இந்தியாவில் கொரோனாவின் வருகைக்கு பிறகு ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற கூறி வந்தன. இதற்கிடையில் 19 மாதங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் படிப்படியாக ஊழியர்கள் பணிக்கு திரும்ப கூறி வருகின்றன.
எனினும் வீட்டில் இருந்து பணிபுரிதல் என்பது ஐடி நிறுவனங்களுக்கு பல வகையிலும் நன்மை அளிப்பதாக உள்ள நிலையில், பல நிறுவனங்களும் ஊழியர்கள் பகுதி நேரம் வீட்டிலும், பகுதி நேரம் அலுவலகத்திலும் இருந்து பணிபுரியும் ஹைப்ரிட் மாடலை அமல்படுத்த திட்டமிட்டு வருகின்றன.
சில நிறுவனங்கள் இதனை தற்காலிகமாக என இல்லாமல், எப்போதும் ஊழியர்கள் இந்த முறையில் பணியாற்றலாம் என கூறி வருகின்றன.
நெகிழ்வுத் தன்மையை அளிக்கும்
இதன் மூலம் ஊழியர்களுக்கும் நெகிழ்வுதன்மை கிடைக்கும். செலவினங்களும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் இந்த ஹைப்ரிட் கலாச்சாரம் ஐடி துறையில் பரவத் தொடங்கியுள்ளது. தற்போது நாட்டில் கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், பள்ளிகள், கல்லூரிகள் என தொடங்கியுள்ளன. இந்த நிலையில் தான் ஐடி நிறுவனங்களும், பல்வேறு அறிவிப்புகளுடன் நிறுவனங்களை அலுவலகத்திற்கு திரும்ப வர கூறி வருகின்றன.
தடுப்பூசி போட்டுக் கொண்ட ஊழியர்கள்
நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் டிசம்பர் 15 முதல் கணிசமான ஊழியர்களை, அலுவலகத்திற்கு வர அழைப்பு விடுத்திருந்தது. இது குறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் மனிதவள அதிகாரி மிலிந்த் லக்காட், 70% டிசிஎஸ் ஊழியர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதில் 95% மேற்பட்டோர் முதல் கட்ட தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதற்கிடையில் இந்த ஆண்டின் இறுதிக்குள் ஊழியர்கள் படிப்படியாக அலுவலகம் வருவார்கள் என கூறியிருந்தார்.
காக்ணிசன்ட் நிலவரம் என்ன?
மற்றொரு ஐடி ஜாம்பவான் ஆன காக்ணிசன்ட் நிறுவனம், அடுத்த காலண்டர் ஆண்டு முதல் ஊழியர்களை படிப்படியாக அலுவலகத்திற்கு திரும்ப வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து நிறுவனம் ஊழியர்களின் கருத்துகளை கேட்டு, சமீபத்தில் ஒரு ஆய்வினையும் நடத்தியதாக தெரிவித்துள்ளது.
ஹைப்ரிட் மாடல் பணி
காக்ணிசன்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பிரையன் ஹம்பரீஸ், ஊழியர்கள் அலுவகத்திற்கு திரும்புவது குறித்து ஊழியர்களுக்கு மெயில் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்காலத்தில் ஹைப்ரிட் மாடல் பணி இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
நாஸ்காம் – Indeed-ன் கருத்து
19 மாதங்களாக ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருவதால், அலுவலகத்திற்கு திரும்புவதில் ஆர்வமாக உள்ளனர். நாஸ்காம் மற்றும் Indeed-ன் சமீபத்திய அறிக்கை ஜனவரி 2022க்குள் ஐடி பணியாளர்களில் பாதிபேர் வாரத்தில் மூன்று முறையாவது அலுவலகத்திற்கு வருவார்கள் என்று கூறியிருந்தன.
முக்கிய ஊழியர்கள் வரவேண்டும்
அலுவலகத்திற்கு திரும்ப வருவதில் ஜீனியர் மற்றும் மூத்த அதிகாரிகள் மிகுந்த ஆர்வம் காட்டுவதாகவும் கூறியுள்ளன. குறிப்பாக ஐடி துறையில் முக்கிய துறைகளான சைபர் செக்யூரிட்டி, தரவு பாதுகாப்பு மற்றும் மிக கடினமான திட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் ஊழியர்களை அலுவலகத்திற்கு திரும்ப கூறி வருகின்றன என நாஸ்காம் தெரிவித்துள்ளது.
இன்ஃபோசிஸ் நிலவரம் என்ன?
இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது இரண்டாவது காலாண்டு அறிக்கையினை வெளியிட்ட போது, அதன் தலைமை செயல் அதிகாரி பிரவின் ராவ், இந்தியாவில் உள்ள 86% ஊழியர்கள் முதல் கட்ட தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறியது. மேலும் நாங்கள் தற்போது ஹைப்ரிட் மாடல் பணியினை அமல்படுத்த தயாராகி வருகின்றோம்.
More From GoodReturns

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

TCS முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்!12% எகிறிய லாபம்! 30 காலாண்டுகளில் இல்லாத தரமான சம்பவம்!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?



Click it and Unblock the Notifications