HSBC திங்கட்கிழமை திவாலாகி பெரும் நெருக்கடியில் சிக்கிய அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கியின் பிரிட்டன் துணை நிறுவனத்தை வெறும் 1 பவுண்டுக்கு வாங்குவதாகக் கூறியுள்ளது. பிரிட்டனில் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு முக்கிய கடன் வழங்கும் நிறுவனமாக விளங்கி வருகிறது சிலிக்கான் வேலி வங்கி.
சிலிக்கான் வேலி வங்கி வீழ்ச்சியின் ஆதிக்கம் மிகவும் பெரியது, என்பதால் பிரச்சனை பெரியதாக வெடிக்கும் முன்பு அமெரிக்க அரசு அனைத்து SVB டெபாசிட் கணக்குகளின் பணத்தை முழுமையாக அணுக அனுமதி அளித்துள்ளது மட்டும் அல்லாமல் அவசர நிதிக்கு அதிகப்படியான தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தான் சிலிக்கான் வேலி வங்கி-யின் பிரிட்டன் துணை நிறுவனத்தை வெறும் 1 பவுண்டுக்கு வாங்குவதாக HSBC தெரிவித்துள்ளது.
சிலிக்கான் வேலி வங்கி
சிலிக்கான் வேலி வங்கி-யின் பிரிட்டன் துணை நிறுவனத்தை கையகப்படுத்துவது மூலம் இங்கிலாந்தில் எங்கள் வணிகத்திற்கு சிறந்த மூலோபாய அர்த்தத்தை அளிக்கிறது என்று HSBC CEO நோயல் க்வின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசு
அமெரிக்க அரசு சிலிக்கான் வேலி வங்கி வாடிக்கையாளர்களின் டெபாசிட்களை முழுமையாக அளிக்க போதுமான நிதி ஆதாரத்தை அளிப்பதாக உறுதி அளித்த நிலையில், ஸ்டார்ட்-அப் சந்தையில் நிதி ஆதாரமாக விளங்கும் சிலிக்கான் வேலி வங்கியின் பெறும் சரிவில் இருந்து தப்பித்துள்ளது.
பிரிட்டன் வங்கி
இந்த அறிவிப்பு வெளியான பிறகு, பிரிட்டனின் வங்கி கட்டமைப்புக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் நன்றாக இருப்பதாக அந்நாட்டின் மத்திய வங்கியான பேங்க் ஆப் இங்கிலாந்து கூறியது.
பாதிக்கப்படவில்லை
சிலிக்கான் வேலி வங்கி-யின் வீழ்ச்சி மற்றும் அமெரிக்க அரசின் உத்தரவாதம் மூலம் பிரிட்டன் நாட்டின் வங்கிகளும் நேரடியாகவோ, பொருள் ரீதியாகவோ பாதிக்கப்படவில்லை. இதன் மூலம் பிரிட்டன் வங்கி அமைப்பு பாதுகாப்பாகவும், உறுதியானதாகவும், போதுமான மூலதனம் கொண்ட சந்தையாக விளங்குகிறது.
சிலிக்கான் வேலி வங்கி பிரிட்டன் கிளை
தற்போது சிலிக்கான் வேலி வங்கி-யின் பிரிட்டன் கிளை அமெரிக்க வங்கியில் இருந்து தனியாக பிரிக்கப்பட உள்ளது, இது மட்டும் அல்லாமல் பிரிட்டன் கிளை மற்றும் அமெரிக்க நிறுவன தொடர்புடைய சொத்துக்கள், கடன் நிலுவைகள் இந்த ஒப்பந்தத்தில் சேராது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
1 பவுண்ட் தொகை
இதன் மூலம் சிலிக்கான் வேலி வங்கி பிரிட்டன் கிளை வர்த்தகத்தை மட்டும் தனியாக பிரித்து 1 பவுண்ட் தொகைக்கு வாங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா - பிரிட்டன் அரசுகள் மத்தியில் நடந்த வீக்கெண்ட் பேச்சுவார்த்தை மற்றும் பதற்றமான சூழ்நிலை தீர்ந்துள்ளது.
புத்தக மதிப்பு
மார்ச் 10 ஆம் தேதி நிலவரப்படி சிலிக்கான் வேலி வங்கி பிரிட்டன் நிறுவனம் சுமார் 5.5 பில்லியன் பவுண்ட் மதிப்பிலான கடன்களையும், 6.7 பில்லியன் பவுண்ட் மதிப்பிலான டெப்பாசிட்களையும் கொண்டு இருந்தது என HSBC தெரிவித்துள்ளது. மொத்த வர்த்தக புத்தகத்தின் மதிப்பு 8.8 பில்லியன் பவுண்ட் என மதிப்பிடப்படுகிறது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய வங்கி
எச்எஸ்பிசி ஐரோப்பாவின் மிகப்பெரிய வங்கியாகும், தற்போது SVB UK வாங்குவது மூலம் இவ்வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுக்கான வலிமை, பாதுகாப்பை உணரவேண்டும் என பிரிட்டன் நாட்டின் நிதி அமைச்சர் ஜெர்மி ஹன்ட் கூறினார்.
SVB பிரிட்டன் கிளையை வாங்க OakNorth Bank, அபுதாபி அரசு முதலீட்டு நிறுவனமான ADQ ஆகியவை வாங்க துடித்தது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications