உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள் நேற்று ஐபோன் 16 சிரீயஸ் போன்களை அறிமுகம் செய்து கெத்தாக சுற்றிக்கொண்டு இருந்த நிலையில், அடுத்த சில மணி நேரத்தில் ஆப்பிள் ஆதிக்கத்தை உடைக்க வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் சீனாவின் ஹூவாய் உலகின் முதல் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து மொத்த டெக் உலகின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியது.
மேற்கத்திய நாடுகள் சீனா மீது கடுமையான வர்த்தக தடைகளை விதித்து வரும் சூழ்நிலையில், இதில் நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்டு வருவது ஹூவாய் தான். உலகில் பல நாடுகளில் ஹூவாய் பிராண்ட் தயாரிப்புகள் தடை விதிக்கப்பட்ட நிலையிலும், தொடர்ந்து உலக நாடுகளுக்கு இணையாகப் பொருட்களையும், டெக்னாலஜியை உருவாக்கி வருகிறது. இதன் வெளிப்பாடே இந்த உலகின் முதல் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போன்.

ஆப்பிள் ஐபோன் 16 சிரீயஸ் போனின் அதிர்வலைகளை ஹூவாய் அறிமுகம் செய்த தனது புதிய Mate XT Ultimate Edition போனை அறிமுகப்படுத்தி ஆப்பிளை வியக்க வைத்துள்ளது. ஒரு டேப்லெட் சைசிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் உலகில் இது பெரும் மைல்கல் என்றால் மிகையில்லை.
ஹூவாய் Mate XT Ultimate Edition போன் 10.2-இன்ச் 3K ரெசல்யூஷன் கொண்ட 3 மடிப்பு OLED திரையை கொண்டுள்ளது. இதை முழுமையாக மடிக்கப்படும்போது வெரும் 6.4-இன்ச் ஸ்மார்ட்போன் போல பயன்படுத்தப்படலாம்.
இதை பகுதி பகுதியாகவும் பயன்படுத்த முடியும், ஒரு பகுதியை மட்டுமே திறக்கப்படும்போது, இது 7.9-இன்ச் மடிப்பு கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கும், முழுமையாகத் திறக்கப்படும்போது இது 10-இன்ச் பெரிய டேப்லெட்டாக மாறும்.
பெரும்பாலான ஃபோல்டு ஸ்மார்ட்போன்கள் இரண்டாக மட்டுமே மடிக்க முடியும் வேளையில், இதை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதில் பெரும் சவால்களை எதிர்கொண்ட நிறுவனங்களுக்கு மத்தியில், ஹூவாய் 3 மடிப்பு கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. சொல்லப்போனால் இன்னும் ஆப்பிள் ஃபோல்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யவில்லை.
ஃபோல்டு ஸ்மார்ட்போன்களில் பொதுவாக 2 டிஸ்பிளே இருக்கும், ஒன்று பிரெண்ட் டிஸ்பிளே மற்றொன்று ஃபோல்டு டிஸ்பிளே. ஆனால் ஹூவாய் தனது ட்ரை-ஃபோல்ட் தொழில்நுட்பத்துடன் ஒரே ஒரு திரையைப் பயன்படுத்தி, இரண்டு நிலைகளிலும் மடிக்கப்படும் போது பயன்படுத்தும் வகையில் கொண்டுள்ளது.
சரி விஷயத்திற்கு வருவோம், இந்த ஹூவாய் Mate XT Ultimate Edition போன் 1,99,99 யுவான் (சுமார் 2,35,000 ரூபாய்) என ஆரம்ப விலையை கொண்டு தொடங்குகிறது. இது நிச்சயமாக விலை அதிகமானது, ஆனால் சந்தையில் இதற்கு இணையான போன் எதுவும் இல்லை என்பதால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இதன் தொழில்நுட்பம்.
ஹூவாய் Mate XT Ultimate Edition போன் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்டதால் கிடைப்பதில்லை. இதனால் சீனாவுக்கு எக்ஸ்குளூசிவ் ஆக அறிமுகமாகும் இந்த போன் இன்று முதல் முன்பதிவு ஏற்றுக்கொண்டு செப்டம்பர் 20 அன்று விற்பனைக்கு வரும்.
இதன் எடை 298 கிராம், 3.6 மி.மீ தடிமன் உடன் சந்தையில் மிக மெல்லிய ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த ட்ரை ஃபோல்டு டிஸ்பிளே தொழில்நுட்பத்தை அடைய இதில் அல்ட்ரா-டஃப் லேமினேடெட் ஸ்டக்சர் உடன் non-Newtonian fluid பயன்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.
ஹூவாய் Mate XT Ultimate போனில் எந்த சிப் பயன்படுத்தப்படுகிறது என்பதை தெரிவிக்காத நிலையில், சீனாவின் சொந்த தயாரிப்பான Kirin 9000S அடிப்படையிலான சிப் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். Mate XT-யில் உள்ள 50 MP மெயின் கேமரா, 12 MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 5.5x ஆப்டிகல் ஜூம் கொண்ட 12 MP டெலிகிராஃப் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் 8 MP செல்ஃபி கேமரா உள்ளது, இது பஞ்ச்-ஹோல் கட்அவுட்டில் வைக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications