எல்லாரையும் வேலையை விட்டு அனுப்பினேன் இப்போ என்னையே போக சொல்லிட்டாங்க: புலம்பும் HR..!!

உலகம் முழுவதுமே கார்ப்பரேட் நிறுவனங்களில் ஊழியர்கள் பணிநீக்கம் என்பது வாடிக்கையாகி விட்டது. திடீரென ஒரு மெயில் அனுப்பி இன்றே கடைசி நாள் என கூறி விடுகின்றனர் இல்லை எனில் ஹெச்.ஆர் உடன் ஒரு மீட்டிங் வைத்து வேலை இல்லை என அனுப்பி விடுகின்றனர். நடப்பாண்டில் மட்டும் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பெரும்பாலும் நிறுவனத்தில் சிக்கன நடவடிக்கைகள், ஏஐ பயன்பாட்டுக்கு ஏற்ப நிறுவனத்தின் மறுசீரமைப்பு என்பன உள்ளிட்ட காரணங்களை கூறி தான் ஊழியர்கள் பணிநீக்கமே நடக்கிறது. இப்படி ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கும் கடினமான பொறுப்பை மனிதவள துறை எனப்படும் ஹெச்.ஆர் அதிகாரிகள் தான் மேற்கொள்கின்றனர். இப்படி ஊழியர்களை பணிநீக்கம் செய்து வந்த தன்னையே நிறுவனம் தூக்கி எறிந்து விட்டதாக ஹெச்.ஆர் அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள பதிவு கவனத்தை பெற்றுள்ளது.

எல்லாரையும் வேலையை விட்டு அனுப்பினேன் இப்போ என்னையே போக சொல்லிட்டாங்க: புலம்பும் HR..!!

அமெரிக்காவை சேர்ந்த மீடியா நிறுவனத்தில் ஹெச்.ஆர் மேனேஜராக இருந்த பாப்பி பவர்ஸ் இது தொடர்பாக பிஸ்னஸ் இன்ஸைடருக்கு அளித்துள்ள பேட்டியில், தங்கள் நிறுவனத்தில் திடீரென ஆட் குறைப்பு மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனை நான் சிறப்பாக கையாண்டேன். இதற்காக நிறுவனம் என்னை பாராட்டியது என கூறியுள்ளார்.

Also Read

ஆட் குறைப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டேன் என கூறி நிறுவனத்தில் பதவி உயர்வும் வழங்கப்பட்டது. இந்த பதவி உயர்வின் மூலம் எனது சம்பளம் கணிசமாக உயர்ந்தது என கூறியுள்ளார். நிறுவனத்தின் அடுத்தடுத்த வணிக மாற்றங்கள் மற்றும் பொருளாதார சூழல்களால் நிலைமை மாறியது. மற்றவர்களை வேலையைவிட்டு நீக்க உதவிய என்னையே வேலையில் இருந்து நீக்கிவிட்டனர் என கூறியுள்ளார்.

நிறுவனத்தில் பதவி உயர்வு பெற்று அதிக சம்பளம் வாங்க தொடங்கியதே எனது வேலை பறிபோக முக்கிய காரணமாக அமைந்தது என்கிறார். நிறுவனங்கள் செலவை குறைக்க திட்டமிடும்போது, உயர் பதவிகளில் இருக்கும் அதிக சம்பளம் பெறும் நபர்களை தான் முதலில் குறி வைக்கும் அதுவே எனக்கும் நடந்தது என கூறியுள்ளார்.

Recommended For You

இந்த சம்பவம் கார்ப்பரேட் ஊழியர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது. மற்றவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வேலையை செய்பவர்களுக்கே இறுதியில் அந்த நிலை ஏற்படுவது காலத்தின் விசித்திரம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.மேலும், நிறுவனங்களுக்கு எவ்வளவுதான் விசுவாசமாக செயல்பட்டாலும், கார்ப்பரேட் உலகில் மனிதவள துறை ஊழியர்களுக்கும் பாதுகாப்பில்லை என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது லாப நோக்கத்திற்காகவும், செலவை குறைப்பதற்காகவும் எடுக்கும் அதிரடி முடிவுகள் எப்போதும், யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம் என்பதற்கு இந்த மனிதவள துறை அதிகாரியின் கதையே ஒரு சிறந்த உதாரணமாக மாறிவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+