ஹெச்எஸ்பிசி என சுருக்கமாக அழைக்கப்படும் Hong Kong and Shanghai Banking Corp வங்கி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் தனது தனியார் வங்கி வணிகத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. சமீபத்தில் சிட்டிபேங்க் குரூப் இந்திய வர்த்தகத்தை மூடிவிட்டு வெளியேறியது யாராலும் மாற்ற முடியாது..
இந்த நிலையில் HSBC 8 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் இந்தியாவில் தனது சேவையை துவங்க என்ன காரணம்..? 8 வருடத்திற்கு முன்பு HSBC இந்தியாவை விட்டு வெளியேற என்ன காரணம்..?

சுவிஸ் கிளையில் கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு நாணயக் கணக்குகளை வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக இந்திய வருமான வரி துறையின் விசாரணையின் மத்தியில் பல்வேறு காரணங்களுக்காக HSBC 8 ஆண்டுகளுக்கு முன்பு தனது பிரைவேட் பேங்கிங் பிரிவை மூடியது. இதை தொடர்ந்து தற்போது இந்தியாவில் மீண்டும் தனது தனியார் வங்கி வணிகத்தை தொடங்கியுள்ளது.
பிரைவேட் பேங்கிங் பிஸ்னஸ் என்பது 2 மில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீடு செய்யக்கூடிய சொத்துக்களை கொண்ட அதிக நிகர சொத்து மதிப்பு (HNW) மற்றும் அதி உயர் நிகர சொத்து மதிப்பு (UHNW) கொண்ட தனிநபர்களுக்கும் மற்றும் குடும்பங்களுக்கு மட்டுமே வழங்க கூடிய சிறப்பு நிகி சேவைகளாகும்.
உலகிலேயே மிகப்பெரிய மற்றும் வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உயர்ந்திருக்கும் வேளையில் நாட்டின் டிஜிட்டல் மயமாக்கல், வேகமாக வளரும் உள்கட்டமைப்பு ஆகியவற்றால் பணக்காரர்களின் எண்ணிக்கை கடந்த 10 வருடத்தில் பெரிய அளவில் அதரித்துள்ளது.
இத்தகைய சரியான நேரத்தில் HSBC நாட்டின் பெரும் பணக்காரர்கள் டார்கெட் செய்து 8 வருடங்களுக்கு பின்பு தனது பிரைவேட் பேங்கிங் சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதுக்குறித்து HSBC கூறுகையில் எங்களூடைய ரீடைல் மற்றும் கார்ப்பரேட் வங்கி சேவையுடன் இன்று அறிமுகம் செய்துள்ள ப்ரைவேட் பேங்கிங் சேவைகள் பெரிய அளவில் பலன் அளிக்கும் என HSBC ஆசியா-பசிபிக் பிரிவின் இணை தலைமை நிர்வாக அதிகாரி சுரேந்திரா ரேஷா தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டில் பிரிட்டன் நாட்டை பின்னுக்குத்தள்ளி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்தது மட்டும் அல்லாமல் 2027-28 ஆம் ஆண்டில் ஜப்பான் மற்றும் ஜெர்மனியை முந்திவிடும் என்று ஐநா பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.
இதேவேளையில் இந்தியாவில் 30 மில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்யக் கூடிய மிக உயர்ந்த நிகர மதிப்புள்ள தனிநபர்களின் எண்ணிக்கை 2027 ஆம் ஆண்டில் 58% சதவீதம் வரையில் உயரும் என Night Frank வெல்த் நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது. இப்படியிருக்கையில் HSBC இந்த வர்த்தகத்தை கைவிடுமா என்ன..?
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி



Click it and Unblock the Notifications