35,000 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டம்.. ஹெச்எஸ்பிசியின் அதிரடி முடிவு..!

லண்டன்: ஹெச்எஸ்பிசி வங்கி முன்னதாக கொரோனாவினைக் காரணம் காட்டி முன்னதாக கடந்த சில மாதங்களுக்கும் முன்பே ஆள்குறைப்பு அஸ்திரத்தினை கையில் எடுத்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் 35,000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் ஹெச் எஸ் பி சி எடுக்க உள்ள அதிரடி நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது.

ஆக இந்த அதிரடியான நடவடிக்கை மூலம் 35,000 பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிடுள்ளதாக லைவ் மிண்ட் செய்திகள் கூறுகின்றன.

பணியமர்த்தல் முடக்கம்

பணியமர்த்தல் முடக்கம்

உலகம் முழுக்க உள்ள இவ்வங்கியின் 2,35,000 ஊழியர்களுக்கு அனுப்பட்ட மெமோவில், புதிய வெளி பணியமர்த்தலை முடக்குவதாகவும் அந்த வங்கியின் தலைமை நிர்வாகி நோயல் க்வின் தெரிவித்துள்ளார். மேலும் எங்களால் வேலை இழப்புகளை காலவரையின்றி நிறுத்த முடியவில்லை. இது எப்போது முடியும் என்ற ஒரு கேள்விதான் எங்களிடமும் உள்ளது என்றும் க்வின் தெரிவித்துள்ளார்.

பணி நீக்கம் ஒத்தி வைப்பு

பணி நீக்கம் ஒத்தி வைப்பு

கடந்த பிப்ரவரியில் அறிவித்த முதல் அறிவிப்புகள் இன்னும் அவசியமானவை என்றும் க்வின் கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதத்தில் மறு சீரமைப்பின் ஒரு பகுதியாக, 4.5 பில்லியன் டாலர் செலவினைக் குறைப்பதற்காக ஹெச்எஸ்பிசி, கொரோனா காலத்தில் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது தவறு என்று பணி நீக்கத்தினை ஒத்தி வைத்தது.

அதிக செலவு குறைப்பு

அதிக செலவு குறைப்பு

ஆனால் தொடந்து லாபம் வீழ்ச்சி கண்டு வருவதால், பொருளாதாரமும் மந்த நிலையும் ஒரு சவாலான நேரத்தினை சுட்டிக் காட்டுகிறது. ஆகவே ஹெச் எஸ் பி சி வங்கி மீண்டும் பணி நீக்கம் செய்யும் திட்டத்தினை கையில் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டில் பிற்பாதியில் அதிக செலவுகளைக் குறைப்பதற்காக மூத்த நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

யாரெல்லாம் பணி நீக்கம்

யாரெல்லாம் பணி நீக்கம்

இந்த பணி நீக்கம் பெரும்பாலும் ஹெச் எஸ் பி சியின் சர்வதேச வங்கி மற்றும் சந்தை பிரிவு, பேக் ஆபிஸ் உள்ளிட்ட பணிகளில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே ஹெச் எஸ் பி சியின் பங்குகள் 27 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. தொற்று நோய் அதன் வாரக்கடன் அளவுகளை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முதல் காலாண்டில் அதன் வருவாயில் 3 பில்லியன் டாலர்களை ஒதுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+