உலகின் மிக பழமையான வங்கிகளில் ஒன்றான ஹெச்எஸ்பிசி, 2023ஆம் நிதியாண்டில் இந்தியாவில் வங்கி சேவைகள் மூலம் 25 சதவீத அதிக லாபம் அடைந்திருப்பதாக அறிவித்துள்ளது. இந்திய பொருளாதாரம் சீரான நிலையில் வளர்ந்து வருவதே இதற்கு முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளது.
ஹெச்எஸ்பிசி வங்கி: 1860களில் ஹாங்காங்கில் பிரிட்டன் ஆதிக்கத்தின் போது நிறுவப்பட்டது தான் ஹாங்காங் & ஷாங்காய் பேங்கிங் கார்ப்பரேசன் லிமிடெட் எனப்படும் ஹெச்எஸ்பிசி வங்கி.

தற்போது பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு பல்வேறு நாடுகளிலும் வங்கிச் சேவை அளித்து வருகிறது. ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய வங்கி என அழைக்கப்படும் ஹெச்எஸ்பிசி வங்கி 1983ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் வங்கிச் சேவைகளை அளித்து வருகிறது.
இந்தியாவில் 42 ஆயிரம் ஊழியர்களைக் கொண்டு மும்பையை தலைமையிடமாக வைத்து ஹெச்எஸ்பிசி செயல்பட்டு வருகிறது.இந்த வங்கி 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்திர நிதி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் 25% லாபம் அதிகரிப்பு: 2023ஆம் நிதியாண்டில் ஹெச்எஸ்பிசி இந்திய வங்கியின் செயல்பாடுகளின் மூலம் 25 விழுக்காடு லாபம் அதிகரித்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதவாது 2023இல் இந்திய செயல்பாடுகளின் மூலம் வங்கிக்கு 1.51 பில்லியன் அமெரிக்க டாலர் லாபம் கிடைத்துள்ளது என புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரி கழிவுகள் இல்லாமல் இந்த கணக்கீட்டை வங்கி வெளியிட்டுள்ளது. இதுவே 2022ஆம் நிதியாண்டில் இந்தியாவில் வங்கிச்சேவைகள் மூலம் அந்த வங்கிக்கு கிடைத்த லாபம் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
சீனாவின் இடத்தை பிடித்த இந்தியா: உலகளவில் பல்வேறு நாடுகளிலும் சேவை அளித்து வரும் ஹெச்எஸ்பிசி வங்கி, 2023ஆம் ஆண்டில் தங்களுக்கு லாபம் அளித்த பிராந்தியங்களின் பட்டியலில் இந்தியா மூன்றாமிடத்தை பிடித்துள்ளது என கூறியுள்ளது.
இதற்கு முன்பு சீனா மூன்றாமிடத்தில் இருந்த நிலையில் தற்போது அந்த இடத்தை இந்தியா பெற்றுள்ளது என தெரிவித்துள்ளது. இந்த வங்கிக்கு லாபம் அளித்த நாடுகளில் ஹாங்காங் முதலிடத்திலும் பிரிட்டன் இரண்டாமிடத்திலும் உள்ளன.
சீனாவில் இந்த வங்கியின் லாபத்தில் 89 விழுக்காடு சரிந்துள்ளது. 2022இல் 3.40 பில்லியன் டாலர்களாக இருந்து தற்போது 37 மில்லியனாக குறைந்துள்ளது.
இந்திய பொருளாதாரம் வளர்கிறது: அண்மை காலமாக இந்தியா, சிங்கப்பூர், சவுதி ஆகிய நாடுகளில் தங்கள் வங்கியின் லாபம் அதிகரிக்க தொடங்கி இருப்பதாக ஹெச்எஸ்பிசி வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது. எதிர்பார்க்கும் கடன் இழப்பு ஒதுக்கீடு என்பது 2022 ஆம் ஆண்டில் 90 மில்லியன் டாலராக இருந்துள்ளது.
இது 2023 ஆம் ஆண்டில் 51 மில்லியன் டாலராக குறைந்தது லாபம் கிடைக்க காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய வங்கிச் சேவைகள் மற்றும் சந்தைகள் பிரிவு, இந்தியாவில் ஹெஎஸ்பிசியின் முதன்மை வருவாய் ஆதாரமாக மாறியுள்ளது. இது முந்தைய ஆண்டில் 62 மில்லியன் டாலர்களில் இருந்து 2023 ஆம் ஆண்டு 774 மில்லியன் டாலர்களாக 24 விழுக்காடு உயர்ந்துள்ளது.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பொருளாதாரங்கள் 2024 ஆம் ஆண்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ள ஹெச்எஸ்பிசி வங்கி, இந்தியாவும் வியட்நாமும் தற்போது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளன என தெரிவித்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications