நவீன டிஜிட்டல் உலகில் நாம் அனைவரும் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் ஒரு சிக்கல், தனிப்பட்ட தரவுகளை வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்துவதுதான். நாம் இணையத்தில் தேடும் ஒரு பொருள், சமூக வலைதளத்தில் விவாதிக்கும் ஒரு விஷயம் அல்லது நாம் பார்வையிடும் ஓர் இடம் என எதுவாக இருந்தாலும், அடுத்த சில நிமிடங்களில் அதனுடன் தொடர்புடைய விளம்பரங்கள் நமக்கு காண்பிக்கப்படும்.
இந்த செயல்பாடு Targeted Advertising என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக, நாம் ஒரு டிஜிட்டல் சேவையை இலவசமாக பயன்படுத்தும்போது, அந்த சேவைக்கு பின்னணியில் உள்ள நிறுவனங்கள் நமது தரவுகளையும், விருப்பங்களையும், இருப்பிடத்தையும் கண்காணித்து சேகரிக்கின்றன. இந்தத் தரவுகள்தான் விளம்பரதாரர்களுக்கு விற்கப்படுகின்றன.

இது வெறும் விளம்பரத்தை காண்பிப்பது மட்டுமல்ல.. ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை தகவல்களை, அவர்களின் ஒப்புதல் இன்றி பணம் ஈட்டும் கருவியாக பயன்படுத்துவதுதான் இந்த மீறலுக்கு முக்கியக் காரணம். ஆனால், இந்த செயல்பாட்டை ஜோஹோ (Zoho) நிறுவனம் மிக கடுமையாக எதிர்க்கிறது. பெரும்பாலான தொழில்நுட்ப ஜாம்பவான்கள் இந்த விளம்பர அடிப்படையிலான வணிக மாதிரியை நம்பியிருக்கும்போது, ஜோஹோ நிறுவனம் ஒரு மாறுபட்ட பாதையைத் தேர்வு செய்துள்ளது.
ஜோஹோவின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, இந்த மீறல் உணர்வைப் புரிந்துகொண்டு, தங்கள் கொள்கையை தெளிவாக வகுத்துள்ளார். "உங்கள் தரவுகளைப் பயன்படுத்தி உங்களுக்குப் பொருட்களை விற்க மாட்டோம்" என்று தெளிவுபடுத்தியுள்ளார். இந்த உறுதியான கொள்கை மூலம், ஜோஹோ தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு முக்கியப் பலன்களை வழங்குகிறது:
நம்பிக்கை : விளம்பரங்களுக்காக தனது தரவுகள் பயன்படுத்தப்படாது என்ற நிம்மதி தனிப்பட்ட பயனர்களுக்கு கிடைக்கிறது.
ரகசிய பாதுகாப்பு : ஜோஹோ சேவைகளைப் பயன்படுத்தும் நிறுவனங்களின் வர்த்தக ரகசியங்கள் மற்றும் வாடிக்கையாளர் தரவுகள், விளம்பரம் சார்ந்த தரவு சுரண்டல் அமைப்புகளுக்குள் கசியும் ஆபத்து முற்றிலும் தடுக்கப்படுகிறது.
இதன் மூலம், ஜோஹோ தனது வாடிக்கையாளர்களுக் தன் சேவைகளை விலை கொடுத்து வாங்குவதற்குப் பதிலாக, தங்கள் தனியுரிமையை பாதுகாப்பாக பெறுகிறோம் என்ற நம்பிக்கையை வழங்குகிறது. இந்த உறுதியான நிலைப்பாடு, லாபத்தை விட வணிக நெறிமுறைகளுக்கும் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் ஒரு புதிய டிஜிட்டல் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது.
அரட்டை செயலிக்கு குவியும் ஆதரவு : நவீன தொழில்நுட்ப உலகில் மக்களின் அன்றாட தொடர்புகளில் சமூக வலைதளங்கள் தவிர்க்க முடியாத இடத்தை வகிக்கின்றன. இருப்பினும், இந்தத் தளங்களில் பெரும்பாலானவை வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளாகவே உள்ளன. இந்த சூழலில், உள்நாட்டுப் போட்டியாளராக களம் இறங்கிய ஜோஹோ நிறுவனத்தின் அரட்டை செயலி, இந்திய மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதேபோல், இன்றைய நிலவரப்படி கூகுள் பிளே ஸ்டோரில் அரட்டை செயலியை பதிவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications