ஈரான் போர் காரணமாக சரக்கு போக்குவரத்து தடைபட்டு இந்தியாவில் எல்பிஜி தட்டுப்பாடு நீடிக்கிறது. இந்த சூழலில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடமோ என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது. நாட்டில் போதுமான அளவு கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு இருக்கிறது பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என அரசு தொடர்ச்சியாக கூறி வருகிறது.
இந்திய எண்ணெய் விற்பனை நிறுவனங்களும் போதிய இருப்பு இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளன. இருந்தாலும் அவ்வப்போது திடீரென மக்களிடையே பதற்றம் ஏற்பட்டு பெட்ரோல் பங்க்குகளில் குவிகின்றனர். நேற்று மற்றும் நேற்று முன்தினம் தெலுங்கானா, குஜராத் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் எரிபொருள் தட்டுப்பாடு என தகவல் பரவியதால் ஏராளமான வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையங்களில் குவிந்தனர். இதனால் ஒரு விதமான பதட்டமான சூழல் ஏற்பட்டது.

இந்த சூழலில் பெட்ரோல் பங்குகளில் பதற்றத்தோடு வாகன ஓட்டிகள் குவிவதை அடுத்து தெலுங்கானா மாநில அரசு ஒரு முக்கியமான முடிவினை அறிவித்து இருக்கிறது. அதாவது பொதுமக்கள் தனியார் வாகனங்களை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்த்து பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு தெலுங்கானா மாநிலத்தின் சாலை போக்குவரத்து கழகம் ஹைதராபாத் நகரில் இயங்கக்கூடிய ஏசி மற்றும் மெட்ரோ டீலக்ஸ் பேருந்துகளின் கட்டணத்தை 30 சதவீதம் வரை குறைத்திருக்கிறது.
பேருந்து கட்டணங்கள் குறைந்து இருப்பதால் மக்கள் தனிப்பட்ட முறையில் ஒரு நபருக்காக வாகனங்களை பயன்படுத்துவது நிறுத்துவார்கள், பெட்ரோல் டீசல் வாங்குவதற்காக பங்குகளில் குவிவது உள்ளிட்டவை தடுக்கப்படும் என தெலுங்கானா மாநில போக்குவரத்து கழகம் கூறுகிறது.

பொதுமக்கள் தேவை இல்லாமல் பெட்ரோல் நிலையங்களில் சென்று பதற்றத்தோடு பெட்ரோல் வாங்குவதை விடுத்து பாதுகாப்பான சவுகரியமான அரசு பேருந்துகளை பயன்படுத்துங்கள் என தெலுங்கானா மாநில அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. கட்டணங்கள் குறைந்து இருப்பதால் ஏராளமான மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த முன் வருவார்கள் என்றும் இது எரிபொருள் சேமிப்புக்கு வழிவகுப்பு என்றும் தெலுங்கானா மாநில அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் தனிப்பட்ட வாகனங்களை விடுத்து பொது போக்குவரத்தை பயன்படுத்த முன் வருவதால் போக்குவரத்து நெரிசல் குறையும் , சுற்றுச்சூழல் மாசடைவது குறையும் , இது போன்ற ஒரு சவாலான சூழலில் ஒட்டுமொத்த நாட்டிற்கே பெரிய உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இதற்கிடையே ஹைதராபாத் நகரில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி தட்டுப்பாடு இல்லை என்றும் பொதுமக்களுக்கு 60 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு இருக்கிறது எனவே பதற்றம் அடைய வேண்டாம் என்றும் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொது போக்குவரத்துக்கு தேவையான பெட்ரோல் டீசலும் கையிருப்பில் உள்ளது என கூறி இருக்கிறது.


Click it and Unblock the Notifications