உயிரை கொடுத்து உழைச்சாலும்.. தூக்கனும்னு முடிவு பண்ணிட்டா.. இந்திய நிறுவனங்களின் உண்மை முகம்..!

ஐதராபாத்தை சேர்ந்த ஒரு தொழில்நுட்பத் துறை ஊழியர் திடீரென தான் பணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்த ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நபர் அண்மையில் விடுப்பு எடுத்து வெளியூருக்கு சென்றிருந்தாராம் . அப்போது அவருக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறது . அதில் எந்த ஒரு முன் அறிவிப்பும் அல்லது எந்தவித விவாதமும் இல்லாமல் பணியிலிருந்து நீக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தது.

உயிரை கொடுத்து உழைச்சாலும்.. தூக்கனும்னு முடிவு பண்ணிட்டா.. இந்திய நிறுவனங்களின் உண்மை முகம்..!

இதனால் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்த அவர் உடனடியாக தனது மேலாளரை தொடர்பு கொண்டார். அதற்கு இந்த பணி நீக்கம் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது தெரிய வந்ததாம்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு நிறுவனத்தின் கிளைண்டுகாக ஒரு பிரசன்டேஷன் மேற்கொள்ளப்பட்டதாம். அப்போது தொழில் நுட்ப சிக்கல் காரணமாக டெமோ காட்டுவதில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கின்றன. உடனடியாக இது தொடர்பாக இன்டெர்னல் குழுவிடம் தெரிவிக்கப்பட்டதாம். ஆனால் இதனை அவருடைய தவறு என தவறாக புரிந்து கொண்ட நிறுவன தலைமை திடீரென அவரை பணியிலிருந்து நீக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

நிறுவனம் தனது தரப்பு விளக்கங்களை கூறாமலேயே இப்படி பணிநீக்கம் செய்து விட்டது என அந்த நபர் புலம்பி சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் செயல்படும் பல நிறுவனங்களின் உண்மை முகம் இது தான் என கூறியுள்ளார்.

பல மாதங்களாக தான் ஓவர்டைம் பார்த்து வேலை செய்தேன் ஆனால் நிறுவனத்திற்கு அதெல்லாம் ஒன்றுமே இல்லை என கூறியுள்ளார். அவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நிறுவனங்களும் இப்படித்தான் ஊழியர்கள் எத்தகைய பங்களிப்பை தந்திருக்கிறார்கள் என்பதை பார்க்காமல் திடீரென பணி நீக்கம் செய்து விடுகின்றனர் என பலரும் எதிர்வினையாற்றியுள்ளனர்.

ஒரு ஊழியரை பணி நீக்கம் செய்வதற்கு முன்னர் அவர் தரப்பு விளக்கங்களை கேட்க வேண்டும் என்ற ஒரு குறைந்தபட்ச நியாயம் கூட இல்லாமல் தான் இந்தியாவை சேர்ந்த பல நிறுவனங்களும் தற்போது செயல்படுகின்றன என ஒரு பயனர் கடுமையாக சாடியுள்ளார்.

பொதுவாக இந்தியாவில் இரு நாம் வேலை செய்யும் நிறுவனத்தை நமது குடும்பமாக கருதி வேலை செய்ய வேண்டும் எனக் கூறுவார்கள், ஆனால் அந்த நிறுவனமும் அந்த நிறுவனத் தலைமையும் நம்மை ஒருபோதும் அவர்களில் ஒருவராக எண்ணுவது கிடையாது என ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.

நாம் எவ்வளவுதான் நம்முடைய நேரத்தையும் கடின உழைப்பையும் தந்தாலும் ஒரு சூழல் என வரும்போது அந்த நிறுவனம் முதலில் நம்மை தான் பலிக்கடா ஆக்குகிறது என ஒருவர் குறிப்பிட்டுள்ளார். பலரும் இதுபோன்ற சூழல்களை தாங்கள் எப்படி கடந்து வந்தோம் என்ற அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். சிலர் உங்களுடைய வேலையை காதலியுங்கள் நிறுவனத்தை அல்ல என அறிவுரை வழங்கியுள்ளனர்.

Story Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+