சம்பளம் தரலைன்னா இப்படியா பண்றது.. பாஸ்க்கு ஸ்கெட்ச் போட்ட ஊழியர்கள்..!

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட கிக்லீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ரவிச்சந்திர ரெட்டி என்பவரை, அங்கு வேலை பார்த்த ஊழியர்களே கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடந்து 4 நாட்களுக்குப் பிறகு, ஜூபிலி ஹில்ஸ் காவல்துறை குற்றவாளிகள் 8 பேரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 1 ஆலோசகர், 2 IT துறை வல்லுநர்கள், மற்றும் 5 முன்னாள் ஊழியர்கள் அடங்குவர்.

ரவிச்சந்திர ரெட்டி என்பவர் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். அங்குள்ள ஊழியர்களுக்கு சம்பளம் தராததால் கோபமடைந்த ஊழியர்கள், ரவிச்சந்திர ரெட்டியை இரவோடு இரவாக கடத்தி உள்ளனர்.

 சம்பளம் தரலைன்னா இப்படியா பண்றது.. பாஸ்க்கு ஸ்கெட்ச் போட்ட ஊழியர்கள்..!

இந்த சம்பவம் ஜூலை 10-ஆம் தேதி அன்று நடந்துள்ளது.இது குறித்து ரவிச்சந்திர ரெட்டியின் தாய் காவல்துறைக்கு புகார் அளித்தார். அதில், ஒரு குழுவினர் அவர்களது வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்து தாக்கியதாகவும், ரவிச்சந்திர ரெட்டியைக் கடத்திச் சென்றதாகவும் தெரிவித்தார்.

மேலும், வீட்டிலிருந்து 84 லேப்டாப்புகள் திருட்டு போனதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த புகாரின்பேரில் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள், ஸ்ரீசைலம் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் ரவிச்சந்திர ரெட்டியை கண்டுபிடித்து மீட்டனர்.

கிக்லீஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தை ரவிச்சந்திர ரெட்டி நிறுவியுள்ளார். நிதிச் சிக்கல்கள் காரணமாக, பல்வேறு ஆலோசனை நிறுவனங்கள் மூலம் பணியமர்த்தப்பட்ட 1200 ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியவில்லை. இதனால், ஊழியர்கள் மற்றும் ஆலோசகர்கள் மத்தியில் கடும் கோபம் ஏற்பட்டது.

இதற்கிடையில், கிக்லீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பல முன்னாள் ஊழியர்கள், சம்பள பாக்கி தராமல் ஏமாற்றியதாகக் கூறி ரவிச்சந்திர ரெட்டி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 சம்பளம் தரலைன்னா இப்படியா பண்றது.. பாஸ்க்கு ஸ்கெட்ச் போட்ட ஊழியர்கள்..!

இந்த ஊழியர்கள் ஆலோசனை நிறுவனங்கள் மூலம் பணியமர்த்தப்பட்டதாகவும், 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை ஆலோசனை நிறுவனங்களுக்கு கொடுத்ததாகவும் தெரிவித்தனர். மேலும், எந்தவித காரணமும் இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்டு, சம்பள பாக்கியையும் வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 8 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ரவிச்சந்திர ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 84 மடிக்கணினிகள், 4 கார்கள், 5 தொலைபேசிகள் மற்றும் 3 பாஸ்போர்ட்டுகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்த 2 கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு இடையேயான சிக்கல்கள் குறித்து எடுத்துக்காட்டுகிறது. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நீதி கிடைப்பதுடன், நிறுவனங்கள் தங்களது நிதியை திறம்பட பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தப் பதிவு எடுத்துக்காட்டுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+