இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனம், இந்தியாவின் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு முன்னணி நிறுவனமாகும்.
இந்த நிறுவனம் வீட்டு உபயோகப் பொருட்கள், பர்சனல் கேர் மற்றும் பானங்கள் என வேகமாக நுகரப்படும் எஃப்எம்சிஜி துறையில் முன்னணியில் உள்ள ஒரு நிறுவனமாகும்.
ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனம் கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு அறிக்கையினை அறிவித்துள்ளது.
நிகர லாபம்
இந்த காலாண்டு அறிக்கையில் இந்த நிறுவனத்தின் நிகரலாபம் 9% அதிகரித்து, 2187 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஜூன் காலாண்டில் 2061 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே கடந்த ஆண்டில் இந்த விகிதம் 2,009 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் நிபுணர்கள் இந்த நிகரலாபம் 2,217 கோடி ரூபாயாக அதிகரிக்கலாம் என கணித்திருந்தனர்.
விற்பனை விகிதம்
இதற்கிடையில் இந்த எஃப் எம் சி ஜி நிறுவனத்தின் விற்பனை விகிதமானது, கடந்த ஆண்டினை காட்டிலும் 11% அதிகரித்து, 12516 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டில் 11,276 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது வரி, வட்டி விகிதங்களுக்கு முன்பான எபிடிடா விகிதம் 9% அதிகரித்து, 3,132 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மார்ஜின் விகிதம்
இது பல பொருட்களின் விலை நிலையற்றதாக உயர்ந்துள்ளதால், இந்த நிறுவனத்தின் மார்ஜின் விகிதம் பெரும் சவாலாக இருந்ததாக தெரிவித்துள்ளது. எனினும் நியாயமான விலை மற்றும் சேமிப்புத் திட்டங்கள் என்பது போன்ற சலுகைகள் தொடரும் என்றும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
வருவாய் அதிகரிப்பு
மேலும் நிகர வருவாய் அதிகரிப்பு விகிதமானது, பணவீக்கத்தை நிர்வகிக்கவும், அடித்தளத்தினை வலுப்படுத்தவும் உதவியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனம் தற்போது பொருளாதாரம் வளர்ச்சி கண்டு வரும் நிலையில் தேவையும் அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளதாக தெரிவித்துள்ளது
டிவிடெண்ட் அறிவிப்பு
இந்த நிறுவனம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டிற்காக இடைக்கால டிவிடெண்டாக, ஒரு பங்கிற்கு 15 ரூபாய் கொடுக்க இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது உண்மையில் இது முதலீட்டாளர்களுக்காக நல்லதொரு விஷயமே.
HUL பங்கு விலை
இந்த நிறுவனம் லாபத்தினை கண்டிருந்தாலும், அதன் பங்குவிலையானது என்.எஸ்.இ-யில் 4.04% அல்லது 107.20 ரூபாய் குறைந்து, 2,546.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இதே பிஎஸ்இ-யில் பங்குவிலையானது 4.06% அல்லது 107.70 ரூபாய் குறைந்து, 2,546.45 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
உணவுதுறையில் சரிவு
இந்த நிறுவனத்தின் லாப விகிதமானது அதிகரித்து இருந்தாலும், இதன் உணவு துறையானது சரிவினைக் கண்டுள்ளது. இது ஹார்லிக்ஸ், கிசான், ப்ரூ, குவாலிட்டி வால் உள்ளிட்ட பலவும் விற்பனையில் சரிவினைக் கண்டுள்ளதாக தெரிவிர்த்துள்ளது. குறிப்பாக இந்த உணவு துறையானது 7% மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளதாகவும், இது கடந்த ஜூன் காலாண்டில் 12% வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தலைவர் கருத்து
ஹிந்துஸ்தான் நிறுவனத்தின் தலைவர் இது குறித்த அறிக்கையில், தற்போது தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ளது. இது குறித்து நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளோம். செப்டம்பர் காலாண்டில் நல்ல வளர்ச்சியினை கண்டது. எனினும் அதிகரித்து வரும் பணவீக்கம் என்பது நுகர்வோரின் வாங்கும் திறனை கட்டுப்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார். இதற்கிடையில் தான் இந்த நிறுவனத்தின் பங்கு விலையும் சரிவினைக் கண்டுள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications