பிரபல ஹெச்பி (HP) நிறுவனம் தங்களுடைய ஊழியர்களில் 2500 பேரை பணியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் ஊழியர் பணி நீக்க நடவடிக்கையை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.
Hewlett Packard Enterprise எனப்படும் ஹெச்பி நிறுவனம் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் தங்கள் நிறுவனத்தில் இருந்து 2500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அண்மையில் ஹெச்பி நிறுவனத்தின் நிதி நிலவரங்கள் வெளியிடப்பட்டன. அதில் எதிர்பார்த்த அளவு நிறுவனம் லாபம் அடையாததால் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் அதன் ஒரு பகுதியாக ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் ஹெச்பி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து ஹெச்பி நிறுவனத்தின் பங்கு மதிப்பு 19% வரை குறைந்தது.

தரவுகளை சேமித்து பராமரிக்கக் கூடிய மிகப்பெரிய சர்வர்களை ஹெச்பி நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது. அண்மையில் இந்த நிறுவனம் தங்களுடைய கடைசி காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் வருமானம் முந்தைய ஆண்டு விட 16 சதவீதம் அதிகரித்து இருந்தாலும் எதிர்பார்த்த அளவு வருமானம் உயரவில்லை என ஹெச்பி நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்விடியா நிறுவனத்தின் சமீபத்திய சிப்புகளுக்கு தேவைப்படும் வகையிலான செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட சர்வர்களை இந்த நிறுவனம் அதிக அளவில் உற்பத்தி செய்து வருகிறது. இதனால் தங்களுடைய பாரம்பரிய சர்வர்களை தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறது. இதுவே நிறுவனத்தின் வருமானம் குறைந்ததற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சிக்கன நடவடிக்கையாக 2500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக கூறியுள்ளது. இதன் மூலம் 2027 ஆம் ஆண்டுக்குள் ஹெச்பி நிறுவனம் 150 மில்லியன் டாலர்களை மிச்சப்படுத்த முடியும் எனக் கூறுகிறது. ஹெச்பி நிறுவனத்தில் 61 ஆயிரம் பேர் பணிபுரியும் நிலையில் இந்த பணி நீக்க நடவடிக்கை மூலம் ஐந்து சதவீத ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஹெச்பி நிறுவனம் தற்போது நவீன செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட சாதனங்களோடு போட்டியிட வேண்டி இருப்பதால் ஏற்கனவே இது தயாரித்து வைத்த பாரம்பரிய சாதனங்களை எல்லாம் தற்போது குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறது. இதனால் நிறுவனத்தின் வருமானமும் லாபமும் பெருமளவு சரிவடைந்துள்ளது. அதே வேளையில் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட சாதனங்களை உருவாக்குவதற்கு இந்த நிறுவனம் அதிக தொகையை முதலீடு செய்ய வேண்டி இருக்கிறது. எனவே இந்த நிறுவனத்தின் மீது முதலீட்டாளர்கள் படிப்படியாக நம்பிக்கையை இழந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Story Written: Devika
More From GoodReturns

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications