டோயோட்டா நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசிடம் ஹைப்ரிட் கார்கள் மீதான வரியை குறைப்பதன் மூலம் மாசுபாடு, எரிபொருள் செலவுகள் குறையும் எனக் கூறி ஹைப்ரிட் கார்கள் மீது வரியை குறைக்க வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் நாட்டின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், எலக்ட்ரிக் கார்களைக் காட்டிலும் ஹைபிரிட் கார்கள் அதிக மாசு விளைவிப்பதால், இக்கார்கள் மீதான வரிகளைக் குறைக்க வேண்டாம் என்று மத்திய அரசை கேட்டுக்கொண்டு உள்ளது.

டோயோட்டா மற்றும் டாடா மோட்டார்ஸ் மத்தியிலான இந்த மறைமுக மோதலுக்குப் பின்னால், வர்த்தகம் மட்டுமே காரணமாக இருக்கும் வேளையில், புதிய ஆய்வு ஆட்டோமொபைல் சந்தையில் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வெறும் 5% வரியும், ஹைப்ரிட் கார்களுக்கான 43% வரியும், பெட்ரோல் கார்களுக்கு 48% வரியும் விதிக்கப்படுகிறது.
ஹெச்எஸ்பிசி குளோபல் ரிசர்ச் அறிக்கையின்படி, ஹைப்ரிட் வாகனங்கள் இந்தியாவின் டிகார்பனைசேஷன் செயல்பாடுகளை வேகப்படுத்த இடைக்காலத் தீர்வாக இருக்கும். தற்போதைய சூழ்நிலையில், ஹைப்ரிட் கார்களின் மொத்த கார்பன் உமிழ்வுகள் (well to wheel) எலக்ட்ரிக் வாகனங்களை (EVகள்) விடக் குறைவாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
வெல்-டு-வீல் (WTW) என்பது ஒரு எனர்ஜியின் செயல்திறன் மற்றும் உமிழ்வுகளை மதிப்பிடுவதற்கான ஒரு முறையாகும். WTW உமிழ்வுகள் எரிபொருளின் உற்பத்தி, போக்குவரத்து, மாற்றம் மற்றும் விநியோகம் ஆகியவற்றிலிருந்து வெளியாகும் அனைத்துக் கிரீன்ஹவுஸ் கேஸ் உமிழ்வுகளையும் சேர்த்து கணக்கிடும். இதனால் வெல்-டு-வீல் (WTW) ஒவ்வொரு வாகனத்தின் கிரீன்ஹவுஸ் கேஸ் உமிழ்வை கணக்கிடும் சிறந்த முறையாக உள்ளது.
மேலும் இந்தியாவின் நெட் ஜிரோ இலக்கை அடைய எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் உமிழ்வுகள் குறைக்க 7-10 ஆண்டுகள் ஆகலாம் எனவும் ஹெச்எஸ்பிசி குளோபல் ரிசர்ச் அறிக்கை தெரிவித்துள்ளது.
எலக்ரிக் வாகனங்களை விட ஹைப்ரிட் மாசுபாடு மிகவும் குறைவு என விளக்கும் வகையில், ஒரு EVயில் இருந்து வெல் டு வீல் (WTW) மொத்த கார்பன் உமிழ்வுகள் தற்போது 158 கி/கிமீ ஆக உள்ளது. இதுவே டீசல் காரில் 201 கி/கிமீ ஆக உள்ளது, பெட்ரோல் காரில் 176 கி/கிமீ ஆக உள்ளது. ஹைப்ரிட் காரில் வெறும் 133 கி/கிமீ ஆக உள்ளது ஆக மட்டுமே உள்ளது என இந்த ஆய்வு கூறுகிறது.
அதாவது ஹைப்ரிட் கார்களைக் காட்டிலும் டீசல் கார்கள் 34 சதவீதமும், பெட்ரோல் கார்கள் 25 சதவீதம் எலக்ட்ரிக் வாகனம் 16 சதவீதம் குறைவான மாசுபாட்டை வெளியிடுகிறது.
பட்ஜெட்டுக்கு முன்பு வெளியான இந்த ஆய்வின் மூலம் ஹைப்ரிட் கார்களுக்கான வரிக் குறைப்பு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications