இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனம், இந்தியாவின் மும்பையை தலைமையிடமாகக் கொண்டது.
இந்த நிறுவனத்தில் ஆங்கிலோ டச்சு நிறுவனமான யூனிலீவர் 52% பங்குகளைக் கொண்டுள்ளது.
இந்த நிறுவனம் வீட்டு உபயோகப் பொருட்கள், தனி மனித உபயோக பொருட்கள், உணவு மற்றும் பானங்கள் என வேகமாக நுகரப்படும் எஃப்எம்சிஜி துறையில் முன்னணியில் உள்ள ஒரு நிறுவனமாகும். நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கும் மத்தியிலும் பாதிக்கப்படாத ஒரே துறை இது தான். இதன் எதிரொலியை இந்த நிறுவனத்தில் காண முடிகிறது.
நிகர லாபம்
நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் பரவலாக அதிகரித்து வரும் நிலையிலும் கூட, அதிக பிரச்சனை இல்லாமல் வேகமாக நுகரக்கூடிய பொருட்கள் விற்பனையானது பெரிதும் பாதிக்கப்படவில்லை என்றே கூறலாம். அதன் எதிரொலியாகத் தான் இந்த நிறுவனம் அதன் ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் நிகரலாபம் 7 சதவீதம் அதிகரித்து, 1,881 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 1,775 கோடி ரூபாயாக லாபம் கண்டுள்ளது.
வருவாய் அதிகரிப்பு
இதே இந்த நிறுவனத்தின் வருவாயானது கடந்த ஆண்டை காட்டிலும் 4 சதவீதம் அதிகரித்து, 10,406 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எனினும் வட்டி, வரி முந்தைய லாபம் கடந்த ஆண்டை காட்டிலும் 0.1 சதவீதம் குறைந்து, 2,644 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே மார்ஜின் விகிதம் 120 அடிப்படை புள்ளிகள் குறைந்து 25% ஆக குறைந்துள்ளது.
கடந்த ஆண்டிற்கான டிவிடெண்ட்
கொரோனாவின் தாக்கமானது சற்று இத்துறையில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த வங்கி மார்ச் 31, 2021வுடன் முடிவடைந்த நிதியாண்டிற்காக 9.50 ரூபாய் இடைக்கால டிவிடெண்டாக அறிவித்துள்ளது. உண்மையில் இது முதலீட்டாளர்களுக்காக நல்லதொரு விஷயமே.
வலுவான வளர்ச்சி
ஜூன் காலாண்டில் பல சவால்களுக்கும் மத்தியில் எங்களது செயல்திறன், போர்ட்போலியோவின் உள்ளார்ந்த வலிமை, செயல்பாடுகளில் சுறுசுறுப்பு என வலுவான செயல்பாட்டின் காரணமாக சிறப்பான வளர்ச்சியினை காண முடிந்ததாக இந்த நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான சஞ்சீவ் மேத்தா தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications