வழக்கமாக பட்ஜெட் உரையின் பார்ட் ஏ (Part A) நாட்டின் திட்டங்களை பற்றியும், பார்ட் பி (Part B) வரி மாற்றங்களை பற்றியும் பேசும். ஆனால் இந்த பட்ஜெட் 2026 -ல் ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட் காத்திருக்கிறது.
சுமார் 75 ஆண்டு கால பாரம்பரியத்தை தள்ளி வைத்துவிட்டு, இந்த முறை பார்ட் B பகுதியை இந்தியாவின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கான ரோட் மேப் ஆக மாற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெறும் வரி விகிதங்களை மட்டும் சொல்லாமல், அடுத்த 25 ஆண்டுகளுக்கான இந்தியாவின் பொருளாதார பாய்ச்சல், உற்பத்தித் துறை புரட்சி மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியாவின் ஆதிக்கம் எப்படி இருக்கப்போகிறது என்பதை இந்தப் பகுதி விலாவாரியாக விளக்கப் போகிறது.

சுருக்கமாக சொன்னால், இது ஒரு வருடத்திற்கான பட்ஜெட் அல்ல, விக்சித் பாரத் 2047 என்ற இலக்கை அடைவதற்கான ஒரு மாஸ்டர் பிளான் ஆகவும் பார்க்கப்படுகிறது. முதலீட்டாளர்களும் பொருளாதார நிபுணர்களும் ஏன் இந்த முறையை சீர்திருத்த எக்ஸ்பிரஸ் என்று அழைக்கிறார்கள்? விரிவாகப் பார்ப்போமா..
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள தனது 9வது பட்ஜெட்டில், நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்த ஒரு மரபை மாற்றி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பார்ட் பி ஏன் இவ்வளவு முக்கியம்?
வழக்கமாக, பட்ஜெட் உரையின் பார்ட் ஏ பொருளாதார நிலை மற்றும் அரசின் திட்டங்களை பற்றியும், பார்ட் பி மிக சுருக்கமாக வரி மாற்றங்களைப் பற்றியும் மட்டுமே பேசும். ஆனால் இந்த முறை, நிதியமைச்சர் பார்ட் பி-ஐ இந்தியாவின் நீண்டகால பொருளாதார தொலைநோக்கு பார்வை மற்றும் சீர்திருத்தங்களுக்கான முதன்மை மேடையாக பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
சீர்திருத்த எக்ஸ்பிரஸ்:
இந்த பட்ஜெட்டை அதிகாரிகள் உள்நாட்டிலேயே சீர்திருத்த எக்ஸ்பிரஸ் என்று அழைக்கின்றனர். உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், இந்திய பொருளாதாரத்தை பாதுகாக்கவும், வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை அரசு முன்னெடுக்க உள்ளது. வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேளையில் , வெளிப்புற சிக்கல்களில் இருந்து பொருளாதாரத்தை பாதுகாக்கும் கட்டமைப்பு மாற்றங்களை எடுத்து செல்வதற்கான ஒரு வாய்ப்பாக இந்த பட்ஜெட் பாதிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுங்க வரி மற்றும் வர்த்தகச் சீர்திருத்தம்: பார்ட் பி-ல் சுங்க வரி தொடர்பான அதிரடி மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. குறிப்பாக அடிப்படை சுங்க வரி அடுக்குகளை சீரமைத்து, நடைமுறைகளை எளிதாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சட்ட ரீதியான சிக்கல்கள் மற்றும் வரி தொடர்பான வழக்குகளை குறைப்பதே இதன் நோக்கம் என்றும் கூறப்படுகிறது. இது சர்வதேச சந்தையில் இந்திய நிறுவனங்களின் போட்டித் தன்மையை அதிகரிக்க உதவும்.
ஒருங்கிணைந்த ஏற்றுமதி மற்றும் உற்பத்தி மண்டலங்கள்:
இந்திய வர்த்தகர்களை ஊக்குவிக்கும் விதமாக ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு சாதகமாக தற்போது உள்ள பல்வேறு திட்டங்களை ஒன்றிணைக்க அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZ), ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் (EOU) மற்றும் MOOWR போன்ற திட்டங்களை ஒன்றிணைத்து, ஒருங்கிணைந்த ஏற்றுமதி மற்றும் உற்பத்தி மண்டலம் (Unified Export and Manufacturing Zone) உருவாக்கப்படலாம். இது உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதோடு, ஏற்றுமதியை மேலும் வலுப்படுத்தும். மேலும் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் குறையும்.
இது தான் இலக்கு!?
மொத்தத்தில் இந்தியாவின் தற்போதைய திறன்களையும், எதிர்கால உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளையும் உலக நாடுகளுக்கு பறைசாற்றுவதே இந்த பட்ஜெட்டின் முக்கிய நோக்கமாக இருக்கும். இது சர்வதேச பொருளாதார நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications