்க நகைகளை சூம் செய்யுங்க. பின்பு செயலில் HUID எண்ணை உள்ளிடவும், பின்னர் நீங்கள் நகையை ஹால்மார்க் செய்த நகை்ககடைக்காரரின் பெயர் , அவர்களின் பதிவு எண், பொருளின் தூய்மை, பொருளின் வகை மற்றும் பொருளை சோதித்து ஹால்மார்க் செய்த ஹால்மார்க் மையத்தின் விவரங்களை பார்க்கலாம்.
நீங்கள் இதுவரை இதை சரிபார்க்கவில்லை என்றாலும் கூட, இப்போது கூட அதை சரிபார்க்கலாம். நீங்கள் ஏமாற்றப்பட்டு இருந்தால், இழப்பீடு பெற உதவும் ஒரு சட்டம் உள்ளது. ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகள் நகைகளில் குறிக்கப்பட்டதை விட குறைவான தூய்மையை கண்டறிந்தால், வாங்குபவர் இழப்பீடு பெற உரிமை உண்டு. இது (இழப்பீடு) விற்கப்பட்ட பொருளின் எடைக்கான தூய்மை பற்றாக்குறை மற்றும் சோதனைக் கட்டணங்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட வேறுபாட்டின் இரு மடங்கு அதிகமாக இருக்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications