எலக்ட்ரிக் வாகனங்களுக்குப் போட்டியாக ஹைப்ரிட் கார்கள் இந்தியச் சந்தையை ஆளத் துவங்கியுள்ளது, பெட்ரோல் - டீசல் கார்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே இருக்கும் என கருத்து நிலவிய வேளையில், நடுவுல இந்த கௌசிக் வந்தா..? என்பது போல் ஹைப்ரிட் கார்கள் பெரும் அதிக்கம் பெற்று வருகிறது.
எரிபொருள் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்கும் தொழில்நுட்பமாக ஹைப்ரிட் வாகனங்கள் விளங்குகிறது. எலக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles - EVs) சமீப காலங்களில் வாகன சந்தையில் முதலிடத்தைப் பிடித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம், வாகனங்களால் ஏற்படும் மாசுபாடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவது தான்.

ஆனால், தற்போது ஹைப்ரிட் கார்கள் எலக்ட்ரிக் வாகனங்களுக்குப் போட்டியாகக் களம் இறங்கியுள்ளன. எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க விரும்புபவர்களின் மிகப்பெரிய கவலை, வாகனத்தின் பயண தூரம் தான். குறிப்பாக, நகரங்களுக்கு வெளியே போதுமான எலக்ட்ரிக் ரீசார்ஜ் நிலையங்கள் இல்லாதது, அப்பார்ட்மென்ட் வீட்டில் சார்ஜிங் கட்டமைப்பு வைக்க முடியாதது போன்ற பல பிரச்சனைகள் இருந்து வருகிறது.
ஹைப்ரிட் வாகன பிரிவில் டொயோட்டா நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. ஜப்பானிய வாகன உற்பத்தியாளரான டொயோட்டாவின் சொந்த ஹைப்ரிட் எலக்ட்ரிக் வாகன தொழில்நுட்பம், வாகனங்களை எலக்ட்ரிக் முறையிலோ, பெட்ரோலிய எரிபொருளிலோ, அல்லது இரண்டிலும் இயக்குவதற்கான திறனை அளிக்கிறது.
"ஸ்ட்ராங் ஹைப்ரிட்" (Strong Hybrid) என அழைக்கப்படும் இந்த வாகனங்கள், பெட்ரோல் இன்ஜின் இயங்காமலேயே 40% தூரத்தையும், 60% நேரத்தையும் எலக்ட்ரிக் முறையில் கடக்க முடியும்.
இதன் மூலம், ஒரு சாதாரண பெட்ரோல் - டீசல் காரில் செலவாகும் 40-50% எரிபொருள் திறன் மேம்படுத்தப்படுவதோடு, இயக்க செலவுகள் குறைக்கப்பட்டு, இது மட்டும் அல்லாமல் கார்பன் வெளியீடும் குறைக்கப்படுகிறது என்கிறார் டொயோட்டா கிரலோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் (டொயோட்டாவின் இந்திய பிரிவு) நிர்வாக துணைத் தலைவர் விக்ரம் குலாட்.
"ஹைப்ரிட் எலக்ட்ரிக் வாகன தொழில்நுட்பத்திற்கான பாசிட்டிவான போக்கும், வாடிக்கையாளர்களின் ஏற்பு திறனும் அதிகரித்து வருவது மிகவும் உற்சாகமளிக்கிறது. இது கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க ஆர்வமாக இருக்கும் சமூகத்தின் முக்கிய தேவையாக இருக்கும் கீளின் தொழில்நுட்ப மாற்றத்தை எளிதாக்கும்," என்று குலாட் கூறினார்.


Click it and Unblock the Notifications