எலக்ட்ரிக் கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் டெஸ்லா மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் உலகில் பல நிறுவனங்கள் தற்போது எலக்டிரிக் கார் தயாரிப்பில் இறங்க முடிவு செய்துள்ளது. குறிப்பாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அல்லாமல் பெரும் டெக் நிறுவனங்கள் மிகுந்த ஆர்வத்துடன் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்கி வருகிறது.
பல ஆண்டுகளாகத் தானியங்கி கார் தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சியில் கூகுள் பணியாற்றி வரும் நிலையில், சமீபத்தில் ஆப்பிள் தானியங்கி கார் தயாரிப்புக்காக ஹூண்டாய் மற்றும் கியா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் தற்போது சீனாவின் முன்னணி கம்பியூட்டர், ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் டெக் நிறுவனமான ஹூவாய் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்கத் திட்டமிட்டு வருகிறது.
ஹூவாய் அசத்தல்
ஹூவாய் டெலிகாம், ஸ்மார்ட்போன் மற்றும் கம்பியூட்டர் கருவிகளின் தயாரிப்பு மற்றும் விற்பனையில் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. ஆனால் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பல நாடுகள் ஹூவாய் நிறுவன தயாரிப்புக்குத் தடை விதித்த காரணத்தால் வர்த்தகத்தில் பெரிய அளவிலான பாதிப்பு உருவாகியுள்ளது.
ஹூவாய் புதிய வர்த்தக முயற்சி
இந்நிலையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஹூவாய் நிறுவனம் சீனாவின் அரசு ஆட்டோமொபைல் நிறுவனமான சான்கான் ஆட்டோமொபைல் மற்றும் இதர கார் தயாரிப்பு நிறுவனங்களிடம் கூட்டணி சேர்ந்து எலக்ட்ரிக் கார் தயாரிப்பு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
BAIC குரூப் உடன் பேச்சுவார்த்தை
இதேபோல் ஹூவாய் நிறுவனம் BAIC குரூப் முதலீட்டில் இயங்கும் ப்ளூபார்க் நியூ எனர்ஜி டெக்னாலஜி நிறுவனத்துடனும் எலக்ட்ரிக் கார் தயாரிப்புக்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுகுறித்து ஹூவாய் நிறுவனத்தினத்தின் தலைவர் எலக்ட்ரிக் கார் குறித்து எவ்விதமான திட்டமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
கார் டிசைன் பணிகள் துவக்கம்
ஆனால் இதேவேளையில் ஹூவாய் நிறுவனம் எலக்ட்ரிக் கார் தயாரிப்புக்காகத் தனிக் குழுவை அமைத்துக் கார் வடிவமைப்பு பணிகளைத் துவங்கியுள்ளதாகவும், விரைவில் இதுக்குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
NIO கார்
டெஸ்லாவுக்குப் போட்டியாக ஏற்கனவே சீனாவில் NIO என்ற நிறுவனம் மிகவும் குறைந்த விலையில் எலக்ட்ரிக் கார்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. குறிப்பாகச் சிறிய ரகம் மற்றும் விலை குறைவான மாடல் கார்கள் டெஸ்லாவுக்கு இணையான தொழில்நுட்பம் மற்றும் திறன் கொண்டதாக இந்நிறுவன கார்கள் உள்ளது.
டெஸ்லா Vs நியோ
இந்நிலையில் சீனாவில் இருக்கும் அனைத்து முன்னணி கார் நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்கியுள்ள நிலையில் நியோ நிறுவனம் அனைவருக்கும் முன்னோடியாக உள்ளது. இதுமட்டும் அல்லாமல் டெஸ்லா அமெரிக்காவில் செய்ய முடியாத பல விஷயங்களை நியோ சீனாவில் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications