இந்தியாவின் முக்கிய நகரங்களான பெங்களூரு மற்றும் ஹைதராபாத் மத்தியில் கடந்த சில காலாண்டுகளாக யார் ஐடி தலைநகர் என்ற பெயரைப் பெறுவது என்பதில் பெரும் போட்டியே உருவாகியுள்ளது. இந்தப் போட்டியை விடவும் முக்கியமான பிரச்சனை இருந்து நகரங்களிலும் உருவாகியுள்ளது.
பெங்களூரு மற்றும் ஹைதராபாத் இரண்டும் வழக்கத்தை விட வெப்பமான சூழ்நிலையை அனுபவித்து வருகின்றனர், குளுகுளுவென இருக்கும் பெங்களூரில் கூட இப்போதெல்லாம் வியர்க்கத் துவங்கியுள்ளது. இதுகுறித்து வானிலை வல்லுநர்கள் கூறுகையில் எல் நினோவின் விளைவுகள் தான் நிலைக்கான காரணம் எனக் கூறப்படுகிறது.

தெலுங்கானா: ஐந்தாண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் குளிர் அலைகள் இல்லாத காரணத்தால் தெலுங்கானா கோடையின் தாக்கம் ஆரம்பத்திலேயே எதிர்கொள்கிறது.
பொதுவாக ஹைதராபாத்தில் குளிர்கால இறுதிக்கட்டம் பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் நடக்கும் ஆனால் இந்த ஆண்டு முன்பே தொடங்கிவிட்டது. இது இந்தியாவில் நிகழும் பருவநிலை மாற்றத்தின் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
இதேபோல் பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து, பெங்களூரில் சராசரி வெப்பநிலையை விட அதிகமாக வெப்பநிலை காணப்பட்டது. இது பெங்களூர் மக்களுக்குப் பெரும் பிரச்சனையாகவும், அசௌகரியத்தை ஏற்படுத்து பெங்களூர் மக்களைப் புலம்ப வைக்கிறது.
குறிப்பாக மதிய நேரங்களில் வெப்ப நிலை அதிகமாக உள்ளது எனப் பெங்களூர் மக்கள் புலம்பி வருகின்றனர். பிப்ரவரியில் இது வழக்கத்திற்கு மாறாக வெப்பமாகத் தோன்றினாலும், இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) பெங்களூரு அலுவலகம் இதுக்குறித்துக் கூறுகையில் நகரின் 30 ஆண்டுச் சராசரி அளவுகளில் இது நார்மல் வரம்பிற்குள் இருப்பதாகக் கூறுகிறது.
ஐஎம்டி பெங்களூரு அலுவலகத்தில் இருக்கும் விஞ்ஞானியான ஏ பிரசாத் பருவநிலை மாற்றம் குறித்துப் பேசுகையில் 1-2 டிகிரி செல்சியஸ் அளவிலான சிறிய மாற்றங்கள் அசாதாரணமாகக் கருதப்படுவதில்லை, சமீபத்திய வெப்பத்திற்கு வலுவான எல் நினோ விளைவு மற்றும் புவி வெப்பமடைதல் காரணம் எனக் கூறியுள்ளார்.
வரவிருக்கும் கோடை காலம் கடந்த ஆண்டை விடவும் கடுமையாக இருக்கும் என்றும், மார்ச் மாத தொடக்கத்தில் கடலோர கர்நாடக பகுதிகளில் வெப்ப அலை அதவாது HeatWave உருவாகச் சாத்தியம் இருப்பதாகவும் பிரசாத் எச்சரித்துள்ளார்.
பெங்களூரை போலவே தெலுங்கானாவும் அதிகரித்து வரும் வெப்பநிலை தாக்கத்தை உணர்ந்து வருகிறது. அதிகபட்ச வெப்பநிலை ஏற்கனவே பிப்ரவரியில் ஒரு வாரத்தில் 35 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது மறக்க முடியாது.
இந்த ஆண்டுக் கோடைக்காலம் இந்தியா முழுவதும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பம் அதிகமாவது மூலம் வறட்சி அதிகமாகவும், இதனால் நாட்டின் விவசாய உற்பத்தி பாதிக்கப்படவும் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications