இந்திய ஆட்டோமொபைல் துறையில் எலக்ட்ரிக் கார்கள் எப்படி ஒரு புயலை உருவாக்கியதோ அதைவிடப் பெரிய புயலை ஹைப்ரிட் கார்கள் உருவாக்கியுள்ளது. இந்திய சந்தையில் வெறும் 4 மாடல் ஹைப்ரிட் கார்கள் மட்டுமே இருக்கும் வேளையில் இதற்கான டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பொது தேர்தலுக்கு முன்பு மத்திய அரசு ஹைப்ரிட் கார்களுக்கு வரியை குறைப்பது குறித்து ஆலோசனை செய்து வந்தது, இதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் பட்ஜெட்டில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.

இதற்கு மத்தியில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு, கிரீன் எனர்ஜி வாகனங்களை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, ஸ்ட்ராங் ஹைப்ரிட் கார்களுக்கான பதிவுக் கட்டணத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேச அரசு வெளியிட்ட, ஜூலை மாத சுற்றறிக்கையின் மூலம், உடனடியாக அமலுக்கு வரும் வகையில், ஸ்ட்ராங் ஹைப்ரிட் வாகனங்களுக்கான பதிவுக் கட்டணத்தை 100 சதவீதம் ரத்து செய்யும் கொள்கையை செயல்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச அரசின் இந்த நடவடிக்கை முதன்மையாக மாருதி சுசூகி, டொயோட்டா மற்றும் ஹோண்டா ஆகிய 3 உற்பத்தியாளர்களின் 5 கார்களின் விலை மட்டுமே குறையும். இந்த அறிவிப்பின் மூலம் ஒரு ஸ்ட்ராங் ஹைப்ரிட் கார் விலை 3.5 லட்சம் ரூபாய் வரையில் குறையும் வாய்ப்பு கொண்டு உள்ளது.
மத்திய அரசு பட்ஜெட்டில் விற்பனை வரியை குறைக்கப்போவதாகக் கூறப்படுகிறது, வாகனங்களின் பதிவு கட்டணம் என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மத்திய அரசும், மாநில அரசும் ஓரே நேரத்தில் அறிவித்தால் ஹைப்ரிட் கார்கள் தான் இனி இந்தியாவின் எதிர்காலமாக இருக்கும்.
உத்தரபிரதேச அரசின் இந்த நடவடிக்கை முதன்மையாக மாருதி சுசூகி, டொயோட்டா மற்றும் ஹோண்டா ஆகிய 3 உற்பத்தியாளர்களின் 5 கார்களின் விலை மட்டுமே குறையும். இந்த அறிவிப்பின் மூலம் ஒரு ஸ்ட்ராங் ஹைப்ரிட் கார் விலை 3.5 லட்சம் ரூபாய் வரையில் குறையும் வாய்ப்பு கொண்டு உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் தற்போது ரூ.10 லட்சத்திற்கும் குறைவான வாகனங்களுக்கு 8 சதவீத சாலை வரியையும், ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட வாகனங்களுக்கு (எக்ஸ்-ஷோரும்) 10 சதவீத சாலை வரியையும் விதிக்கிறது.
இந்த நிலையில் தற்போது ஹைப்ரிட் வாகனங்களின் விற்பனை குறைவாக இருப்பதால், இந்த ரிஜிஸ்ட்ரேஷன் டாக்ஸ் ரத்து செய்யப்பட்டது மூலம் மாநில அரசின் நிதி நிலையைப் பெரிய அளவில் பாதிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி நிறுவனம் தற்போது கிராண்ட் விட்டாரா மற்றும் இன்விடோ ஹைப்ரிட் கார்களை விற்பனை செய்கிறது, அதே நேரத்தில் டொயோட்டா நிறுவனம் ஹைரைடர் மற்றும் இன்னோவா ஹை கிராஸ் கார்களை வழங்குகிறது. மேலும், ஹோண்டா நிறுவனம் சிட்டி ஹைப்ரிட் காரைக் கொண்டுள்ளது.
ஹைப்ரிட் வாகனங்களை பெட்ரோல் கார்களை விட சிறந்த மைலேஜ் வழங்கும், இதேபோல் உற்பத்தி முதல் பயன்பாட்டுக்கு வருவது முதல் கணக்கிடும் போதும் எலக்ட்ரிக் வாகனங்களை விட ஹைப்ரிட் வாகனங்கள் சுற்றுசூழல் பாதிப்பை குறைவாக ஏற்படுத்துகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications