சர்வதேச நிறுவனங்களுக்கு தற்போது இந்தியா முக்கிய பிஸ்னஸ் ஸ்பாட் ஆக மாறியுள்ளது, டெக் சேவை முதல் ஏரோஸ்பேஸ் வரையில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் இந்தியாவில் நேரடியாக அலுவலகத்தை துவங்க தயாராகியுள்ளன. வெளிநாட்டு நிறுவனங்களின் இந்திய கிளைகள் GCC என அழைக்கப்படுகிறது, இதற்கு முழுமையான பொருள் Global Capability Centres.
பொதுவாக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தங்களுக்கு தேவையான சேவைகளை குறைந்த செலவிலும், திறன்பட செய்து முடிக்க வேண்டுமாயின் இந்திய நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இத்திட்டங்களை வழங்குவது வழக்கம். இந்த கட்டமைப்பில் தான் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் போன்றவை இயங்குகிறது.

இந்தியாவில் தற்போது போதுமான திறன்வாய்ந்த ஊழியர்கள் இருப்பதை உணர்ந்த வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் சொந்தமாக அலுவலகம் வைத்து நிர்வாகம் செய்ய கூடிய அளவில் சூழ்நிலை உருவாகியுள்ளது, இதேபோல் செலவுகளை குறைக்க வேண்டும் என்ற கட்டாயம் அதிகரித்த நிலையில் அடுத்தடுத்து இந்தியாவில் கிளை அலுவலகங்களை சர்வதேச நிறுவனங்கள் உருவாக்கி வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் GCC குறித்த ஆய்வை நாஸ்காம் மற்றும் Zinnov இணைந்து செய்ததில் முக்கியமான விஷயம் தெரிந்துள்ளது, 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் டெக் நகரமான கருதப்படும் பெங்களூர்-ஐ ஹைதராபாத் புதிய GCC-களை ஈர்ப்பதில் சமன் செய்துள்ளது. 2023 ஆம் நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் தலா 11 ஜிசிசி-களை பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த எண்ணிக்கையில் GCC-களின் புதிய அலுவலகம் துவங்குவது மற்றும் விரிவாக்கம் செய்வதும் அடங்கும். மேலும் இந்த GCC-கள் இன்ஜினியரிங் ஆராய்ச்சி, ஐடி மற்றும் BPM சார்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் நிதியாண்டின் தகவல் படி இந்தியாவில் சுமார் 1580 GCC-கள் உள்ளது, இதில் சுமார் 16.6 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். தற்போது இந்தியாவில் துவங்கப்படும் ஜிசிசி-கள் அனைத்தும் முக்கியமான தொழில்நுட்பத்தில் திறன்வாய்ந்த ஊழியர்களை தேடி வருகிறார்கள்.
அந்த வகையில், கிளவுட், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், நேச்சுரல் லேங்வேஜ் பாரிசசிங், சைபர் செக்யூரிட்டி, லோ கோட் / நோ கோட் (LC/NC), அட்வான்ஸ் அனலிட்டிக்ஸ், பிளாக்செயின், இன்டர்நெட் ஆப் திங்ஸ் (IoT) போன்றவற்றில் அதிகப்படியான ஊழியர்களுக்கு டிமாண்ட் உள்ளது.


Click it and Unblock the Notifications