இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனம், இந்தியாவின் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு முன்னணி நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்தில் ஆங்கிலோ டச்சு நிறுவனமான யூனிலீவர் 52% பங்குகளைக் கொண்டுள்ளது.
இந்த நிறுவனம் வீட்டு உபயோகப் பொருட்கள், பர்சனல் கேர் மற்றும் பானங்கள் என வேகமாக நுகரப்படும் எஃப்எம்சிஜி துறையில் முன்னணியில் உள்ள ஒரு நிறுவனமாகும்.
இரண்டாவது காலாண்டில் லாபம்
நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் பரவலாக அதிகரித்து வரும் நிலையிலும் கூட, பிரச்சனை இல்லாமல் வேகமாக நுகரக்கூடிய பொருட்கள் விற்பனையானது பெரிதும் பாதிக்கப்படவில்லை என்றே கூறலாம். அதன் எதிரொலியாக தான் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் அதன் ஜூலை முதல் செப்டம்பர் காலாண்டில் நிகரலாபம் 9 சதவீதம் அதிகரித்து, 2,009 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 1,848 கோடி ரூபாயாக லாபம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
டிவிடெண்ட் அறிவிப்பு
இதே இந்த நிறுவனத்தின் மொத்த வருவாயானது கடந்த ஆண்டை காட்டிலும் 16 சதவீதம் அதிகரித்து, 11,593 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 10,032 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் இந்த நிறுவனம் செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டிற்காக டிவிடெண்ட் விகிதம், ஒரு பங்கிற்கு இடைக்கால டிவிடெண்டாக 14 ரூபாய் அறிவித்துள்ளது. உண்மையில் இது முதலீட்டாளர்களுக்காக நல்லதொரு விஷயமே.
வலுவான செயல்பாடு
இந்த நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான சஞ்சீவ் மேத்தா, பல சவால்களுக்கும் மத்தியில் எங்களது செயல்திறன், போர்ட்போலியோவின் உள்ளார்ந்த வலிமை, செயல்பாடுகளில் சுறுசுறுப்பு என வலுவான செயல்பாட்டின் காரணமாக சிறப்பான வளர்ச்சியினை காண முடிந்ததாக தெரிவித்துள்ளார்.
இயல்பு நிலைக்கு திரும்பும் வர்த்தகம்
HUL அதன் போர்ட்போலியோவை நுகர்வோர் தொடர்பான கண்டுபிடிப்புகளுடன் விரிவுபடுத்தியுள்ளது. மேலும் பிராண்டுகளுக்கு பின்னால் வலுவாக முதலீடு செய்துள்ளது என்றும் மேத்தா கூறியுள்ளார். அதோடு எங்களது சேவைகள் கோவிட்-19 முந்தைய செயல்பாடுகளை போலவே வழக்கமான செயல்பாடுகளுக்கு திரும்பியுள்ளன. அதோடு எங்களது செயல்பாடுகளை விரைவில் டிஜிட்டல் மயமாக்கும் வேகத்தினையும் நாங்கள் துரிதப்படுத்தியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
கிராமப்புற சந்தைகள் நெருக்கம்
எல்லாவற்றிற்கும் மேலாக கிராமப்புற சந்தைகள் எங்களுடம் மிகவும் நெருக்கத்தில் உள்ளன. எனினும் நகரங்களில், குறிப்பாக பெரும், நகரங்களில் தேவை வெகுவாக முடங்கியுள்ளது. ஆக நாங்கள் எங்களுக்கு பின்னால் மோசமான நிகழ்வு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். எனினும் தேவை மீட்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறோம் என்றும் மேத்தா கூறியுள்ளார்.
HUL பங்கு விலை
செப்டம்பர் காலாண்டில் எங்களது மொத்த செலவினங்கள் 9,054 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 7,885 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனம் லாபத்தினை கண்டிருந்தாலும், அதன் பங்குவிலையானது பிஎஸ் இயில் 6 ரூபாய் குறைந்து, 2,172.10 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications