எலக்ட்ரிக் வாகனங்களை விட ஹைப்ரீட் வாகனங்கள் பெஸ்டா..? உண்மை என்ன..?

ஹைப்ரீட் வாகனங்கள் என்பது வழக்கமான IC இன்ஜின் கொண்ட வாகனங்களை இயங்கும் அனுபவத்தையும் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் நன்மைகளையும் ஓருசேர அளிக்கும் திறன் கொண்டவை.

அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையின் காரணமாக எலக்ட்ரிக் வாகனங்களை மக்கள் விரும்பி வாங்கினர். ஆனால் எலக்ட்ரிக் வாகனங்கள் விலை மிக அதிகமாக இருப்பதால் அவர்கள் இப்போது ஹைப்ரீட் வாகனங்களை வாங்கத் தொடங்கி விட்டனர்.

எலக்ட்ரிக் வாகனங்களை விட ஹைப்ரீட் வாகனங்கள் பெஸ்டா..? உண்மை என்ன..?

இந்த ஹைப்ரீட் வாகனங்கள் விலை கட்டுப்படியாகும் அளவில் இருப்பதாலும் வழக்கமான வாகனங்களை விட திறன் வாயந்ததாக இருப்பதாலும் வாடிக்கையாளர்கள் இதை விரும்புகின்றனர்.

ஹைப்ரீட் வாகனங்கள் எரிபொருளால் இயங்கக் கூடிய இன்ஜினையும் ஒரு எலக்ட்ரிக் மோட்டாரையும் கொண்டுள்ளது.

இது வழக்கமான எரிபொருள் வாகனம் போல் அல்லாமல் எரிபொருளாலும் எலக்ட்ரிக் பவராலும் இயங்கக்கூடியவை.

வழக்கமான கார்களில் பிரேக்குகள் மூலம் ஏற்படும் வெப்பத்தினால் வாகனத்தின் செயல்திறன் குறையக்கூடும்.

ஆனால் உயர் மின்னழுத்த பேட்டரியிலிருந்து மின்சாரம் உருவாக்கப்படுவதால் எலக்ட்ரிக் வாகனங்களில் பிரேக்குகளைப் பயன்படுத்தும் போது அந்த வெப்பத்தை வாகனத்தின் பிரேக்கிங் சிஸ்டத்தை மேம்படுத்துகிறது. இது வழக்கமான கார்களுக்கும் எலக்ட்ரிக் கார்களுக்கும் உள்ள மிக முக்கியமான வித்தியாசமாகும்.

ஹைப்ரீட் வாகனங்களில் உள்ள எரிபொருள் இன்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் மூலம் அந்த வாகனத்தை இயக்கும் சக்தி உருவாகிறது. வாகனத்தில் உள்ள எலக்ட்ரிக் பேட்டரி பேக்கில் இருந்து மின் ஆற்றலை எலக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்துகிறது.

பிரேக்கிங் சிஸ்டம் மூலம் அந்த பேட்டரி சார்ஜ் செய்யப்படுகிறது.
எரிபொருள் இன்ஜின் காரில் உள்ள ஜெனரேட்டரும் மின் ஆற்றலைத் தருகிறது. இப்படி இருவிதத்திலும் வாகனத்துக்குத் தேவையான ஆற்றல் கிடைப்பதால் இந்த ஹைப்ரீட் வாகனங்கள் செலவு குறைவாக உள்ளது. எலக்ட்ரிக் மோட்டாரில் உற்பத்தியாகும் உபரி ஆற்றல் எரிபொருள் இன்ஜினின் திறனை அதிகரிக்கிறது.

கார்களில் உள்ள விளக்குகள் உள்ளிட்ட மின்சாதனங்களுக்குத் தேவையான சக்தியை எலக்ட்ரிக் பேட்டரி பேக் தருகிறது.இதனால் கார் உரிமையாளர்களுக்கு எரிபொருள் செலவு கணிசமாகக் குறைகிறது.

இதுமட்டுமல்லாமல் ஹைப்ரீட் கார்கள் குறைந்த வேகத்தில் செல்லும்போது முதலில் எலக்ட்ரிக் மோட்டாரை இயக்குகிறது.

இதனால் ஹைப்ரீட் வாகனங்கள் எரிபொருளை மிச்சப்படுத்துகின்றன. உயரமான பகுதிகளுக்குச் செல்லும்போது அல்லது வேகமாகச் செல்லும்போது எரிபொருள் இன்ஜின் இயக்கப்படுகிறது.

வாகனங்கள் நிற்கும் சமயத்திலும் இன்ஜினை ஆன் செய்யும்போது அல்லது ஆஃப் செய்யும்போது அதன் மின் ஆற்றல் மிச்சம் செய்யப்படுகிறது. வாகனத்தை ஓட்ட நினைத்தால் ஆக்ஸிலேட்டர் பெடலை டிரைவர் அழுத்தினால் போதும் தானாக ஸ்டார்ட் ஆகிவிடும்.

வழக்கமான கார்கள் வெளியிடும் நச்சுப் புகையைவிட குறைந்த அளவே ஹைப்ரீட் வாகனங்கள் வெளியிடுகின்றன. இதனால் சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைகிறது. ஹைப்ரீட் வாகனங்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

சீரிஸ் ஹைப்ரீட் (Series Hybrid): இதை ரேஞ்சு எக்ஸ்டென்டர்கள் என்று அழைக்கின்றனர். எரிபொருள் இன்ஜின் வாகனத்துக்குத் தேவையான மின் ஆற்றலைத் தருகிறது. அதிலுள்ள ஜெனரேட்டர் மூலம் சக்கரங்கள் இயங்குவதற்கான ஆற்றல் கிடைக்கிறது.

பேரலல் ஹைப்ரீட் (Parallel Hybrid): இதில் எலக்ட்ரிக் மோட்டாரும் எரிபொருள் இன்ஜினும் ஒரேசமயத்தில் செயல்பட்டு காரை இயக்குகிறது. பிரேக்கிங் மூலம் பேட்டரிக்கு மின் ஆற்றல் கிடைக்கிறது.

பிளக்-இன்-ஹைப்ரீட் (Plug-In Hybrids): இந்த வகை கார்கள் மேலே உள்ள இரண்டிலும் மாறுபட்டதாகும். இதில் பெரிய பேட்டரி பேக் இருக்கும். இந்த பேட்டரியை வெளியில் இருந்து சார்ஜ் செய்ய வேண்டும். இதில் முழுக்க முழுக்க நச்சுப்புகை வெளியாகாது. இதனால் வாடிக்கையாளர்கள் இந்த வகை கார்களை தேர்ந்தெடுக்கின்றனர்.

மைல்டு ஹைப்ரீட் (Mild Hybrids):
இந்த வாகனங்களில் குறைந்த திறன் கொண்ட எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த மோட்டார் எரிபொருள் இன்ஜினுக்குத் தேவையான சமயத்தில் மின் ஆற்றலைத்தரும்.
ஹைப்ரீட் கார்களின் பேட்டரியின் விலை மிக அதிகம் என்பதால் அதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். உயர் மின் திறன் பேட்டரியில் நீங்கள் கவனிக்க வேண்டியது அதன் ஃபேன் பில்டர்.

ஏனென்றால் இது வெப்பம் சரியான முறையில் வெளியேறுவதை உறுதிசெய்கிறது. இதனால் பேட்டரி செல்கள் செயல் இழப்பதைத் தடுக்கிறது.

ஹைப்ரீட் கார்கள் சுற்றுச்சூழலுக்கு நன்மைகளை விளைவிக்கிறது. இதன் இன்ஜின் கச்சிதமாகவும் திறன் வாய்ந்தவையாகவும் உள்ளன.
பிரேக்கிங் மூலம் காருக்குத் தேவையான மின் ஆற்றல் கிடைக்கிறது.
இவையெல்லாம் ஹைப்ரீட் கார்களில் உள்ள நன்மைகள்.

அதேசமயத்தில் இந்தக் கார்களின் ஆக்ஸிலேட்டர் திறன் வழக்கமான கார்களைக் காட்டிலும் குறைவாக இருக்கும். என்னதான் கார் நிறுவனங்கள் விலையைக் குறைத்தாலும் இவை மற்ற கார்களைக் காட்டிலும் விலை உயர்ந்ததாகவே உள்ளன.

ஹைப்ரீட் கார்களின் இன்ஜின் பாகங்களுக்கு அதிக பராமரிப்பு தேவைப்படுவதால் செலவும் அதிகரிக்கும். இந்திய சந்தையில் உள்ள ஹைப்ரீட் கார்கள் விவரம்-

1. டோயோட்டா Innova Hycross INR 18L- 31L

2. டோயோட்டா Hyryder INR 10L- 20L

3. மாருதி சுசூகி Vitara INR 10L- 20L

4. மாருதி சுசூகி Invicto INR 24L -29 L

5. டோயோட்டா Vellfire INR 1.2cr - 1.3cr

6. ஹோண்டா City Hybrid, INR 18L - 21L

Story Written by: I. Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+