சர்வதேச சந்தையில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பல்வேறு டெக் ஜாம்பவான்களும் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் கூகுள் தொடங்கி மைக்ரோசாப்ட் வரையில் பல்வேறு நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையில் ஹெச்.எஸ்.பி.சி நிறுவனம் செலவு குறைப்பு நடவடிக்கையினை எடுத்துள்ளது.
போனஸ் கட்
வங்கி மற்றும் நிதியியல் சேவையில் ஈடுபட்டு வரும் ஹெச்.எஸ்.பி.சி வருடாந்திர போனஸ் தொகுப்பை 4% குறைத்து, 2022ல் 3.4 பில்லியனாகக் குறைத்தது. சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், வங்கியாளரின் வளர்ச்சியானது சரிவினைக் காணலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படி ஒரு அறிவிப்பு வந்திருக்கலாமென தெரிகிறது.
செலவு குறைப்பு நடவடிக்கை
மேற்கொண்டு வளர்ச்சியினை ஊக்குவிக்கவும், வளர்ச்சியினை தக்கவைத்துக் கொள்ளவும், செலவு குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஹெச்.எஸ்.பி.சி நிறுவனம் இப்படி நடவடிக்கையினை எடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
CEO சம்பள அதிகரிப்பு
ஹெச்.எஸ்.பி.சி ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு என்பது இருந்தாலும், இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நோயல் க்வினின் சம்பள விகிதம் 14% அதிகரித்து, 5.6 மில்லியன் பவுண்டுகளாக அதிகரித்துள்ளது. இது முன்னதாக 4.9 மில்லியன் பவுண்டுகளாக இருந்தது. நீண்ட கால ஊக்குவிப்பு தொகை என அனைத்தும் சேர்க்கப்பட்டவுடன் க்வினின் சம்பளம் 10.5 மில்லியன் பவுண்டுகளை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வலுவான லாபம் தான்
ஹெச்.எஸ்.பி.சி தனது 4வது காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ள நிலையில், 4வது காலாண்டில் வலுவான லாபத்தினை கண்டுள்ளது. எனினும் சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலையால், நிறுவனம் எச்சரிக்கையாக இருக்கிறது எனலாம். இந்த நிலையில் தான் ஊழியர்களுக்கான வங்கியின் போனஸ் தொகை கடந்த ஆண்டு செலுத்தப்பட்ட 3.5 பில்லியனை விட சற்று குறைவாக இருந்தது.
ஹெச்.எஸ்.பி.சி போனஸ்
ஹெச்.எஸ்.பி.சி போனஸ் (HSBC BONUS POOL) கடந்த 2013ல் 3.92 பில்லியன் டாலராக இருந்த நிலையில், அதில் இருந்து பார்க்கும்போது தொடர்ந்து 3 பில்லியனுக்கும் மேலாக இருந்தாலும், 2022ல் 3.36 பில்லியனாக குறைந்துள்ளது.
தொடர்ந்து போனஸ்
பிரிட்டிஷ் வங்கிகள் தொடர்ந்து நல்ல போனஸ் விகிதத்தினை கொடுத்து வரும் நிலையில், இதுபோன்ற அறிவிப்புகள் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவினைக் கண்டு வருவதையே சுட்டிக் காட்டுகின்றது. வங்கிகளில் தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரித்து வரும் சூழலில், எரிபொருள் விலை அதிகரிப்பு என பல காரணிகளும் பணவீக்கத்தினை ஊக்குவித்துள்ளன. இது ஒவ்வொரு பொருளிலும் விலையேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.


Click it and Unblock the Notifications