மருந்து நிறுவனங்களுக்கு செக்.. உலோக இறக்குமதிக்கும் லாக்.. மீண்டும் டிரம்ப் ஆடுபுலி ஆட்டம்?

அமெரிக்காவின் ஆட்டம் மீண்டும் தொடங்கி விட்டது. உலக வர்த்தக களத்தில் டிரம்ப்பின் ஒவ்வொரு அறிவிப்பும் சர்வதேச நிறுவனங்களை ஆட்டம் காண வைத்து வருகிறது. ஒரு பக்கம் உயிர்காக்கும் மருந்து நிறுவனங்களுக்கு 100% வரி விதிப்பு மூலம் செக் வைத்த கையோடு, மறுபக்கம் உலோக இறக்குமதி விதிகளில் லாக் போட்டு சர்வதேச சந்தையையே அதிர வைத்திருக்கிறார்.

ஏற்கனவே ஈரான் போர் மூலம் எரிசக்தி சந்தையில் ஆட்டத்தை ஆடி வரும் அமெரிக்கா, தற்போது வர்த்தகப் போர் மூலம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஈரான் - அமெரிக்கா இடையிலான பதற்றம் மத்தியில் சில வாரங்களாகவே வரி போர் குறித்து அமைதி காட்டி வந்த டிரம்ப், தற்போது மீண்டும் ஆட்டத்தை ஆட ஆரம்பித்துள்ளார். அமெரிக்க பொருளாதாரத்தை பலப்படுத்த டிரம்ப் ஆடும் சாமர்த்தியமான ஆடுபுலி ஆட்டமா இது? உலக நாடுகளின் புருவங்களை உயர செய்துள்ள இந்த அதிரடி நகர்வுகளின் பின்னணியையும், அதன் தாக்கத்தையும் விரிவாக பார்ப்போம்.

மருந்து நிறுவனங்களுக்கு செக்.. உலோக இறக்குமதிக்கும் லாக்.. மீண்டும் டிரம்ப் ஆடுபுலி ஆட்டம்?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது மிகவும் விருப்பமான தேசம் (Most Favored Nation) என்ற விலை நிர்ணய திட்டத்தில் இணையாத மருந்து நிறுவனங்களை குறிவைத்து, ஒரு விரிவான வரி திட்டத்தை வெளியிட்டுள்ளார். இத்துடன் உலோக இறக்குமதி வரிகளிலும் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.

இந்த புதிய கொள்கையின்படி, இறக்குமதி செய்யப்படும் சில காப்புரிமை பெற்ற மருந்துகள் மற்றும் அவற்றின் முக்கிய மூலப்பொருட்கள் மீது 100% வரி விதிக்கப்படுகிறது. இது மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை அமெரிக்காவிற்கு மாற்றவும், அங்கிருந்து உற்பத்தி செய்து அமெரிக்க நுகர்வோருக்கு நேரடியாக குறைந்த விலையில் மருந்துகளை வழங்கவும் கட்டாயப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகவும் பார்க்கப்படுகிறது.

இதில் கவலையளிக்கும் மற்றொரு விஷயம் என்னவெனில் பெரிய மருந்து நிறுவனங்கள் இந்த விதிகளுக்கு இணங்க 120 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதே சிறிய நிறுவனங்களுக்கு 180 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவிற்கு பிறகு, அதாவது இந்த கோடைகாலத்தின் பிற்பகுதியில் இந்த வரி விதிப்பு அமலுக்கு வரும்.

இது குறித்து முக்கிய அதிகாரிகள் உள்நாட்டு உற்பத்தியை விரைவுபடுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று கூறுகின்றனர். ஏற்கனவே இது குறித்து பல எச்சரிக்கை விடுத்தாயிற்று. ஆக இதை விரைவில் அமலுக்கு கொண்டு வருவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

எனினும் உற்பத்தியாளர்களை ஈர்க்க இந்த வரி அறிவிப்பில் வரி விலக்குகளும் இடம் பெற்றுள்ளன. அதாவது விலை நிர்ணய திட்டத்தில் இணைபவர்களுக்கு அல்லது அமெரிக்காவில் உற்பத்தி செய்பவர்களுக்கு வரி குறைப்பு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் உற்பத்தி செய்பவர்களுக்கு 20% வரி குறைப்பு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென் கொரியா மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஏற்கனவே வர்த்தக ஒப்பந்தம் வைத்துள்ள பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்கு சுமார் 15% குறைந்தபட்ச வரியும், இங்கிலாந்து சார்ந்த நிறுவனங்களுக்கு சுமார் 10% வரியும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் அலுமினியம், காப்பர், இரும்பு போன்ற உலோகங்களின் இறக்குமதி வரிகளை மாற்றியமைக்கும் உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அத்துடன் வீட்டு உபயோகப் பொருட்கள் அல்லது அதிக உலோகம் கொண்ட இயந்திரங்களை இந்தியா ஏற்றுமதி செய்தால், அவற்றுக்கும் 25% வரி விதிக்கப்படும்.

இந்தியா சர்வதேச அளவில் ஜெனரிக் மருந்துகளின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராகவும், அமெரிக்காவுக்கு மருந்து சப்ளை செய்யும் முக்கிய நாடாகவும் இருக்கிறது. தற்போதைய சூழலில் இந்தியாவுக்கு, அமெரிக்காவுடன் எந்த நேரடி விலை நிர்ணய ஒப்பந்தமும் இல்லை. ஆக அமெரிக்காவுக்கு மருந்து மற்றும் மருந்து மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்கள் 100% வரி வளையத்திற்குள் வரலாம்.

இதேபோன்று இந்தியாவிடமிருந்து ஸ்டீல் மற்றும் அலுமினியம் ஆகியவற்றை அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. இவற்றிற்கு அமெரிக்க கொள்முதல் விலை அடிப்படையில் வரி கணக்கிடும் என்பதால் வரி சுமை அதிகரிக்கவும் வாய்ப்புண்டு. இதன் எதிரொலியாக மருந்து மற்றும் உலோகங்கள் சார்ந்த பங்குகளிலும் வரும் திங்கட்கிழமை அன்று சந்தையிலும் எதிரொலிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+