மக்களே நோட் பண்ணுங்க.. 2030ல் இந்த 3 துறைகள்ல தான் அதிக வேலைவாய்ப்பு இருக்குமாம்..!

சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்தது, புதிய தொழில்நுட்பங்களின் வருகை உள்ளிட்டவை காரணமாக வேலைவாய்ப்பு சந்தையே பெரிய அளவில் மாற்றம் கண்டு இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு வேலைகளை பறித்திருக்கிறது, புதிதாக பல்வேறு வேலைகளை உருவாக்கி இருக்கிறது.

வேலைவாய்ப்பு: பாரம்பரியமாக கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஒரு வேலைக்கு சென்று செட்டிலாவது என்ற நிலை மாறி வேலைக்கு சென்றாலும் புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொண்டே இருந்தால் மட்டுமே அதை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை வந்திருக்கிறது. ஸெரோதா நிறுவனர் நிகில் காமத்தும் இதையே தான் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார் . அதில் 2030ஆம் ஆண்டுக்குள் எந்த வகையான வேலைகளுக்கெல்லாம் ஆட்கள் தேவைப்படுவார்கள் என்பது குறித்து அவர் விவரித்து இருக்கிறார்.

மக்களே நோட் பண்ணுங்க.. 2030ல் இந்த 3 துறைகள்ல தான் அதிக வேலைவாய்ப்பு இருக்குமாம்..!

எதிர்கால வேலைவாய்ப்புகள்: தனிப்பட்ட முறையில் நான்கு ஆண்டுகள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்வது என்பது என்ற காலம் மலை ஏறிவிட்டது இனி வாழ்க்கை முழுவதும் நாம் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொண்டிருந்தால் மட்டுமே வேலையை தக்க வைத்துக் கொள்ள முடியும் என அறிவுரை வழங்கியிருக்கிறார். உலக பொருளாதார கூட்டமைப்பு எதிர்கால வேலை வாய்ப்புகள் என்ற பெயரில் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2030 ஆம் ஆண்டு உலக அளவில் வேளாண்மை பிரிவில் அதிக அளவு வேலை வாய்ப்பு உருவாகும் என தெரிவித்திருக்கிறார்.

டெலிவரி சேவைகள்: அடுத்ததாக மென்பொருள் மற்றும் செயலிகளை மேம்படுத்தும் பிரிவுகளில் வேலை வாய்ப்புகள் அதிகமாகும் என்றும் டெலிவரி சேவைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் தெரிவித்து இருக்கிறார். வேளாண்மையையும் தொழில்நுட்பத்தையும் இணைக்கக்கூடிய வகையிலான வேலை வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன என அவர் கூறியிருக்கிறார். மக்கள் நவீன வாழ்க்கை முறையை நோக்கி மாறி வருகின்றனர், அனைத்தையும் ஒரு கிளிக்கில் ஆர்டர் செய்து பெறுகின்றனர். இது நகரங்களை கடந்து கிராமங்களையும் சென்றடைந்து விட்டது எனவே டெலிவரி வேலைகளுக்கு அதிக டிமாண்ட் இருக்கும் என தெரிவித்திருக்கிறார் .

எந்த வேலைகள் மறையும்: கிளார்க், அட்மின், கேஷியர் போன்ற வேலைகள் எல்லாம் படிப்படியாக மறைந்து விடும் என்றும் டேட்டா சார்ந்த , தொழில்நுட்பம் சார்ந்த வேலைகள் அதிகரிக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார் .2030ஆம் ஆண்டுக்குள் 178 மில்லியன் வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாகும் என்றும் 92 மில்லியன் வேலை வாய்ப்புகள் பறிபோகும் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

ஏஐ கருவிகள்: தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஐடி உள்ளிட்ட துறைகளில் மனிதர்களின் வேலைகளை செய்ய தொடங்கிவிட்டது 2030-ம் ஆண்டுக்குள் இது இன்னும் அதிகரிக்கும் என்றும் நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பாதியாக குறைத்து விட்டு அதற்கு நிகராக செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்த தொடங்கி விடும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

சைபர் செக்யூரிட்டி: 2030 ஆம் ஆண்டுக்குள் என்னென்ன வகையிலான வேலையை என்னென்ன திறன்களை வளர்த்துக் கொண்டால் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதையும் அவர் பட்டியலிட்டுள்ளார். அதன்படி ஏஐ மற்றும் டேட்டா சம்பந்தப்பட்ட திறன்களை கொண்டவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறியிருக்கிறார். அடுத்ததாக சைபர் செக்யூரிட்டி பிரிவில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் டெக்னாலஜிக்கல் லிட்ரசி பிரிவில் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் கூறுகிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீடித்த நிலைத்தன்மை கொண்ட பூமிக்கு தீங்கு ஏற்படுத்தாத தொழில்கள் நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+