திருமண நேரத்தில் திடீரென தொலைந்த மாலை... மணமகளை அசத்திய மாப்பிள்ளையின் செயல்!

திருமண நேரத்தில் ஏதாவது ஒரு பொருள் தொலைந்து போனால் திருமண மண்டபமே பரபரப்பு அடையும் என்பதும் குறிப்பாக திருமண வீட்டார் எந்த அளவுக்கு பதட்டமாக இருப்பார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே.

அப்படி ஒரு நிகழ்வு ஐதராபாத்தில் நடந்த ஒரு திருமணத்தில் நடந்த போது மணமகன் செய்த சமயோசிதமான செயல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருமண நேரத்தில் திடீரென மணமகள் அணியவேண்டிய மாலை தொலைந்து போனதை அடுத்து மணமகன் உடனடியாக அமேசானில் ஆர்டர் செய்து மாலையை வரவழைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் உள்ள காட்சிகள் போல் நடந்த இந்த நிகழ்வு ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இடம் பெற்றுள்ளன.

கூகுள் மணமகன் - அமேசான் மணமகள்

கூகுள் மணமகன் - அமேசான் மணமகள்

கூகுள் நிறுவனத்தில் விளம்பர மேலாளர் பணி செய்யும் கிருஷ்ணா வர்னனி என்பவர் அமேசான் நிறுவனத்தில் வேலை செய்யும் ஃபகுனி கன்னா என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்தார்.

 தொலைந்த மாலை

தொலைந்த மாலை

இந்த நிலையில் திருமண நாளன்று அனைத்து ஏற்பாடுகளும் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த போது திடீரென மணமகள் அணியவேண்டிய மாலை தொலைந்து விட்டதால் திருமண வீட்டார் பரபரப்புடன் அதை தேடி கொண்டிருந்தனர்.

அமேசானில் ஆர்டர்

அமேசானில் ஆர்டர்

உடனடியாக ஐதராபாத் மாப்பிள்ளை கிருஷ்ணா வர்னனி அமேசான் மூலம் இன்னொரு மாலையை ஆர்டர் செய்து உடனே வரவழைத்து மணமகளையும் அவருடைய உறவினர்களையும் நிம்மதி அடையச் செய்தார். ஆனால் அதன்பின் தான் அவர் வேண்டுமென்றே மாலையை ஒளித்து வைத்து அமேசான் நிறுவனத்தின் விளம்பரத்திற்காக அதாவது தனது மனைவி வேலை செய்யும் நிறுவனத்தின் விளம்பரத்திற்காக மாலையை ஆர்டர் செய்துள்ளார் என்பது தெரியவந்தது. தான் ஒரு பக்கா விளம்பர மேலாளர் என்பதை திருமண தினத்திலும் அவர் நிரூபித்துள்ளார்.

எதிர்மறை கருத்துக்கள்

எதிர்மறை கருத்துக்கள்

இதுகுறித்து கிருஷ்ணா தனது லிங்க்டுஇன் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் ஏராளமான எதிர்மறை கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த பதிவுக்கு சுமார் 5000 எதிர்வினைகள் பதிவானதாகவும், பலர் இந்த நாடக விளம்பரத்திற்கு கண்டனம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

பாராட்டு

பாராட்டு

இருப்பினும் ஒரு சிலர் மணமகனின் சமயோசித செயலையும், புத்திசாலித்தனத்தையும், தன்னுடைய திருமண தினத்தில் அமேசான் நிறுவனத்தின் ஃபாஸ்ட் டெலிவரியை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற யுக்தியையும் பாராட்டி வருகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+