இந்தியாவில் மின்சார சேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இதேவேளையில் கனிம வளம் அல்லாத மின்சார உற்பத்தி இலக்குகளை அடைய வேண்டும் என்ற முக்கியமான பயணத்தில் இந்தியா உள்ளது.
இந்தியாவில் பல மாநிலத்தில் மின்சார தட்டுப்பாடு உருவாக்கியுள்ளது, குறிப்பாக இரவு நேரத்தில். மறுபுறம் டேட்டா சென்டர், செமிகண்டெக்டர், தொழிற்சாலைகள் என மின்சார தேவை அதிகம் கொண்ட தொழிற்துறை இந்தியா முழுக்க வந்துக்கொண்டு இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் மின்சார தட்டுப்பாடு மற்றும் கனிம வளம் அல்லாத மின்சார உற்பத்தி அதாவது non-fossil fuel இலக்கை அடைய சோலார் மற்றும் காற்றாலை தான் முக்கிய ஆயுதமாக இருக்கும்.
இதை நாடு முழுவதும் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டுமாயின் எனர்ஜி ஸ்டோரேஜ் அதாவது பேட்டரி சேமிப்பு மற்றும் இந்தியாவின் power grid-ஐ பெரிய அளவில் மேம்படுத்த வேண்டும். மத்திய அரசு 2030ஆம் ஆண்டுக்குள் non-fossil fuel மூலம் 500 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் எழ இலக்கு வைத்துள்ளது.
ஜூலை 31, 2026 வரையில் இந்தியாவில் 300.50 ஜிகாவாட் அளவிலான மின்சாரம் உற்பத்தி இலக்கை எட்டிவிட்ட நிலையில் மீதமுள்ள 40 சதவீத இலக்கை அடைய கட்டாயம் பேட்டரி சேமிப்பு மற்றும் power grid-ல் பெரும் மேம்பாடு தேவை.
இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் சோலார் பேனல் மூலம் மின்சாரம் சேமித்து வைக்க முடியும், ஆனால் இது நாட்டின் மொத்த மின்சார சேவையை பூர்த்தி செய்ய முடியாது, காரணம் இந்தியாவில் தற்போது செயல்படும் பவர்கிரிட்டில் அதிகப்படியான சோலார் உற்பத்தி தளங்கள் இணைக்கப்படாமல் உள்ளது.
பவர் கிரிட்-ஐ மேம்படுத்த பெரும் முதலீடு தேவை எனவும் இதற்கு நீண்ட நெடிய ஆய்வுகள் தேவை எனவும் CSTEP அமைப்பின் தலைவர் ஜெய் அசுந்தி தெரிவித்தார்.
இதேவேளையில் ரினிவிபிள் எனர்ஜி உற்பத்தி அதிகரிக்கும் போது மின்சார சேமிப்பு கட்டாயம் அவசியம், இத்தகைய சேமிப்பு கட்டமைப்பு தான் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்படும் போது பயன்படுத்த உதவும்.
இந்த டிமாண்ட் மற்றும் பயன்பாட்டு மூலம் 2030க்குள் ரினிவிபிள் எனர்ஜி துறை 486 ஜிகாவாட் சந்தையாகவும், பேட்டரி ஸ்டோரேஜ் சந்தை 2031ல் 8.5 பில்லியன் டாலர் சந்தையாகவும் உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications