சென்னை: இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8ஆவது சம்பள கமிஷன் எந்த ஃபிட்மெண்ட் ஃபேக்டர் அடிப்படையில் சம்பளத்தையும் ஓய்வூதிய தொகையையும் மாற்ற இருக்கிறது என்று அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.
சம்பள கமிஷன்: இந்தியாவில் சம்பள கமிஷன் பரிந்துரை அடிப்படையில் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளமும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையும் நிர்ணயம் செய்யப்படுகிறது .10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு சம்பளம் மற்றும் ஓய்வூதிய தொகை மாற்றப்படுகிறது. ஏழாவது சம்பள கமிஷன் தற்போது நடைமுறையில் இருக்கும் நிலையில் 8ஆவது சம்பள கமிஷனை வரும் ஜனவரி மாதத்தில் இருந்து மத்திய அரசு அமல்படுத்தியாக வேண்டும்.

8ஆவது சம்பள கமிஷன்: அரசு சார்பில் 8ஆவது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு இருக்கிறது. 8ஆவது சம்பள கமிஷன் எவ்வளவு ஃபிட்மண்ட் ஃபேக்டரை பயன்படுத்தப் போகிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. 7ஆவது சம்பள கமிஷன் 2.57 என்ற ஃபிட்மண்ட் ஃபேக்டரை அடிப்படையாகக் கொண்டுதான் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தையும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையும் நிர்ணயம் செய்தது.
7ஆவது சம்பள கமிஷனில் எவ்வளவு உயர்ந்தது?: 7ஆவது சம்பள கமிஷனில் ஓய்வூதிய தொகை குறைந்தபட்சம் 9,000 ரூபாய் என்றும் அதிகபட்சம் 1, 25,000 ரூபாய் என்றும் உயர்ந்தது. இந்த முறை 1.95 முதல் 2.45க்குள் ஃபிட்மண்ட் ஃபேக்டர் இருக்கும் என சிலர் கணிப்பு வெளியிட்டுள்ளனர். இதன்படு ஓய்வூதிய தொகை எவ்வளவு உயரும் என தெரிந்து கொள்ளலாம்.
எவ்வளவு உயர வாய்ப்பு: லெவல் 2 நிலையில் வேலை செய்த ஒரு மத்திய அரசு ஊழியருக்கு தற்போது கிடைக்கக்கூடிய அடிப்படை ஓய்வுதிய தொகை 13,800 ஆக இருக்கிறது. இதில் ஃபிட்மண்ட் ஃபேக்டர் 1.95 என கொண்டால் ஓய்வூதிய தொகை 26,910ஆக உயரும், 2.45 என கொண்டால் ஓய்வூதிய தொகை 33,810 ஆக அதிகரிக்கும். லெவல் 11 நிலையில் பணியாற்றி மாதம் 46,900 ரூபாய் ஓய்வூதியம் பெறும் ஒரு நபர் ஃபிட்மண்ட் ஃபேக்டர் 1.95 என கொண்டால் 91,455 ரூபாய் ஓய்வூதியம் பெறுவார். 2.45 என கொண்டால் ஓய்வூதிய தொகை 1,14,905 ரூபாய் ஆக அதிகரிக்கும்.
என்ன நிலவரம்?: தற்போதைய சூழலில் மத்திய அரசு எட்டாவது ஊதிய குழு தொடர்பான அறிவிப்பை மட்டுமே வெளியிட்டு இருக்கிறது ,இதன் உறுப்பினர்கள் , வரைமுறைகள் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இனிவரும் நாட்களில் தான் முறைப்படி உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்கள் அனைத்து தரப்பு கருத்தையும் கேட்டு சம்பளங்களை மாற்றி அமைப்பார்கள். பின்னர் இது மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் அதை ஏற்றால் தான் நடைமுறைக்கு வரும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications