இந்தியாவில் ஆன்லைன் மோசடி தொடர்பான வழக்குகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. கடந்த சில மாதங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இணைய மோசடிக்கு இரையாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோசடிகளில் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களில் வயதானவர்களும் உள்ளனர். டிஜிட்டல் தளங்களை பற்றி நன்கு அறிந்திடாத வயதானவர்களும் இணைய மோசடிக்கு ஆளாவது கவலை அளிக்கும் விஷயமாக மாறி இருக்கிறது. அதற்கு உதாரணமாக ஹைதராபாத்தைச் சேர்ந்த 63 வயதான ஒருவர் வாட்ஸ் அப் குரூப் மூலம் மோசடிக்காரர்களின் வலையில் விழுந்து 50 லட்ச ரூபாயை இழந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்த முதியவர் வாட்ஸ் அப்பில் "Stock Discussion Group" என்ற குரூப்பில் இணைந்துள்ளார். அந்தக் குழுவின் அட்மின் எனக் கூறிக்கொண்டு குணால் சிங் என்ற நபர் பாதிக்கப்பட்டவரிடம் பேசி இருக்கிறார். அது மட்டும் இன்றி குணால் சிங் தான் ஒரு புகழ்பெற்ற நிதி ஆலோசகர் என்றும் பாதிக்கப்பட்டவரிடம் தன்னை போலியாக அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இவருடைய வழிகாட்டுதலின் கீழ் இதற்கு முன்னர் பல வாடிக்கையாளர்களும் அதிக வருமானம் பெற்றதாக கூறி 2022-ஆம் ஆண்டில் தான் எடுத்த பங்குச்சந்தை தொடர்பான வகுப்புகள் மிகப்பெரிய வெற்றி கண்டதாகவும் பாதிக்கப்பட்டவரை நம்ப வைத்துள்ளார். மேலும் முதலீடுகளுக்கு 500 சதவீதம் வரை வருமானம் ஈட்டி தந்ததாகவும் கூறி இருக்கிறார். குணால் சிங் கூறியதை கேட்டு மனமாற்றம் அடைந்த அந்த முதியவரும் பங்கு வர்த்தகம் மட்டும் முதலீட்டுக்கான உத்திகளை கற்றுக் கொள்ளும் நம்பிக்கையில் ஆன்லைன் வகுப்புகளில் சேர முடிவு செய்துள்ளார்.
வாட்ஸ் அப் குரூப்பில் பங்குச்சந்தை தொடர்பான வகுப்புகளை நடத்துவதற்கான லிங்க் பகிரப்பட்டுள்ளது. மோசடி கும்பல் சந்தை போக்குகள் மற்றும் குறிப்பிட்ட சில பங்குகளின் விவரங்கள் குறித்தும் கூறியுள்ளனர். அப்படியே பாதிக்கப்பட்டவர்களை திசை திருப்பி "Skyrim Capital" என்ற ஆன்லைன் தளத்தில் முதலீடு செய்யும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட அந்த முதியவரை சிறு தொகையை முதலீடு செய்ய சொல்லியிருக்கிறார். அந்த முதலீட்டுக்கு நம்பிக்கைக்குரிய லாபம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அந்த முதியவருக்கு நம்பிக்கையை அதிகரித்து மோசடி வளையில் சிக்க வைத்துள்ளனர். அதன் பிறகு மோசடி செய்தவர் அதிக லாபத்திற்கு பெரிய முதலீடுகளை செய்யும்படி அந்த முதியவரிடம் கூறியுள்ளார். இறுதியில் பாதிக்கப்பட்டவரை ரூ.50 லட்சம் முதலீடு செய்ய தூண்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த முதியவர் இந்த பணத்தை பல வங்கிக் கணக்கிற்கு மாற்றியதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு முதியவர் தனது லாபத்தை திரும்ப பெற முயன்ற போது, மோசடி செய்தவர்கள் பணத்தை திரும்ப வழங்க மறுத்ததால். அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டு இருப்பதை உணர்ந்துள்ளார். காவல்துறையினரின் கூற்றுப்படி இது போன்ற மோசடிகள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக மெசேஜிங் தளங்கள் மூலம் மோசடி செய்பவர்கள் ஏராளமான மக்களை ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அது மட்டுமின்றி 1930 என்ற தேசிய சைபர் கிரைம் ஹெல்ப்லைன் மூலமாகவோ அல்லது cybercrime.gov.in என்ற இணையதள முகவரி மூலமாகவோ சந்தேகத்திற்கிடமான ஆன்லைன் தளங்கள் மற்றும் நிதி செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆன்லைன் மோசடிகள் அதிகமாக இருப்பதால் விழிப்புடன் இருப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக ஆன்லைன் தளங்களை பற்றி அறிமுகம் இல்லாத வயதானவர்கள் இது குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
More From GoodReturns

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!



Click it and Unblock the Notifications