உலகம் முழுவதுமே ஐடி துறை மிகப் பெரிய மாற்றத்திற்கு தன்னை உட்படுத்திக் கொண்டிருக்கிறது. ஏஐ தொழில்நுட்பத்தின் வருகை ஐடி நிறுவனங்கள் செயல்படும் முறையையே மாற்றி அமைத்திருக்கின்றன. வேறு வழியில்லை அனைத்து நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.
ஏஐ வருகையை காரணமாக கூறி ஐடி நிறுவனங்கள் இலட்சக்கணக்கான ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி வருகின்றன. இதுதான் சான்ஸ் என காத்திருந்ததைப் போல ஒவ்வொரு நிறுவனமும் ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் பணி நீக்க அறிவிப்பை வெளியிடுகின்றன. இப்படி வேலையை விட்டு நீக்கக்கூடிய நிறுவனங்கள் ஊழியர்களிடம் மனிதாபிமானமற்ற முறையில் செயல்படுவதும் ஐடி துறை சார்ந்து வேலை செய்பவர்கள் மத்தியில் பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய டெக் நிறுவனங்களில் தொடங்கி டிசிஎஸ் உள்ளிட்ட பெரிய ஐடி நிறுவனங்கள் வரையிலும் இந்த ஊழியர்கள் பணி நீக்கம் என்பது தொடர் கதையாக மாறிவிட்டது. நாள்தோறும் ரெடிட் தளத்தில் பல்வேறு நிறுவனங்களின் ஊழியர்களும் தங்களுக்கு நடக்கக்கூடிய அட்டூழியங்களையும் அநியாயங்களையும் பதிவு செய்த வண்ணம் இருக்கின்றனர்.
ஒரே ஒரு போன் காலில் ஊழியர்கள் மொத்தமாக அனைத்து ஊழியர்களையும் வேலையை விட்டு அனுப்புவது, ஒரு ஸூம் மீட்டிங்கில் அனைவருக்கும் வேலை இல்லை எனக் கூறுவது , ஒரு மின்னஞ்சலில் ஒட்டுமொத்தமாக ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்வது என தொடர்ச்சியாக ஐடி துறையில் நிகழக்கூடிய இந்த செய்திகள் இந்த துறை சார்ந்த வேலை செய்பவர்களுக்கும் இந்த துறையில் எப்படியாவது வேலைக்கு சென்று விட வேண்டும் என படிப்பவர்களுக்கும் பெரிய கலக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மறுக்க முடியாது.

2025 ஆம் ஆண்டில் மட்டும் 208 டெக் நிறுவனங்கள் 91 ,314 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளன. ஊழியர்கள் பணி நீக்கம் என்பது வெளிநாட்டில் மட்டுமே இருந்து வந்த நிலையில் இந்தியாவை சேர்ந்த பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் தங்கள் ஊழியர்களில் 12,000 பேரை இந்த ஆண்டு வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனை தொடர்ந்து இந்தியாவை சேர்ந்த பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் கூட தங்களுடைய ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை அறிவித்தன.
நிறுவனங்கள் வெளியிடக்கூடிய ஊழியர்கள் பணி நீக்க எண்ணிக்கை என்பது உண்மையில் அதைவிட பல மடங்கு அதிகமாகவே இருக்கிறது என்பது தான் உண்மை. நிறுவனங்கள் இத்தனை ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறோம் என ஒரு புறம் அறிவித்துவிட்டு மறுபுறம் கட்டாயப்படுத்தி ஊழியர்களை தாங்களாகவே ராஜினாமாவும் செய்ய வைக்கின்றன. அந்த எண்ணிக்கையும் சேர்த்தால் இந்த ஆண்டில் மட்டும் லட்சக்கணக்கானவர்கள் தங்களுடைய வேலை வாய்ப்பை இழந்திருக்கின்றனர்.
ஏஐ தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள முடியாத ஊழியர்களே வேலையில் இருந்து நீக்குகிறோம் என்றுதான் இந்த நிறுவனங்கள் காரணம் கூறுகின்றன. அது தவிர அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதால் அமெரிக்க நிறுவனங்கள் ஐடி உள்ளிட்ட சேவைகளுக்கு செலவு செய்வதை குறைத்தது , பெரிய டெக் நிறுவனங்கள் எல்லாம் கோடிங் உள்ளிட்ட வேலைகளை ஏஐ தொழில்நுட்பத்திடம் ஒப்படைத்தது என பல்வேறு காரணங்கள் இந்த பணி நீக்கங்களுக்கு பின்னால் இருப்பது தெரிகிறது.
இந்த பணி நீக்க நடவடிக்கையில் குறைந்தபட்சம் மனிதாபிமானம் கூட கடைபிடிக்கப்படுவதில்லை என்பதுதான் ஊழியர்களுக்கு பெரும் மன வருத்தத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்துகிறது. 10- 15 ஆண்டு காலம் ஒரே நிறுவனத்திற்காக வேலை செய்த ஒரு நபரை ஒரு போன் காலில் வேலை விட்டு நீக்குகிறார்களே என்பதுதான் பலரும் இந்த பணி நீக்கங்கள் குறித்து வேதனையை வெளிப்படுத்த காரணமாக இருக்கிறது.
இந்தியாவில் கூட டிசிஎஸ் நிறுவன ஊழியர்கள் பலரும் 15 ஆண்டுகாலம் டிசிஎஸ் நிறுவனத்திற்காக வேலை செய்தேன் ஆனால் திடீரென அழைத்து நீங்கள் வேலை செய்ய முடியாது என கூறிவிட்டார்கள் கண்ணீர் மல்க நான் வேலை விட்டு செல்கிறேன் என தொடர்ச்சியாக பலரும் பதிவிட்டு வருவதை காண முடிகிறது. இவர்களுக்காவது பரவாயில்லை தாய்நாட்டிலேயே இருக்கிறார்கள் உடனடியாக வேலை கிடைத்து விடும் வாய்ப்புள்ளது. ஆனால் வெளிநாடு சென்று வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த பணி நீக்கம் என்பது பேரிடியாக தான் வந்துவிடுகிறது.
இந்தியாவை சேர்ந்த அனன்யா ஜோஸ்யா என்பவர் அமெரிக்காவில் நார்த் வெஸ்ட்ரன் பல்கலைக்கழகத்தில் பயோ டெக்னாலஜி பிரிவில் முதுநிலை படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவிலேயே நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அவர் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் சில மாதங்களிலேயே அவரை வேலை விட்டு நீக்கிவிட்டது. இதனை அடுத்து புதிதாக வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்த அவர் பல மாதங்களாக விண்ணப்பம் செய்து வேலை கிடைக்காமல் இருந்துள்ளார், கடைசியில் என்னுடைய அமெரிக்க கனவை கைவிட்டு நான் நாட்டை விட்டே வெளியேறி தாய்நாடு திரும்புகிறேன் இது என் வாழ்க்கையின் மிக கடினமான ஒரு தருணம் என தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கண்ணீர் மல்க வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோ அனைவரையும் கலங்க வைத்திருக்கிறது.

அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய ஊழியர்களை வெறும் நான்கு நிமிட போன் காலில் வேலையில் இருந்து நீக்கி இருக்கிறது. ஒரு ஊழியர் இது தொடர்பான தகவலை பதிவு செய்திருக்கிறார். அதில் எந்த ஒரு முன்னறிவிப்பும் எங்களுக்கு வழங்கவில்லை ஒரு அமெரிக்க நிறுவனத்திற்காக இந்தியாவில் பலரும் வொர்க் பிரம் ஹோம் முறையில் வேலை செய்து வருகிறோம். திடீரென காலை 11 மணியளவில் அனைத்து இந்திய ஊழியர்களுடனும் மீட்டிங் இருப்பதாக அறிவித்தனர்.
11 மணிக்கு அந்த ஆன்லைன் மீட்டிங் தொடங்கியது, அப்போது அனைவருடைய மைக்குகளையும் அந்த தலைமை செயல் அதிகாரி அணைத்து விட்டார் பின்னர் அந்த நிறுவனம் அனைத்து இந்திய ஊழியர்களையும் வேலையில் இருந்து நீக்குகிறது இது ஒரு கடினமான முடிவு நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்கிறோம் என கூறி தலைமை செயல் அதிகாரி அழைப்பையே துண்டித்துவிட்டாராம். ஊழியர்கள் கேள்வி கேட்க முன்வந்த போது எந்த பதிலும் வழங்காமல் அவர் இணைப்பை துண்டித்து விட்டாராம் . எங்களுக்கு முன்கூட்டியே எந்த ஒரு தகவலும் வழங்கவில்லை திடீரென மீட்டிங் வைத்தார்கள் ஒரு நிமிடத்தில் உங்கள் அனைவரையும் வேலை இருந்து நீக்கி விட்டோம் எனக் கூறியிருக்கிறார்கள் என தெரிவித்திருக்கிறார்.
பல்வேறு டெக் நிறுவனங்களும் ஐடி நிறுவனங்களும் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கை என்ற அறிவிப்பை தான் தற்போது வெளியிட்டு இருக்கின்றனவே தவிர யாரையெல்லாம் வேலையை விட்டு நீக்க வேண்டும் என்ற பட்டியலை முன்கூட்டியே தயாரித்து வைத்து விட்டன என ஊழியர்கள் பலரும் சாடுகின்றனர் . பல்வேறு நிறுவனங்களும் 40 வயதுக்கு மேலிருக்கும் ஊழியர்களையும் சீனியர் அளவில் இருக்கக்கூடிய ஊழியர்களையும் இலக்கு வைத்து வேண்டுமென்றே அவர்களுக்கு ப்ராஜெக்ட் ஒதுக்காமல் அவர்களை காக்க வைத்து கட்டாய ராஜினாமா செய்ய வைக்கின்றனாம்.
அண்மையில் தான் ஒராக்கிள் நிறுவனம் பல்லாயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. இந்தியாவைப் பொறுத்தவரை ஒராக்கிள் நிறுவனம் சுமார் 30000 ஊழியர்களை பணிக்கு அமர்த்தி இருக்கிறது. அவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது தங்களுக்கு வேலை இருக்கிறதா இல்லையா என்று குழப்பத்தில் இருக்கிறார்களாம்.
ஒரு ஊழியர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் வெறும் 20 நிமிடங்கள் தான் ஜூமில் ஒரு அழைப்பு வந்தது மேலாளர் பேசினார். ஹெச்ஆர் அதில் இருந்தார் நீங்கள் இந்த நிறுவனத்தில் வேலை செய்யப்போவதில்லை என கூறி என்னுடைய அணுகல் அனைத்தையும் துண்டித்து விட்டனர் என் பெற்றோர் உடல்நிலை சரியில்லாதவர்கள் அவர்களிடம் எனக்கு வேலை போய் விட்டது என எப்படி கூற முடியும் என வேலை இழந்த ஊழியர் குறிப்பிட்டு இருக்கிறார். மீட்டிங் என அழைத்தார்கள் திடீரென இனி நீங்கள் இந்த நிறுவன ஊழியர் இல்லை என அறிவித்துவிட்டு அழைப்பை துண்டித்து விட்டனர் என மற்றொரு ஊழியர் கூறியிருக்கிறார் .
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications