ஆட்டோமொபைல் சந்தையில் ஒவ்வொரு நிறுவனம் என ஆதிக்கம் செலுத்தி வந்தது மட்டும் அல்லாமல் மோனோபோலியாகத் தான் வைப்பது தான் சட்டம், தான் சொல்வது தான் விலை என்ற நிலை இருந்தது. இது அனைத்தும் எலக்ட்ரிக் வாகனங்கள் வந்த பின்பு மாறியது குறிப்பாக அமெரிக்காவில் டெஸ்லா, இந்தியாவில் இரு சக்கர வாகன பிரிவில் ஓலா ஆகியவை ஆதிக்க நிலையை உடைத்துள்ளது.
வாழ்க்கை சக்கரம் என்பது போல் எலக்ட்ரிக் வாகன பிரிவில் டெஸ்லா-வின் ஆதிக்கத்தை உடைக்க இரண்டு பூதங்கள் சீனாவில் கிளம்பியுள்ளது. சீனாவில் எலக்ட்ரிக் வாகன பிரிவில் டெஸ்லா மற்றும் BYD பெரும் ஆதிக்கம் செய்து வரும் வேளையில் அந்நாட்டின் மாபெரும் ஸ்மார்ட்போன் நிறுவனங்களான சியோமி மற்றும் ஹூவாய் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்கியுள்ளது.

ஹூவாய் நிறுவனம் செப்டம்பர் மாதம் தனது முதல் காரான Aito M7 SUV-ஐ அறிமுகம் செய்த நிலையில் சுமார் 80000 கார்களுக்குப் புக்கிங் குவிந்துள்ளது. இதைத் தொடர்ந்து Avatr 12 luxury coupe மற்றும் Luxeed S7 sedan ஆகிய இரு கார்களை அறிமுகம் செய்து ஆட்டோமொபைல் சந்தையின் போக்கை மாற்றியுள்ளது.
இதேவேளையில் சியோமி நிறுவனம் கார்களுக்கான பிரத்தியேக ஆப்ரேட்டிங் சிஸ்டம் தயாரித்து இருக்கும் வேளையில் புதிய காரை அடுத்த சில மாதங்களில் அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் பல எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது.
சீனாவில் BYD அக்டோபர் மாதம் மட்டுமே 300000 கார்களை விற்பனை செய்திருக்கும் வேளையில் ஹூவாய் 80000 கார்களுக்கான ஆர்டர், சியோமி-யின் ஆப்ரேட்டிங் சிஸ்டம், பாக்ஸ்கான் நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகன அறிமுகம் பெரிய விஷயம் இல்லையென்றாலும் ஆரம்பக்கட்டத்திற்கு இது சிறப்பான சம்பவம்.
இதேவேளையில் ஹூவாய், சியோமி, பாக்ஸ்கான் ஆகியவை அடுத்த சில வருடத்தில் சர்வதேச அளவில் தனது தயாரிப்புகளை விற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இது அனைத்தும் ஆப்பிள் நிறுவனத்தின் நீண்ட காலக் கனவான ஆப்பிள் கார் அறிமுகத்திற்கான ரூட் மேப் ஆகப் பார்க்கப்படுகிறது.
இதேவேளையில் ஆப்பிள்-க்கு ஏதுவாகப் பாக்ஸ்கான்-ம் தற்போது கார்களைத் தயாரிக்கத் துவங்கியுள்ளதால் டபுள் ஜாக்பாட் ஆக மாறியுள்ளது. இது அனைத்தும் சர்வதேச அளவில் டெஸ்லா-வின் வர்த்தகத்தைச் சாப்பிடும் செயலாகவே பார்க்கப்படுவதால் எலான் மஸ்க் உஷாராக வேண்டிய நேரம் வந்துவிட்டது.
டெஸ்லா காரில் புதுமையைக் கொண்டு வர வேண்டும், அப்போது தான் போட்டியை சமாளிக்க முடியும்.


Click it and Unblock the Notifications